உருளைக்கிழங்கு வறுவலை இப்படி கூட ஃபிரை பண்ணலாமே. ஒரு வாட்டி இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. இந்த டேஸ்ட் நாக்கிலேயே ஒட்டிக்கொள்ளும்.

potato-fry
- Advertisement -

ரசம் சாதத்திற்கு தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஒரு அசத்தலான உருளைக்கிழங்கு ஃப்ரை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். எத்தனையோ வகையாகளில் உருளைக்கிழங்கை வைத்து ரெசிபிகளை செய்யலாம். அதில் இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபியும் கூட. சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.

potato

முதலில் 1/4 கிலோ அளவு உருளைக்கிழங்குகளை எடுத்து குக்கரில் போட்டு ஒரு விசில் வைத்து, முக்கால் பாகம் வரை வேக வைத்து தோல் உரித்து, கொஞ்சம் பெரிய துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுத்தபடியாக சோம்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், மிளகு – 1/4 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து, பூண்டு – 8 பல், வர மல்லி – 1/2 அரை ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் ஒரு சிறிய கடாயில் போட்டு 1/2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்து நன்றாக ஆற வைத்து மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் பொடி செய்து வைத்துக்கொள்ளவேண்டும். இந்தப் பொடியை அப்படியே இருக்கட்டும். (இந்த உருளைக்கிழங்குக்கு தேவையான ஸ்பெஷல் போடி இதுதான்.)

potato-fry2

இப்போது உருளைக்கிழங்கு வறுவலை செய்ய தொடங்கலாம்‌. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி, அந்த எண்ணெயில் மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், உருளைக்கிழங்குக்கு தேவையான அளவு உப்பு, சேர்த்து கலந்துவிட்டு 30 வினாடிகள் வரை வதக்கி, வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கை, கடாயில் சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வறுக்க வேண்டும். (கடாயில் எண்ணெய் ஊற்றிய உடன் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டும். எண்ணெய் அதிகமாக காய்ந்து விட்டால் மிளகாய்த்தூள் கருகி விடும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.)

- Advertisement -

கடாயில் இருக்கும் மசாலா பொருட்களோடு உருளைக்கிழங்கு ஐந்து நிமிடம் நன்றாக வறுபட்ட உடன், ஏற்கனவே அரைத்து வைத்திருக்கும் ஸ்பெஷல் மசாலா பொடியில் இருந்து 2 ஸ்பூன் அளவு எடுத்து கடாயில் இருக்கும் உருளை கிழங்குடன் சேர்த்து, மீண்டும் 2 நிமிடம் சிவக்க வறுத்து விட வேண்டும். அவ்வளவு தான். எல்லா மசாலா பொருட்களும் உருளைக்கிழங்குடன் ஒட்டி வந்து, வறுபட்டு இருக்க வேண்டும். சூப்பரான உருளைக்கிழங்கு ஃப்ரை அட்டகாசமாக தயாராகிவிட்டது.

potato-fry3

உங்களுக்கு உப்பு காரம் அதிகமாக தேவைப்படும் என்றால், இந்த ஃபிரையில் நாம் சேர்த்திருக்கும் மசாலா பொருட்களை அதிகரித்துக் கொள்ளுங்கள். குறைவாக வேண்டுமென்றால் குறைவாகவும் சேர்த்து இந்த உருளைக்கிழங்கு வறுவலை தயார் செய்து கொள்ளலாம். அது நம்முடைய இஷ்டம் தான். இந்த குறிப்பு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்க வீட்ல ஒரு வாட்டி மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -