சுவையான உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட்டை ஒருமுறை செய்து கொடுத்துப் பாருங்கள். குழந்தைகள் மீண்டும் வேண்டுமென்று விரும்பி சாப்பிடுவார்கள்

potatto balls
- Advertisement -

குழந்தைகளுக்காகவே சமையலறையில் நேரம் செலவிடும் தாய்மார்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சுவையுடன் ஆரோக்கியம் உள்ளதுமான உணவுகளை தேடி தேடி சமைப்பதுண்டு. குழந்தைகளுக்கான புரோட்டின் சத்து நிறைந்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் சீஸை பயன்படுத்தி செய்யக்கூடிய சுவையான ஒருவித கட்லட் செய்யும் முறையை தான் பார்க்கப் போகின்றோம். சாப்பிட மொறுமொறு வென்று இருக்கும் இந்த உருளைக்கிழங்கு கட்லெட்டை எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

potato-urulai

தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு – அரை கிலோ, எண்ணெய் – கால் லிட்டர், துருவிய சீஸ் – 3 ஸ்பூன், சில்லி ஃப்ளேக்ஸ் – 1 ஸ்பூன், மிளகுத்தூள் – 1 ஸ்பூன், உப்பு – அரை ஸ்பூன், சோள மாவு – 2 ஸ்பூன், மைதா மாவு – ஒரு கப், வறுத்த சேமியா – ஒரு கப், கொத்தமல்லி இலை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்றாக அலசி சுத்தம் செய்து அதை குக்கரில் வைத்து நான்கு அல்லது ஐந்து டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி ஐந்து விசில் வரும் வரை நன்றாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரில் பிரஷர் சென்றதும் குக்கரை திறந்து உருளைக்கிழங்குகளை வெளியே எடுத்து அவற்றின் தோலை நீக்கி நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

potatto

பிசைந்த உருளைக்கிழங்கினை ஒரு கிண்ணத்தில் மாற்றி கொண்டு அதில் சோள மாவு, சில்லி ஃப்ளேக்ஸ், மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை போன்றவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை சிறு சிறு உருண்டைகளாக செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

வறுத்த சேமியாவை ஒரு தட்டின் மீது சேர்த்து அதனை நன்றாக தூள்செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கப் மைதா மாவுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து அதனுடன் கால் ஸ்பூன் உப்பு மற்றும் அரை ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

semiya

பிடித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு உருண்டைகளை கரைத்து வைத்துள்ள மைதா மாவில் நன்றாக நனைத்து, அதனை பொடித்து வைத்துள்ள சேமியாவுடன் சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இதே போல் ஒவ்வொரு உருண்டையையும் சேமியா உடன் சேர்த்து பிரட்டி ஒரு தட்டின் மீது தனித் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை பிரிட்ஜில் ஒரு பத்து நிமிடங்கள் வைத்து விடவேண்டும்.

10 நிமிடங்கள் கழித்து உருளைக்கிழங்கு உருண்டைகளை வெளியே எடுத்து, அடுப்பின் மீது ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் உருளைக்கிழங்கு உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரையில் பொரித்துக் எடுக்க வேண்டும். இவ்வாறு செய்து வைத்துள்ள அனைத்து உருண்டைகளையும் நன்றாக பொரித்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் உருளைக்கிழங்கு சீஸ் கட்லெட் தயாராகிவிட்டது.

potatto 1

இதனை மாலை தேநீர் குடிக்கும் நேரத்தில் ஒரு தட்டில் பரிமாறி அதனுடன் சிறிதளவு தக்காளி சாஸை சேர்த்துக் கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள்.

- Advertisement -