பிரச்சனைகளை தீர்க்கும் முருகப்பெருமானின் பாடல்.

murugan padal
- Advertisement -

நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நம்முடைய பூர்வ ஜென்ம பாவம், புண்ணியங்கள் போன்றவற்றிற்கு ஏற்றார் போல் தான் அமைகிறது. புண்ணியம் செய்தவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அந்த பிரச்சனைகளிலிருந்து அவர்களால் வெளியே வந்து விட முடியும். ஆனால் பாவம் செய்தவர்களால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து வெளியே வருவது மிகவும் கடினமாக இருக்கும். அந்த சூழ்நிலையில் முருகப்பெருமானின் எந்த பாடலை பாராயணம் செய்தால் அவர் நம் பிரச்சனைகளை தீர்த்து வைப்பார் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் அவருடைய வாழ்க்கையில் ஏழரை சனி, அஷ்டம சனி, ஜென்ம குரு காலங்களில் பல துன்பங்களை அனுபவிப்பார்கள். மேலும் சிலருக்கு கெட்ட காலம் ஏற்பட்டு அதனால் கஷ்டங்களை அனுபவிப்பார்கள். சிலர் அது வாயில் விழுந்து விட்டால் முன்னேற்றம் என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் பலரும் அவதிப்படுவார்கள். இவை அனைத்தையும் தீர்ப்பதற்கு பல பரிகாரங்கள் இருக்கின்றன.

- Advertisement -

இருப்பினும் முருகனின் தீவிர பக்தரான அருணகிரிநாதர் “கந்தர் அலங்காரம்” என்னும் நூலில் ஒரு பாடலை எழுதி இருக்கிறார். அந்த பாடலை நாம் முருகனை மனதார நினைத்து தினமும் பாராயணம் செய்து வந்தால் நவகிரகங்களாலும், வினைகளாலும், கெட்ட காலங்களினாலும் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களில் இருந்தும் முருகப்பெருமான் காப்பாற்றுவார் என்று கூறியிருக்கிறார்.

பாடல்

நாள் என்செயும் வினைதான் என்செயும்
எனை நாடிவந்த கோள்என் செயும்
கொடுங்கூற்றென் செயும், குமரேசர் இரு தாளும்,
சிலம்பும், சதங்கையும், தண்டையும்,
சண்முகமும், தோளும், கடம்பும்
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.

- Advertisement -

பொருள்

எப்படிப்பட்ட கடினமான நாளாக இருந்தாலும், நாம் முற்பிறவியில் செய்த வினையாக இருந்தாலும், நம்மை சூழ்ந்திருக்கிற நவக்கிரகங்களாக இருந்தாலும், பிறரின் வாயில் இருந்து வரக்கூடிய கொடுமையான சொற்களாக இருந்தாலும் அதனால் ஏற்படக்கூடிய கஷ்டங்களை குமரேசரான முருகனின் இரண்டு பாதங்களும், அதில் அணிந்திருக்கும் இரண்டு சிலம்புகளும், இரண்டு சலங்கைகளும், இரண்டு தண்டைகளும், சண்முகமாகிய ஆறு முகங்களும், அவருடைய தோளாகிய 12 தோள்களும், அவர் கழுத்தில் அணிந்துள்ள கடம்ப மாலையும் எனக்கு முன்பாக வந்து தோன்றி காப்பாற்றுவார்.

இவ்வாறாக அருணகிரிநாதர் கூறியிருக்கிறார். இதில் கூறப்பட்டுள்ள முருகனின் 27 உறுப்புகளும் 27 நட்சத்திரங்களை குறிப்பதாக கூறப்படுகிறது. நமக்கு வரும் கஷ்டங்களில் இருந்து முருகன் நம்மை காப்பாற்றுவார் என்று முழு மனதாக நம்பி இந்த பாடலை தினமும் காலையிலும், மாலையிலும் பாராயணம் செய்து வந்தால் கண்டிப்பான முறையில் முருகனின் அருளால் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தும் தீரும்.

இதையும் படிக்கலாமே: செலவான பணம், மீண்டும் வரவாக உங்க கைக்கே திரும்ப வர இதை செய்யுங்க.

இந்தப் பாடலை பாராயணம் செய்ய ஆரம்பிக்கும் நாளானது செவ்வாய்க்கிழமையாக இருக்க வேண்டும். மேலும் அருகில் இருக்கும் முருகன் ஆலயத்திற்கு சென்று மனதார அவரை வழிபட்டு அவரை குருவாக நினைத்து அவருக்கு குரு தட்சணையாக 11 ரூபாயை அவரது உண்டியலில் காணிக்கையாக செழித்து விட்டு இந்த பாடலை பாராயணம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

- Advertisement -