இன்று 24.5.2025 சனி மகா பிரதோஷம். இது சிவபெருமானுக்கு சொந்தமான நாள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த நாள் முழுவதும் சிவனை மனதில் நிறுத்தி “சிவ சிவ” நாமத்தை சொல்லிக் கொண்டே இருந்தால், நிச்சயம் வாழ்வில் இருக்கும் தீராத துன்பங்கள் எல்லாம் தீரும். இந்த பதிவை படிக்கும் போது “சிவ சிவ” என்று நீங்கள் இந்த மந்திரத்தை நிச்சயம் சொல்லுவீர்கள். உங்களுக்கான பலன் இன்று சிவனின் ஆசிர்வாதத்தால் கிடைத்தது.
இந்த மனதிருப்தியோடு இன்றைய பதிவிற்குள் பயணம் செய்வோம். இந்த சனி மகா பிரதோஷம் ஆனது அஸ்வினி நட்சத்திரத்தோடு சேர்ந்து வந்திருப்பது இரட்டிப்பு சிறப்பு. அஸ்வினி நட்சத்திரம் ஞான காரகனான கேதுவின் நட்சத்திரம். அஸ்வினி நட்சத்திரத்தன்று, சனி மகா பிரதோஷ நாளில் விநாயகரை வழிபாடு செய்தால் நாம் வேண்டுதலில் இருக்கும் தடைகள் விலகும் என்று சொல்லப்பட்டுள்ளது.
சனி மகா பிரதோஷம்
இன்று மாலை 4:30 மணியிலிருந்து 6:00 மணி வரை பிரதோஷ நேரம். சிவபெருமானை பார்க்க செல்வதற்கு முன்பு இந்த பிரதோஷ நேரத்தில் ஒரு சின்ன பரிகாரத்தை செய்து விடுங்கள். உங்கள் கையால் அருகம்புல்லை எடுத்து மஞ்சள் நிற நூலில் மாலையாக கட்டி விநாயகருக்கு போடுங்க. விநாயகா நான் சிவபெருமானை வணங்க செல்கின்றேன். என்னுடைய வேண்டுதலை எந்த தடங்கலும் இல்லாமல், அந்த ஈசன் காதில் சொல்லிவிடு என்று சொல்லி, அந்த அருகம்புல் மாலையை விநாயகர் கழுத்தில் போட்டு விட்டு, சிவனை கும்பிட சொல்லுங்கள்.
சிவனுக்கு முன்பாக இருக்கும் நந்தி தேவரையும் மறக்கக்கூடாது. அவருக்கு ஒரு அருகம்புல் மாலை போட்டு வணக்கம் சொல்லிவிட்டு என்னுடைய வேண்டுதலை மறக்காமல் சிவபெருமானில் காதில் போட்டு விடுங்கள் நந்தி தேவரே, என்று சொல்லிவிட்டு, சிவனை கும்பிட்டுப் பாருங்கள். இன்று நீங்கள் சிவனிடம் என்ன வேண்டுதல் வைத்தாலும் அது அதி விரைவாக பலிக்கும்.
சொன்னா நம்ப மாட்டீங்க விநாயகருக்கு அருகம்புல் மாலை போட்டு இரண்டு மண் அகல் விளக்குகள் ஏற்றி வைத்துவிட்டு சிவனை கும்பிட்டு பாருங்கள். இந்த சனி பிரதோஷத்தை போல உங்கள் வாழ்நாளில் அற்புதம் செய்யும் இன்னொரு நாள் நிச்சயம் வரவே வராது. நம்பி இந்த வழிபாட்டை செய்யுங்கள். குறிப்பாக கணவன் மனைவி ஒற்றுமை இல்லாமல் இருந்தால் இன்றைய தினம் சிவனை கும்பிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே: யோகமான வாழ்க்கை அமைய
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஏழரை சனியில் பாதிக்கப்பட்டவர்கள, எல்லாம் இன்று சிவனை கும்பிட வேண்டும். கடன் சுமையில் சிக்கி இருப்பவர்கள், வேலை கிடைக்காமல் திண்டாடுபவர்களும் இன்று சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டாம். உங்களுக்கு எந்த கஷ்டம் இருந்தாலும் நீங்கள் சிவனிடம் சொல்லி விடுங்கள். அந்த சிவபெருமான் உங்களை நிச்சயம் நல்வழிப்படுத்துவார். மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த தகவல் இன்றைய தினம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.