இந்த மசாலா உங்க கிட்ட இருந்தா போதும் அப்புறமா உங்க சமையல அடிச்சிக்க ஆளே இல்ல. நீங்க சமைக்கிற வாசனை உங்க தெரு வீதி வரைக்கும் வீசும்.

- Advertisement -

சமையல் என்பதே ஒரு கலை தான். அது அத்தனை சுலபத்தில் அனைவருக்கும் வந்து விடாது இனி இந்த மாதிரி டயலாக் எல்லாம் தேவையே படாது. ஏனென்றால் எந்த சமையல் செய்யும் போது அதை செய்பவர்களின் கைப்பக்குவம் என்று ஒன்று இருந்தாலும் அதைவிட அதில் சேர்க்கும் மசாலாவிற்கு அதில் பெரும் பங்கு உண்டு. அதிலும் இந்த பிரியாணி, வெஜ் பிரியாணி, குருமா போன்றவற்றில் மசாலா சேர்த்து சமைக்கும் பொருட்களில் சமையலை விட அதில் சேர்க்கும் மசாலாவின் சுவை தான் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த பிரியாணியை எடுத்துக் கொள்ளுங்கள் நாம் என்ன தான் சமைத்தாலும் பாய் வீட்டில் செய்யும் பிரியாணியின் சுவை நமக்கு சுட்டுப் போட்டாலும் வருவதில்லை காரணம் அதில் சேர்க்கும் மசாலா தான். அப்படி உங்க சமையலை மேலும் சுவை கூட்டும் இந்த மசாலாவை எப்படி தயார் செய்வது என்று இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்: தனியா – 250 கிராம், மிளகு – 2 டீஸ்பூன், சோம்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 4 டீஸ்பூன், ஏலக்காய் -2 டீஸ்பூன், பட்டை- 7, கிராம்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 25.

- Advertisement -

மசாலா அரைப்பதற்கு முதலில் இந்த பொருட்களை எல்லாம் நல்ல தரமானதாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள். ஏனென்றால் இதை அரைத்து நாம் நெடுநாள் வைத்து உபயோகிப்போம். நல்ல தரமான பொருட்களாக இருந்தால் தான் நாள் ஆனாலும் பொருளின் மணம் குறையாமல் சுவையும் நன்றாக இருக்கும். பொருட்கள் தரமானதாக இல்லை என்றால் சீக்கிரம் வண்டு வைத்து பொருட்கள் வீணாகி விடும் எனவே மசாலா பொருட்களை வாங்கும் போது கவனமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள்.

இந்த மசாலாக்களை வாங்கி வந்த பிறகு ஒரு முறை தனித்தனியாக எடுத்து நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். வெயிலில் தான் காய வைக்க வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டு நிழலிலே கூட நன்றாக ஒரு முறை ஆற வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு பேனை வைத்து சூடாக்கி கொள்ளுங்கள். கொஞ்சம் அடி கனமான பேனாக எடுத்துக் கொண்ட நல்லது. முதலில் காய்ந்த மிளகாய் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் பேன் அதிக சூடான பிறகு கடைசியாக காய்ந்த மிளகாய் சேர்த்தால் உடனடியாக கறுத்து விடும் வாய்ப்பு அதிகம். எனவே முதலில் காய்ந்த மிளகாய் லேசான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.மிளகாய் கருகி விடாமல் பார்த்து வறுத்துக் கொள்ளுங்கள்.

மிளகாயை தனியே ஒரு தட்டில் ஆற வைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு தனியா இதையும் வாசம் வரும் வரை வறுத்தால் போதும். எந்த மசாலா பொருளையும் அதிகம் வறுக்க வேண்டாம். சற்று வாசம் வரும் வரை வறுத்தாலே போதும். இப்படி ஒவ்வொரு மசாலாக்களையும் தனித்தனியாக வறுத்து தனித்தனியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள் ஒன்றாக சேர்த்து ஆற வைக்க கூடாது.

- Advertisement -

நன்றாக ஆற வைத்த இந்த மசாலாக்களில் முதலில் மிளகாயை மிக்ஸி ஜாரில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று சுத்து அரைத்த பிறகு பட்டை, லவங்கம், கிராம்பு, ஏலக்காயை போட்டு அதுவும் இரண்டு சுற்று அரைத்த பிறகு, மீதமுள்ள மசாலாக்களை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். (இதில் உங்களுக்கு விருப்பமான வேறு மசாலா பொருட்களை சேர்ப்பது என்றாலும் இதே அளவில் வறுத்து சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்).

இதையும் படிக்கலாமே: இனி உடம்பு வலி, கை கால் மூட்டு வலி என்று அடிக்கடி மாத்திரை போடாதீங்க. மாதத்தில் 1 நாள் இந்த தோசையை சுட்டு சாப்பிடுங்க போதும். உடம்பு வலி பறந்து போயிரும்.

இந்த மசாலாவை பிரியாணி வெஜிடபிள் ரைஸ், குருமா போன்ற எல்லா சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். நீங்கள் தனியாக கரம் மசாலா வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அதை விட பல மடங்கு சுவை கூடுதலாக இருக்கும். இந்த மசாலாவின் மணம் உங்கள் தெருவெங்கும் வீசும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -