நாளை வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி திதியும் வரவிருக்கிறது. இந்த நாள் குலதெய்வம் வழிபாடு செய்யவும், அம்பாள் வழிபாடு செய்யவும், மகாலட்சுமி வழிபாடு செய்யவும் மிக மிக சிறப்பு வாய்ந்தது. நேர்மறை ஆற்றல் இந்த பிரபஞ்சத்தில் நிறைந்து இருக்கக்கூடிய பௌர்ணமி நாளில், மாலை சந்திர பகவான் உதயமாக கூடிய நேரத்தில், வீட்டில் மகாலட்சுமியை நினைத்து இந்த வழிபாட்டை செய்து, இந்த மாலையை மகாலட்சுமிக்கு போட்டால் போதும்.
உங்கள் குடும்பத்தில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கும். செல்வ வளம் கொழிக்கும். அந்த வழிபாட்டை பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் நான் தெரிந்து கொள்வோமா. வீட்டின் செல்வ செழிப்பிற்காக பெண்கள் வழிபாடு செய்யும்போது அவர்களுடைய கையில் மருதாணி வைத்துக் கொள்வது விசேஷமானது.
இன்று இரவு முடிந்தால் மருதாணி இலைகளை அரைத்து உங்களுடைய கைகளில் வைத்துக் கொள்ளுங்கள். மறுநாள் பூஜை செய்யும் போது உங்கள் கைகளை பார்க்கும்போது உங்களுக்கு மனசு அவ்வளவு சந்தோஷப்படும். மனோகாரகன் சந்திரனுக்கு உரிய பௌர்ணமி நாளில், மனசு சந்தோசமாக இருக்கணும் அல்லவா. அதற்காகத்தான் இந்த குறிப்பு. அதுவும் பெண்களின் மனது சந்தோஷப்பட்டால் குடும்பம் நன்றாக இருக்கும்.
பௌர்ணமியில் மகாலட்சுமி வழிபாடு
அடுத்தபடியாக நாளைக்கு உங்கள் கைகளாலேயே ஏலக்காய் மாலையை கோர்க்க வேண்டும். எண்ணிக்கை உங்களுடைய விருப்பம் தான். 11, 21, 51, 108 இப்படி எத்தனை ஏலக்காய்களை கட்டி மகாலட்சுமிக்கு மாலையாக போட முடியுமோ போடுங்கள். உங்கள் குடும்ப கஷ்டம் தீர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பசும்பாலில் பால் பாயசம் செய்வது நெய்வேத்தியமாக வைத்து விடுங்கள். விளக்கு ஏற்றி மல்லிகை பூவால் மகாலட்சுமி தாய்க்கு அர்ச்சனை செய்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையை நாளை உங்கள் வீட்டில் மாலை 6:30 மணிக்கு செய்தால் நிச்சயம் வீட்டில் இருக்கும் பண கஷ்டம் குறையும். வழிபாட்டை முடித்துவிட்டு ஏலக்காயை என்ன செய்வது.
ஏலக்காய் காயும் வரை அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும். நன்றாக காய்ந்த பிறகு அந்த ஏலக்காய்களை எடுத்து பொடி செய்து செடி கொடிகளுக்கு கீழே போடலாம். அப்படி இல்லை என்றால் அந்த ஏலக்காய் பொடியில் கொஞ்சமாக அரிசி மாவு சர்க்கரை சேர்த்து கலந்து கொண்டு போய் எறும்புகளுக்கு உணவாக கொடுப்பது நல்லது.
மகாலட்சுமிக்கு மட்டும்தான் ஏலக்காய் மாலை சிறப்பா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. செல்வ கடாட்சத்துக்கு மகாலட்சுமிக்கு ஏலக்காய் மாலை சிறப்பு. இது தவிர குரு பகவானுக்கு ஏலக்காய் மலை போடலாம், பெருமாள், ஹயக்ரீவர், முருகன், நரசிம்மர், மகாலட்சுமி, அம்மன், சரஸ்வதி, உங்கள் இஷ்ட தெய்வம் என்று எந்த தெய்வத்திற்கு வேண்டுமென்றாலும் ஏலக்காய் மாலை போடலாம்.
குருவுக்கு ஏலக்காய் மாலை போட்டால் பிள்ளைகளின் கல்வித்தரம் உயரும், பொன் பொருள் சேர்க்கை இருக்கும். பெருமாளுக்கு ஏலக்காய் மாலை போட்டால் கடன் தீரும். ஹைக்ரிவருக்கு ஏலக்காய் மாலை போட்டால் குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். முருகருக்கு ஏலக்காய் மாலை போட்டால் நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் பெருகும்.
இதையும் படிக்கலாமே: இன்று மைத்ரேய முகூர்த்த நேரம்
நரசிம்மருக்கு ஏலக்காய் மாலை போட்டால் எதிரி தொல்லை விலகும். அம்மனுக்கு ஏலக்காய் மாலை போட்டால் சுப காரிய தடை விலகும். சரஸ்வதிக்கு ஏலக்காய் மாலை போட்டால் கல்வியில் வேலையில் சிறப்பாக செயல்படலாம். இந்தப் பௌர்ணமி வழிபாட்டோடு சேர்த்து ஏலக்காய் மாலை சிறப்பையும் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மனம் மகிழ்ச்சியுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.