இறைவனை ஒரே ஒருமுறை இப்படி வழிபாடு செய்து பாருங்கள். இறைவனின் குணாதிசயம் உங்களுக்குள் வந்துவிடும்.

prathakshanam

நாம் படித்த இதிகாசங்கள், புராணக்கதைகள் இவைகளை வைத்து இறைவன் என்றால் எப்படி இருப்பார்? இறைவனின் குணாதிசயம் என்பது எப்படி இருக்கும்? என்பது ஓரளவுக்கு நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். எல்லா மனிதர்களாலும் அவ்வளவு சுலபமாக இறைவனின் குணாதிசயங்களை பெற்றுவிட முடியாது. அப்படி முழுமையாக இறைவனின் குணாதிசயங்களை பெற்று விட்டால், அவர்கள் மனிதர்களின் வரிசையிலேயே சேர்க்கப்பட மாட்டார்கள். மகான்களாக மாறிவிடுவார்கள். நாம் மகானாக மாற வேண்டாம். ஒரு நல்ல மனிதராக மாறினால் போதும். அதற்கு இறை வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

temple-prayer

குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு குணம் உண்டு. பெற்றவர்களிடம் ஏதாவது ஒரு காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டுமென்றால் பிள்ளைகள், பெற்றோரை சுற்றி சுற்றி வந்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி அந்த காரியத்தை சாதித்துக்கொள்ள பார்ப்பார்கள். இதையே தான் நாமும் இறைவழிபாட்டில் பின்பற்ற போகின்றோம். இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கெல்லாம் எல்லாம் தாய் தந்தையாக இருப்பது அந்த இறைவன் தான்.

அந்த இறைவனை சுற்றி சுற்றி வந்து நம்முடைய கோரிக்கையை வைத்தாலே போதும். அந்த இறைவன் மனம் இரங்கி நம்முடைய வேண்டுதலுக்கு செவி சாய்த்து விடுவார். அதோடு மட்டுமல்லாமல் நாம் யாரை பின்தொடர்ந்து அவர்களை சுற்றி சுற்றி வருகின்றோமோ, அவர்களுடைய குணாதிசயமும் நமக்கு ஒட்டிக்கொள்ள தான் செய்யும். அப்படித்தான் இந்த வழிபாடும். இறைவனை நீங்கள் சுற்றி சுற்றி வலம் வர வேண்டும். அப்போது உங்களுடைய மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அழிய வேண்டும். நல்ல எண்ணங்களை பெற வேண்டும். நினைத்தது நடக்க வேண்டும் என்ற வேண்டுதலை வைத்துக்கொள்ளலாம்.

prathakshanam1

பொதுவாகவே கோவிலுக்கு செல்லும் போது இறைவனை தரிசனம் செய்துவிட்டு கடமைக்காக கோவிலை பிரதட்சணம் செய்து வரக்கூடாது. சிலபேர் ஒருமுறை கோவிலை பிரதக்ஷணம் வர வேண்டும் என்பதற்காகவே, அவசர அவசர தோடு கோவிலை ஒரு சுற்று சுற்றிவிட்டு இறை வழிபாடு செய்துவிட்டு சென்று விடுவார்கள்.

- Advertisement -

இது மிகவும் தவறான ஒரு விஷயம். உங்களுடைய வேண்டுதல் நிறைவேற, இறைவனின் அம்சம் கொண்டவர்களாக நீங்கள் மாற வேண்டுமென்றால், கோவிலை பிரதட்சணம் செய்யும்போது, மனதார இறைவனை வேண்டிக்கொண்டு, உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் வேண்டும் என்ற எண்ணத்தோடு, பிரதட்சணம் செய்ய வேண்டும். மூன்று முறையாவது பிரதக்ஷணம் செய்ய வேண்டும். நேரமிருந்தால் 11 முறை பிரதட்சணம் செய்யலாம். பிரதக்ஷணம் செய்து இறைவனை வழிபட்டால் நல்ல பலனை விரைவாக நம்மால் பெற முடியும்.

madhulai

இதேபோல்தான் வீட்டில் பூஜை அறையை பிரதட்சணம் வர முடியாது. இருப்பினும் உங்களுடைய குல தெய்வம், இஷ்ட தெய்வம் இப்படிப்பட்ட தெய்வங்களின் திருவுருவப் படத்தை ஒரு நாற்காலியின் மேல் வைத்து, அந்த தெய்வத்தை தினமும் வலம் வருவது மிகவும் நல்லது.

honey 2

வீட்டில் இறைவனை வலம் வரும்போது, அந்த இறைவனுக்கு ஒரு சிறிய பாத்திரத்தில் மாதுளை பழ முத்துக்களை, தேனோடு கலந்து நிவேதனமாக வைத்து உங்களுடைய வேண்டுதலை, வைத்து பாருங்களேன்! இறைவனின் குணம், உங்களை அறியாமலே உங்களுக்குள் வந்துவிடும். நீங்கள் கேட்காமலேயே நல்ல நல்ல வரங்களை அந்த இறைவன் உங்களுக்கு அள்ளிக்கொடுத்து விடுவார். இந்த, பிரதட்சண முறையில் இறை வழிபாடு செய்வது மிகவும் சக்தி வாய்ந்தது. முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.