இன்று மாலை பெருமாளுக்கு இந்த ஒரு நிவேதனம் வைத்து வழிபாடு செய்தால், கடுமையான பண கஷ்டத்திற்கு இன்னைக்கே குட்பை சொல்லிவிடலாம்.

perumal
- Advertisement -

கடுமையான பணக்கஷ்டத்தில் சிக்கி இருப்பவர்கள், கடுமையான கடன் சுமையை, தாங்கி கொண்டு இருப்பவர்கள், ஆசை ஆசையாக வாங்கிய நகையெல்லாம் அடமானத்தில் வைத்துவிட்டு மீட்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், இப்படி பொருளாதார ரீதியாக பிரச்சனைகளை மேலும் மேலும் சந்தித்து வருபவர்கள் எல்லோருக்கும் இந்த பரிகாரம் நிச்சயம் கை கொடுக்கும். இன்று பௌர்ணமி, அதுவும் புதன்கிழமையோடு சேர்ந்திருக்கக்கூடிய பௌர்ணமி. இன்னும் சொல்லப்போனால் சந்திர பகவான் நம்முடைய பூமிக்கு அருகில் வர போகும் நீல நிற பௌர்ணமியாக இன்றைய நாள் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய நாள்(30-08-2023) சந்திர பகவானுக்கு சிறப்பு. புதன்கிழமையோடு சேர்ந்து பௌர்ணமி நாள் வந்திருப்பதால், புதன் பகவானுக்கு சிறப்பு. அதேசமயம் புதன் கிரகத்துக்கு உரிய தெய்வமான பெருமாள் மகாலட்சுமிக்கும் இன்றைய நாள் சிறப்பாக கருதப்படுகிறது. இன்று மாலை பணக்கஷ்டம் தீர நாம் செய்ய வேண்டிய ஒரு எளிமையான பூஜை முறையை தான் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பணக்கஷ்டம் தீர பௌர்ணமி அன்று பெருமாளுக்கு செய்ய வேண்டிய பூஜை:
இன்று முதலில் நீங்கள் கடைக்கு சென்று வாங்க வேண்டிய பொருள் இரண்டு. பச்சை பயிறு, பச்சரிசி. பச்சைபயிறு புதன் பகவானுக்கு உரிய தானியம். சந்திர பகவானுக்கு உரியது இந்த பச்சரிசி. உங்களுக்கு பச்சரிசியில் நெல் கிடைத்தால் இன்னும் கூட சிறப்பு. பச்சரிசி அல்லது நெல் எது கிடைக்குதோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த இரண்டு பொருட்களையும் வீட்டிற்கு கொண்டு வர வேண்டும். (பச்சரிசி நெல்லை தினம் தினம் குருவிகளுக்கு பறவைகளுக்கு இரையாக போட்டால் குடும்பத்திற்கு புண்ணியம் சேரும்.)

இன்று மாலை பின் சொல்லப்படும் இரண்டு பிரசாதங்களையும் தயார் செய்து கொள்ளுங்கள். பச்சரிசி, வெல்லம், நெய், முந்திரி பருப்பு, ஏலக்காய், கொஞ்சம் பசும்பால் விட்டு, கொஞ்சம் பாசிப்பருப்பு சேர்த்து, சர்க்கரை பொங்கல் நிவேதனம் தயார் செய்து அதை அப்படியே சந்திர பகவானுக்கு வைக்கலாம். இதில் வெல்லம் சேர்க்காமல் கல்கண்டு சேர்த்து வெள்ளை நிறத்தில் கற்கண்டு சாதம் செய்து சந்திர பகவானுக்கு நிவேதனம் வைத்தால் மேலும் சிறப்பு. இது சந்திர பகவானுக்காக. உங்களுடைய மனது சம்பந்தப்பட்ட குழப்பங்கள் தீர இந்த நிவேதினத்தை சந்திர பகவானுக்கு சமர்ப்பணம் செய்யுங்கள். மனம் தெளிவு பெறும் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

- Advertisement -

அடுத்ததாக வாங்கி வந்த பச்சை பயறை பணக்கஷ்டம் தீர வேண்டும் கடன் சுமை குறைய வேண்டும், பொருளாதார பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று, நினைத்து இந்த பச்சை பயிரில் சுண்டல் செய்ய வேண்டும். வழக்கம் போல வேக வைத்து உப்பு போட்டு தாளித்து முடிந்தால் தேங்காய் துருவலும் சேர்த்து மணக்க மணக்க ஒரு சுண்டல் தயார் செய்து இதை பெருமாளின் முன்பு வைத்து, உங்கள் பணக்கஷ்டத்தை சொல்லி மனம் உருகி வேண்டுதல் வைத்து வழிபாடு செய்யுங்கள். வழிபாடு என்றால் பூஜை அறையை பூக்களால் அலங்காரம் செய்து விட்டு விளக்கு ஏற்றி வாசம் நிறைந்த தூபம் போட்டு இந்த பிரசாதத்தை நிவேதனம் செய்து தீப தூப ஆராதனைகள் காட்டி வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

இந்த வழிபாட்டு முறையை எந்த நேரத்தில் செய்ய வேண்டும். இன்று மாலை 6.30 முப்பது மணிக்கு மேல், இரவு 10 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். இந்த வழிபாடு உங்களுக்கு நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும். வாழ்வில் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத பல நல்ல மாற்றங்களையும் கொடுக்கும். பெருமாள் வழிபாடு செய்யும்போது கூடவே அந்த மகாலட்சுமியும் சேர்த்துதானே வணங்க வேண்டும். ஆகவே அதையும் மறக்காதீங்க.

இதையும் படிக்கலாமே: இன்று நீல நிற பௌர்ணமி! இந்த நாளை தவிர விட்டால் இதற்காக நாம் மீண்டும் 14 வருடம் காத்திருக்க வேண்டும். நினைத்ததை உடனே சாதிக்க, இன்று மாலை நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்.

உங்கள் வீட்டின் அருகில் பெருமாள் கோவில் இருந்தால் அந்த பெருமாள் கோவிலுக்கு, கொஞ்சம் கூடுதலாக இந்த சுண்டலை எடுத்துச் சென்று நிவேதனம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்கு வினியோகம் செய்தாலும் இன்னும் சிறப்பு. இந்த பௌர்ணமி நாள் வழிபாட்டை செய்யும் போது உங்கள் மனதில் சொல்ல முடியாத அளவுக்கு நிம்மதியும் அமைதியும் கிடைத்துவிடும். சந்தோஷத்திற்கு குறைவே இருக்காது. உங்கள் குடும்பம் சுபிட்சம் பெறும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -