பௌர்ணமி தினம் என்பது பெண் தெய்வங்களுக்கு உகந்த தினமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் இந்த பிரபஞ்சத்தின் பேராற்றல் என்பது அதிகரிக்கும். அதனால்தான் அன்று நாம் வைக்கக்கூடிய வேண்டுதலும் எளிதில் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட பௌர்ணமி தினத்தன்று வாராகி அம்மனுக்கு எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பெண் தெய்வங்களில் உக்கிர தெய்வங்கள் வரிசையில் இருக்கக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகி அம்மன். அப்படிப்பட்ட வாராகி அம்மனை நாம் எப்படி பஞ்சமி மற்றும் அஷ்டமி திதியில் வழிபடுகிறோமோ அதே போல் பௌர்ணமி திதியிலும் வழிபடுவது என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அதிலும் குறிப்பாக அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி என்பது மிகவும் விசேஷமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட ஆடி பௌர்ணமி தினத்தன்று வழிபட வேண்டிய முறையைப் பற்றி பார்ப்போம்.
இந்த வழிபாட்டை ஞாயிற்றுக்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்திலோ அல்லது ஆறு மணியில் இருந்து ஏழு மணிக்குள்ளோ அல்லது 7:45 முதல் 8:45 வரை செய்யலாம். இந்த மூன்று நேரங்களும் செய்ய முடியவில்லை என்று நினைப்பவர்கள் மாலை நேரத்தில் வரக்கூடிய ராகு காலத்தில் வராகி அம்மனை வழிபாடு செய்யலாம். ஆனால் இதில் இருக்கக்கூடிய ஒரே ஒரு நிபந்தனை என்னவென்றால் நாளைய தினம் பௌர்ணமி என்பது 4:51 மணிக்கு முடிந்து விடுகிறது என்பதால் அதற்குள்ளாக வழிபாட்டை செய்து முடிக்க வேண்டும்.
இந்த வழிபாட்டை செய்வதற்கு முதலில் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு வாராகி அம்மனுக்கு முன்பாக ஒரு எலுமிச்சம் பழத்தையும், பானகத்தையும் வைத்துவிட வேண்டும். மேல் சொன்ன குறிப்பிட்ட நேரத்தில் எந்த நேரம் உங்களுடைய வசதிக்கு தகுந்த நேரமாக இருக்கிறதோ அந்த நேரத்தில் வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மூன்று வகைகளில் இந்த தீபத்தை ஏற்றலாம். இந்த தீபத்தில் ஏதாவது ஒரு தீபத்தை மட்டும் ஏற்றி வழிபட்டால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும்.
அம்மனுக்கு உகந்த தீபமாக கருதப்படக் கூடியது மாவிளக்கு தீபம். இந்த மாவிளக்கு தீபத்தை நாளைய தினம் வாராகி அம்மனுக்கு நாம் ஏற்றும் பொழுது அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும். அதிலும் இந்த மாவிளக்கில் ஐந்து முகம் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக ராகு காலத்தில் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் எலுமிச்சம் பழத்தில் விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
மூன்றாவதாக ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்து அதில் நாட்டு சர்க்கரையை பரப்பி அதற்கு மேல் அகல் விளக்கு வைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு வாராகி அம்மனுக்கு வெள்ளை நிற பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு அர்ச்சனை செய்யும்பொழுது “ஓம் வாராகியே போற்றி ஓம்” என்று கூறி வழிபாடு செய்ய வேண்டும். அடுத்ததாக வாராஹி அம்மனுக்கு வெள்ளை நிறத்திலான பிரசாதங்களை நெய்வேத்தியமாக படைக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே கஷ்டங்கள் நீங்க வைஷ்ணவி வழிபாடு
இப்படி பௌர்ணமி தினத்தன்று நாம் வாராகி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தோம் என்றால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.