பிரதோஷத்தில் சிவனை நினைத்து இப்பாடலை பாடினால் அவர்களுக்கு, இருக்கின்ற அத்தனை செல்வமும் கிடைக்குமாம்! என்ன பாடல் அது?

sivan-nandhi-pradosham
- Advertisement -

சிவபெருமான் திருநடனம் புரிந்த பிரதோஷ கால வேளையில் சிவனையும், நந்தி பகவானையும் வணங்குபவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நியதி. சிவனை வழிபட நினைப்பவர்கள் முதலில் அவரை விடுத்து நந்தி பகவானை வழிபடுவது முறையாகும். நந்தி பகவானுடைய தலை உச்சியில் தாண்டவம் ஆடியதாக கூறப்படுகிறது. ஆகவே நந்தி பகவானை தொட்டு வணங்கி அவருடைய காதுகளில் உங்களுடைய கோரிக்கைகளை வைத்தால் அதனை சிவனுடைய காதிற்கு விரைவாக கொண்டு சென்று விடுவார்.

nandhi

அதனால் தான் அவருடைய காதினில் நம்முடைய பிரார்த்தனைகளை சொல்லி வழிபட்டு வருகிறோம். பிரதோஷ கால கட்டாயம் நந்தி பகவானையும் சேர்த்து வழிபடுவது சிறப்பாகும். நந்தி பகவானுக்கு செய்யப்படும் அபிஷேகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பது இன்னும் நல்ல பலன்களைக் கொடுக்கும். மேலும் சிவாலயங்களில் அமர்ந்து இந்த பாடலை பாடுபவர்களுக்கு எத்தகைய செல்வங்களும் விரைவில் வந்தடையும் என்பது நம்பிக்கை. திங்கட்கிழமைகளில் மற்றும் பிரதோஷ நாட்களில் இப்பாடலை உச்சரிப்பது மிகவும் நல்லது.

- Advertisement -

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ! நமசிவாய!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ!!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ! நமசிவாய!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ!!

nandhi

கொன்றையைத் தரித்தவனே காமனை யெரித்தவனே!
காலனை யுதைத்தவனே ஓம்நமோ நமோ!
மங்கையை வரித்தவனே கங்கையைத் தரித்தவனே!
முப்புரம் எரித்தவனே ஓம்நமோ நமோ!!

- Advertisement -

செஞ்சடை தரித்தவனே சேந்தனை அளித்தவனே!
சிந்தையில் அமர்ந்தவனே ஓம்நமோ நமோ!
செந்நிறம் படைத்தவனே சந்திரன் தரித்தவனே!
விந்தைகள் புரிந்தவனே ஓம்நமோ நமோ!

sivan

தன்னுரு மறைத்தவனே தென்திசை தவத்தவனே!
தேவரும் துதிப்பவனே ஓம்நமோ நமோ!!
மண்தனைச் சுமந்தவனே மேனியைப் பகிர்ந்தவனே!
தேவியை மணந்தவனே ஓம்நமோ நமோ!

- Advertisement -

அன்பினில் களிப்பவனே ஆனந்தம் அளிப்பவனே!
இன்பங்கள் கொடுப்பவனே ஓம்நமோ நமோ!
நெஞ்சினில் இருப்பவனே நேசத்தில் மணப்பவனே!
துன்பங்கள் அழிப்பவனே ஓம்நமோ நமோ!!

lingam-vilva-archanai

ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ!!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமசிவாய!
ஓம்நமோ நமசிவாய ஓம்நமோ நமோ!!

நந்தியை வழிபடும் போது பாட வேண்டிய பாடல்:
நந்திஎம் பெருமான்தன்னை நாள் தோறும் வழிப்பட்டால்!
புந்தியில் ஞானம் சேரும் புகழ் கல்வி தேடிவரும்!
இவ்வுலக இன்பம்யாவும் இவரடி தொழ உண்டு!
அவ்வுலக அருளும்கூட அவர்துதி பாட உண்டு!

maragatha-lingam

முற்பிறவி வினைகள் யாவும் தீயிட்ட மெழுகாகும்
நந்தியின் பார்வை பட நலங்கள் உடன் கிட்டும்!
ஈசனுக்கு எதிர் அமர்ந்து இறை ஊஞ்சல் ஆட்டுவிக்கும்!
நந்தீசர் நற்பாதம் நாம் தொழுவோமே!

சிவா காயத்ரி மந்திரரங்கள்:
1. ஓம் தத்புருஷாய வித்மஹே!
மஹா தேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரசோதயாத்!

jyotirlingam2

2. ஓம் த்ரயம்பகாய வித்மஹே!
ம்ருத்யுஞ்சாய தீமஹி!
தன்னோ பரமசிவ ப்ரசோதயாத்!

பிரதோஷ மந்திரம்:
ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய!
நீலகண்ட்டாய சம்பவே!
அம்ருதேஸாய சரவாய!
மஹாதேவாய தே நமஹ!

runavimosana-lingam

தரித்திரம் நீக்கும் மந்திரம்:
ஓம் ருத்ராய ரோகநாஷாய!
அகச்சே சஹ் ரம் ஓம் நமஹ!

- Advertisement -