பௌர்ணமி நிலவு போல உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாற வேண்டுமா? அம்மனுக்கு இதை மட்டும் மாதம் தோறும் செய்து வந்தால் போதும். உங்களுக்கு வேண்டிய அனைத்தும் உங்களை தானாக தேடி வரும்.

amman
- Advertisement -

பிரகாசமான வாழ்வு அமைய வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக இருக்கிறது. அந்த பிரகாசமான வாழ்க்கை அமைவதற்கு நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாட்டு முறை தான் பௌர்ணமி வழிபாடு. இந்த பௌர்ணமி வழிபாட்டை நாம் மேற்கொள்வதால் நம் வாழ்வில் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

முழு நிலவை பௌர்ணமி என்று கூறுகிறோம். அந்த முழு நிலவு எந்த அளவுக்கு பிரகாசமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அந்த முழு நிலவு நாளில் நாம் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் நம் வாழ்க்கையும் பிரகாசமாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. பௌர்ணமி அன்று நாம் அம்பிகையை வழிபடுவதன் மூலம் நம்முடைய எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். கேட்டது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பொதுவாக பௌர்ணமி தினங்களில் பெண் தெய்வங்களை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. தெய்வங்களை மட்டுமல்ல நம்மை பெற்ற தாயை வணங்கினாலும் அதனால் நமக்கு பல மடங்கு பலன்கள் கிடைக்கிறது. மேலும் பௌர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு, வராகி அம்மனை வழிபடுதல், சத்யநாராயண பூஜை செய்வது, திருவிளக்கு பூஜை செய்வது போன்றவை சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

பௌர்ணமி அன்று வீட்டை சுத்தம் செய்து மாலை வேளையில் விளக்கேற்றி மனதார லலிதா சகஸ்ரநாமம் அல்லது அபிராமி அந்தாதி அல்லது காமாட்சி விருத்தம் போன்றவற்றை வீட்டில் படித்து வந்தால் நமக்கு அனைத்து செல்வங்களும் கிடைத்து, நம் வாழ்வில் நாம் பல வெற்றிகளை காணலாம்.

- Advertisement -

அனைத்து அம்மன் ஆலயங்களிலும் பௌர்ணமி அன்று பூஜைகள் நடைபெறும். அந்த பூஜைகளில் கலந்துகொண்டு அம்மன் அபிஷேகத்திற்காக பசும்பாலை வாங்கி வந்து கொடுப்பதன் மூலம் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி, உடல் உபாதைகள் குறைந்து, தீய சக்தியில் இருந்து நம்மை காக்கும், நமக்கு ஏற்பட்டிருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும்.

மேலும் அம்மன் ஆலயங்களில் நெய் விளக்கு ஏற்றுவது மற்றும் மாவிளக்கு ஏற்றுவது போன்றவற்றை செய்து வழிபடுவதன் மூலம் நம்முடைய குடும்பம் அனைத்து வளங்களையும் பெற்று சிறப்பாக இருக்கும். பௌர்ணமி அன்று மாலைப்பொழுது வீட்டில் விளக்கேற்றும் பொழுது சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவதன் மூலம் தம்பதிகளின் ஒற்றுமை பெருகும்.

இவ்வாறு நமக்கு வேண்டிய அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வழிப்பாடாக இந்த பௌர்ணமி வழிபாடு திகழ்கிறது. இந்த ஒரு நாளில் நாம் அம்மனை மனதார வேண்டி அம்மனுக்குரிய பாடல்களை பாடி அம்மனின் பரிபூரண அருளைப் பெற்று வாழ்வின் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெறுவோம்.

- Advertisement -