உங்கள் வீட்டில் உண்டாகும் பிரச்சனைகளுக்கு இந்த செடிகளும் காரணமாக இருக்கலாம். சாஸ்திரத்தின் படி வீட்டில் வளர்க்க கூடாத செடிகள்

plant
- Advertisement -

இப்போதுள்ள இளைய தலைமுறையினருக்கு செடி வளர்ப்பதில் மிகவும் ஆர்வம் இருக்கிறது. வீட்டில் சிறிய இடம் இருந்தாலும் கூட அங்கு தோட்டம் அமைத்து பல விதமான செடிகளை வளர்த்து வருகின்றனர். வீட்டில் செடிகள் இருந்தால் அவற்றை பார்ப்பதன் மூலம் மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. செடி வளர்க்க ஆசை உள்ளவர்களுக்கு என்ன செடி வளர்ப்பது, அதனை எப்படி பராமரிப்பது என்ற பல கேள்விகள் இருக்கும். சில செடிகளின் ஆன்மிக பலன்கள் தெரியாமலேயே வீட்டில் வாங்கி வளர்த்து விட்டால் அவை பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்துவிடும். இவ்வாறு எந்த செடிகளை வீட்டில் வளர்க்க வேண்டும். அல்லது வளர்க்க கூடாது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

பலரும் செடிகளை ஆன்மீக பலன் களுக்காகவும் தங்கள் வீடுகளில் வளர்த்து வருகின்றனர். வீட்டில் வாஸ்து குறைபாடு நீங்க, சந்தோஷத்தை அதிகரிக்க, அதிர்ஷ்டத்தை வரவழைக்க, துரதிர்ஷ்டத்தை விரட்ட இவ்வாறு பல நன்மை தரும் விஷயங்களுக்காகவும் செடிகள் வீட்டில் வளர்க்கப்படுகின்றன.

- Advertisement -

இவ்வாறு ஆன்மீக பலன்கள் தெரிந்துதான் செடிகளை வளர்க்க வேண்டும் என்ற கட்டாயம் ஒன்றும் கிடையாது. ஆனால் சில செடிகளை ஒற்றையாக வளர்ப்பதன் மூலம் கணவன் மனைவியிடையே பிரச்சனை, குடும்பத்தில் குழப்பம் போன்ற சூழ்நிலை உருவாவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே வீட்டில் எந்தெந்த செடிகளை முறையாக வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் விஷயமாவது அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

வெற்றிலை செடி:
நமது சாஸ்திரத்தின்படி வெற்றிலை செடி ஆண் செடியாக கருதப்படுகிறது. இந்த செடியை தனியாக வளர்த்தால் வீட்டில் இருக்கும் கணவன் மனைவி இடையே எப்போதும் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். எனவை வெற்றிலை செடியுடன் ஏதேனும் ஒரு செடியை சேர்த்து வளர்த்திட வேண்டும்.

- Advertisement -

கருவேப்பிலை செடி:
கறிவேப்பிலைச் செடி மிகவும் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. சிறிய இடமாக இருந்தாலும் அங்கு செழித்து வளரக்கூடிய ஆற்றல் உடையது. வீட்டிற்கு சுபிட்சத்தை அளித்து நன்மைகளை கொடுக்கும் கருவேப்பிலைச் செடியை வீட்டில் தனியாக மட்டும் வளர்த்து விடக் கூடாது. அவ்வாறு கறிவேப்பிலைச் செடியை தனியாக வளர்த்து விட்டால் குடும்பத்தில் எப்போதும் குழப்பங்கள் வந்து கொண்டே இருக்கும். கருவேப்பிலை செடியுடன் பப்பாளி மரத்தையும் சேர்த்து வளர்ப்பதன் மூலம் வீட்டில் பிரச்சனைகள் நீங்கி சந்தோஷம் நிலைத்திருக்கும்.

துளசி செடி:
வீட்டில் நீங்கள் செடிகள் வளர்க்க வேண்டும் என்று முடிவு செய்த பின்னர் முதலில் வீட்டிற்கு வாங்கி வர வேண்டியது துளசி செடியைத் தான். இந்த ஒரு செடி வீட்டிற்குள் இருந்தால் போதும் தெய்வ கடாட்சமும், சந்தோசமும் எப்பொழுதும் வீட்டில் நிறைந்திருக்கும்.

மருதாணி செடி:
மகாலட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் மருதாணி செடியில் முட்கள் அதிகமாக இருந்தாலும் அவை வீட்டிற்கு பல நன்மைகளை அளிக்கின்றன. எனவே மருதாணி செடியை முடிந்தவரை வீட்டில் வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது.

அரளிச்செடி:
அரளிப்பூவிற்கு தெய்வீக குணங்கள் அதிகமாக இருந்தாலும் அவை பெரும்பாலும் தோஷ நிவர்த்திக்காக பயன்படுத்தப்படுகின்றன. எனவே அரளிச்செடியை வீட்டின் பின்புறத்தில் வைத்து வளர்ப்பதென்பது மிகவும் நன்மையை கொடுக்கும்.

- Advertisement -