பவுடரை முகத்துக்கு போட்டா பளிச்சென்று வாசனையா இருக்கும் அப்படின்னு எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்த பவுடரை வச்சு வீட்டையே வாசனையா மாற்ற முடியும் அது உங்களுக்கு தெரியுமா? வாங்க அதையும் தெரிஞ்சுக்கலாம்.

- Advertisement -

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன் எப்போதும் நறுமணமாக வைத்திருப்பது என்பது வீட்டிற்கு மட்டுமல்ல நமக்குமே ஒரு நல்ல புத்துணர்வை கொடுக்கக் கூடியது தான். வீட்டில் நுழையும் போது நல்ல வாசம் வீசினால் நம் மனது சோர்வு நீங்கி ஒரு உற்சாகம் பிறக்கும் வாசத்திற்கு அப்படி ஒரு சக்தி உண்டு. அதனால் தான் நான் உடலுக்கு எத்தனை நறுமண பொருட்கள் இருக்கிறதோ அதே அளவு வீட்டிற்கும் உள்ளது. இப்படி வீட்டிற்கு நல்ல வாசத்தை தர, நாம் வாசனைக்காக பயன்படுத்தும் பவுடர் போதும் வாங்க அது எப்படின்னு தெரிஞ்சிக்கலாம்.

கடைகளில் கிடைக்கும் நாப்தலின் பால்கள் வாங்கும் போது நல்ல வாசமாக இருக்கும். கவரில் இருந்து வெளியே எடுத்த உடனே கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அதன் வாசம் குறைய தொடங்கி விடும். அது மட்டுமில்லாமல் அதில் அதிக அளவு கெமிக்கல் கலந்தும் இருக்கும்,இதன் வாசம் பலருக்கு ஒத்துக்கொள்ளாது. இந்த பிரச்சனைகள் வரலாம் இருக்க ரூம் பிரஷர்களை நாமே வீட்டில் மிக மிக எளிமையாக, வீட்டில் இருக்கும் பொருளை வைத்து செய்து கொண்டால் செலவும் குறைவு வீடும் நல்ல வாசமாக இருக்கும்.

- Advertisement -

அதற்கு ஒரு கிண்ணத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் முகத்திற்கு போடும் பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள், அத்துடன் மூன்று டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா, கம்ஃபோர்ட் (துணிகளில் வாசத்திற்காக போடுவது) இரண்டு ஸ்பூன், சிறிதளவு கம் இவை அனைத்தையும் நன்றாக சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ள வேண்டும். இதில் கம் சேர்க்கவில்லை என்றால் இந்த மாவு கெட்டியாக வராமல் இளகி கொண்டே இருக்கும். மாவு கெட்டிப்படவே இதில் கம்மை சேர்த்திருக்கிறோம்.

இந்த மாவை சின்னச் சின்ன உருண்டையை பிடித்து கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த ஷேப்பில் வேணும் வேண்டுமோ அப்படி உருட்டிக் கொள்ளுங்கள். வாட்டர் பாட்டில் மூடிகளில் போட்டு லேசா அழுத்திய பிறகு தட்டி எடுத்தால் சின்ன சின்ன வில்லைகள் போல அழகாக வந்து விடும். இது போலவும் செய்து கொள்ளலாம்.

- Advertisement -

இதை ஒரு நாள் முழுதும் நல்ல வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். காய வைத்த இந்த பால்களை உங்கள் வீட்டில் மெல்லிய துணி (சல்லடை துணி) இருந்தால் அதில் இந்த உருண்டையை வைத்து பாத்ரூம், கிச்சன்,வரவேற்பறை, எங்கு வேண்டுமாலும் வைத்து கொள்ளலாம்.

சமையலறையில் இதை வைத்த பிறகு அசைவம் சமைத்தால் அந்த வாடை கூட வராது. வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் இந்த உருண்டை வைத்து விடலாம். ஒரு மாதம் ஆனால் கூட இதன் வாசம் குறையாது செலவும் மிக மிகக் குறைவு நீங்களும் உங்கள் வீடுகளில் இது போல செய்து வைத்து கொள்ளுங்கள். உங்கள் வீடும் எப்போதும் வாசமாக இருக்கும் அதனால் நீங்களும் நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருப்பீர்கள்.

- Advertisement -