இன்றைய பிரதோஷ சிவராத்திரியில் இதை செய்தால் கர்ம வினைகள் நீங்கும்

1466
Prathosam
- விளம்பரம் -

ஒவ்வொரு மாதமும் பிரதோஷசமும், மாத சிவராத்திரி தினங்கள் வருவது சிவ வழிபாடு செய்வோர் அனைவரும் அறிந்ததே. பெரும்பாலான மாதங்களில் பிரதோஷ தினத்திற்கு அடுத்த நாட்களிலேயே மாத சிவராத்திரி தினம் வரும். ஆனால் இன்று (13/5/2018) பிரதோஷமும், சிவராத்திரி தினமும் ஒரே நாளில் வருவது போன்ற தினங்கள் வருடத்தில் ஒரு சில முறை மட்டுமே வரும். இன்றைய ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வழிபடுவதால் ஞாயிற்றுக்கிழமையின் காரகனான “சூரியபகவானின்” அருளை முழுமையாகப் பெற்றுத் தரும். பிரதோஷ தினமென்பது சிவனின் வாகனமாக இருக்கும் “நந்தீஸ்வரர்” சிவபெருமானை வழிபடும் தினம். இப்படிப்பட்ட சிறப்பான தினத்தில் அந்த நந்திகேஸ்வரை வழிபடும் மந்திரம் தான் இது.

Siva lingam

மந்திரம் :
“ரக்தம் த்ரிணேத்ரம் ஐடிலம் வராபயகராம்புஜம்
அக்ஷ்மாலாம் த்ரிலஞ்ச ததாநம் ஸ்வயவாமேயோ

- Advertisement -

பஸ்மோத்தூளித ஸர்வாங்கம் விபுதஜன ஸேவிதம்
சிவாபரஸ்வரூபஞ்ச வந்தேஹம் நந்திகேச்வரம்”

இந்நாளில் உடல் மற்றும் உள்ளத் தூய்மைக் கொண்டு, பிரதோஷக் கால விரதமிருந்து, மேற்கூறிய “நந்தீஸ்வரர்” மந்திரத்தை சிவபெருமான் கோவிலில், நந்திக்கும் சிவபெருமானுக்கும் பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் பூஜையின் போது தொடர்ந்து ஜெபித்து வழிபடுவதால் உங்களின் அனைத்துக் கர்ம வினைகள் நீங்கி, உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியடைந்து, முக்திப்பேற்றை அளிக்கும் என்பது உறுதி “சிவாய நம என்றிருப்போர்களுக்கு அபாயம் ஒருநாளுமில்லை”.

இதையும் படிக்கலாமே:
திருட்டு பயம் நீங்க உதவும் மந்திரம்

English Overview:
Here we have Prathosam mantra in Tamil. This mantra is called as Nandhi mantra and it will give all needs if we chant it on Prathosam time.

Advertisement