அதிகமாக ஸ்விங் ஆகும் மைதானங்களில் இந்திய அணி இதனை கடைபிடித்தே ஆக வேண்டும் – பிரவீன் குமார் ஆலோசனை

praveen

இந்திய கடைசியாக நடந்து முடிந்த நியூசிலாந்து தொடரை (4-1) என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியது . இதனால் இந்திய அணியை பலரும் வாழ்த்திய படி உள்ளனர். இந்திய அணி தற்போது முழு பலத்துடன் திகழ்கிறது.

rohith

இருப்பினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அதிகமாக ஸ்விங் ஆகும் மைதானத்தில் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது. மேலும், முன்னணி வீரர்கள் ரன் குவிக்க திணறி இந்திய அணி மொத்தமாக 92 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால், இந்திய அணிக்கு ஸ்விங் மைதாங்களில் ஆடும் முறை பற்றி இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமார் ஆலோசனை வழங்கி உள்ளார்.

அதில் குமார் கூறியதாவது : அதிகமாக ஸ்விங் ஆகும் மைதானங்கள் இங்கிலாந்தில் அதிகம். அங்கு பந்தின் வேகமும் அதிகமாக காணப்படும் எனவே, உலகக்கோப்பை போட்டிகளில் முதல் 10 ஓவர்கள் விக்கெட் கொடுக்காமல் அதிரடியாக ஆடவேண்டும் . அப்படி ஆடினால் முதல் 10 ஓவர்களில் 60 முதல் 70 ரன்கள் வரை குவிக்கும்.

shikhar

அதன்பின்னர், எளிதாக 300 ரன்களுக்கு மேல் இந்திய அணி குவிக்கும். எனவே, உலககோப்பை தொடரில் துவக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக ஆடவேண்டும். மேலும், ரோஹித் மற்றும் தவான் தற்போது நல்ல பார்மில் இருப்பதால் அவர்கள் இதனை எளிதாக செய்வார்கள். எனவே, இந்திய அணி உலககோப்பையினை வெல்வது உறுதி என்று பிரவீன் குமார் கூறினார்.

இதையும் படிக்கலாமே :

நம்ம தல தோனியின் ஸ்டம்பிங் குறித்து உலக கிரிக்கெட் வீரர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கிய – ஐ.சி.சி

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்