உலகக்கோப்பை தொடரில் கீப்பராக தோனி, பேட்ஸ்மேனாக பண்ட் இடம் பிடிக்க நடவடிக்கை எடுப்பேன்- தேர்வுக்குழு தலைவர்

msk
- Advertisement -

இந்த ஆண்டு மே மாதம் இறுதியில் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும் கூறிவருகின்றனர்.

ms

இந்நிலையில், இந்திய அணியின் பின்வரிசை வீரர்களை பலப்படுத்தும் எண்ணத்தில் சில மாற்றங்களை செய்ய இந்திய அணி தேர்வுக்குழு முடிவு செய்து உள்ளது. அதன்படி இந்திய அணியில் செய்ய இருக்கும் மாற்றங்களை தேர்வுக்குழு தலைவர் பிரசாத் அறிவித்தார்.

- Advertisement -

தேர்வுக்குழு தலைவர் பிரசாத் கூறியதாவது : இந்திய அணியில் பின்வரிசையில் ரிஷப் பண்டை களமிறக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஏனென்றால், பண்ட் பின்வரிசையில் பேட்ஸ்மேனாக இறங்கும்போது 30 பந்துகளை சந்தித்தால் நிச்சயம் 5 சிக்ஸர்கள் வரை அடிப்பார். எனவே இந்த உலகக்கோப்பை தொடரில் பண்ட் இடம்பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

pant

அதன்படி தோனி கீப்பராகவும், பண்ட் பேட்ஸ்மேனாகவும் அணியில் இடம் பிடிப்பார்கள். இருப்பினும், அணியில் எந்த வீரரை மாற்றுவது என்று அணி நிர்வாகம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

அதிகமாக ஸ்விங் ஆகும் மைதானங்களில் இந்திய அணி இதனை கடைபிடித்தே ஆக வேண்டும் – பிரவீன் குமார் ஆலோசனை

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -