- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஅனைத்து பிரச்சினைகளும் தீர ஒரே பரிகாரம்

அனைத்து பிரச்சினைகளும் தீர ஒரே பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பிரச்சினை இருக்கும். படிப்பில் பிரச்சினை, பணப்பிரச்சினை, உடல்ரீதியான பிரச்சினை, குடும்பத்தில் பிரச்சனை, தொழிலில் பிரச்சனை, வேலையில் பிரச்சனை என்று இருக்கும். அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொள்வதோடு சில வழிப்பாட்டு முறைகளையும் மேற்கொள்ள வேண்டும். அந்த வழிபாட்டு முறைகளை ஒன்றாக திகழ்வதுதான் கோவிலில் இருக்கும் குளத்தில் போடப்படும் உப்பு மிளகு பரிகாரம். இந்த உப்பு மிளகுடன் இன்னும் ஒரு பொருளை சேர்த்து நாம் போடும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய எப்பேர்ப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினை தீரும். அந்த பொருள் என்ன என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

அனைத்து விதமான பிரச்சினைகளையும் தீர்த்து நாம் வேண்டிய வரத்தை நமக்கு அருளக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை நாம் வழிபடும் பொழுது நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. முருகப் பெருமானுக்கு உகந்த கிழமையான செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானை நாம் வழிபட்டால் கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும். நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும்.

- Advertisement -

முருகப்பெருமானை வழிபடுவதோடு அன்றைய தினம் அவரின் அன்னையாக திகழக்கூடிய துர்க்கை அம்மனையும் நாம் வழிபட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் பிரச்சினைகள் அற்ற நிம்மதியான வாழ்க்கையை நம்மால் வாழ முடியும். அதற்காக பிரச்சனைகளை வராதா என்று கேட்டால் வரும் அந்த பிரச்சினையை தீர்ப்பதற்குரிய வழிகளும் நமக்கு கிடைக்கும். பெரிதும் சிரமப்பட வேண்டிய நிலை ஏற்படாது.

செவ்வாய்க்கிழமை செவ்வாய் கோரையில் அருகில் இருக்கக்கூடிய வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவிலுக்கு செல்ல வேண்டும். அந்த கோவிலில் குளம் இருந்தால் மிகவும் விசேஷம். இவ்வாறு குளம் இருக்கும் கோவிலுக்கு செல்லும் பொழுது அந்த குளக்கரையில் கல்லுப்பு மிளகு இவற்றை விற்பார்கள். அதை வாங்கிக் கொள்ளுங்கள். அதோடு சேர்த்து ஒரு வெல்லக் கட்டியையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது மூன்றையும் கையில் வைத்துக்கொண்டு உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதோ அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு இவை மூன்றையும் குளத்தில் போட்டு விடுங்கள். இதில் இருக்கக்கூடிய கல் உப்பும், வெல்லமும் எப்படி கரைந்து ஒன்றும் இல்லாமல் போகிறதோ அதே போல் நம்முடைய பிரச்சினையும் ஒன்றும் இல்லாமல் கரைந்து போய்விடும்.

அருகில் இருக்கக்கூடிய கோவிலில் குளம் இல்லை என்று கூறுபவர்கள் வெல்லத்தை எடுத்துக் கொண்டு போய் கல் உப்பு மிளகு போடும் இடத்தில் வைத்துவிட்டு வரவேண்டும். வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை. இதோடு மட்டுமல்லாமல் கொடி மரத்திற்கு முன்பாக ஒரு கற்பூரத்தை ஏற்றி வைத்து உங்களுடைய பிரச்சனைகள் தீர வேண்டும் என்று நீங்கள் மனதார வேண்டிக் கொண்டால் அந்த கற்பூரம் எரிந்து கரைவது போல உங்களுடைய பிரச்சினையும் கரைந்து விடும். அதற்குரிய வழியை முருகப்பெருமான் காட்டுவார்.

இதையும் படிக்கலாமே: மகாலட்சுமிக்கு பிடித்தமான 18 பெயர்கள்

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் எப்பேர்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் அந்தப் பிரச்சினைகள் தீர்வதற்குரிய வழியை முருகப்பெருமான் காட்டுவார்.

சற்று முன்