தீயவைகள் அனைத்தும் விலக உதவும் ஆஞ்சநேயர் மந்திரம்

hanuman-1

இன்றைய அவசரமான உலகில் மக்கள் எதிலும் அவசரமாகவும் பரபரப்பாகவும் இயங்குவதால் சில சமயம் அவர்களை அறியாமல் சில விபத்துகளில் சிக்குகின்றனர்.மேலும் கிரகங்களின் கேடான தாக்கங்கங்களாலும், தீய எண்ணங்களின் சில செயல்களிலும் சிலர் பல விதமான துன்பங்களை அனுபவிக்கின்றனர். அப்படியான நபர்கள் “ஸ்ரீ மாருதியாகிய: “ஆஞ்சநேயருக்குரிய” மந்திரம் அதை கூறி வழிபடுவதன் மூலம் தீயவைகளை விலகும்.

Hanuman and Sani

ஆஞ்சநேயர் மந்திரம்

ஓம் மஹாபலாய ஸ்வாஹா
ஓம் மாருதி ரக்ஷ ஸர்வதா

ஸ்ரீ மாருதியாகிய ஆஞ்சநேயருக்குரிய இம்மந்திரத்தை செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்று, அவர் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, பழம் மற்றும் கற்கண்டு போன்ற ஏதேனும் ஒரு இனிப்பு வகையை அவருக்கு நிவேதிக்க வேண்டும். முடிந்தால் வெற்றிலை மாலையையும் அவருக்கு சாற்றி இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை உரு ஜெபித்து ஸ்ரீ ஆஞ்சநேயரை வணங்கினால், நமக்கு கிரகாசாரங்களால் ஏற்படக்கூடிய அனைத்து துன்பங்களிலிருந்தும் அவர் நம்மை காத்து ரட்சிப்பார். மேலும் தீய சக்திகள் மற்றும் பிற மனிதர்கள் நமக்கு சேய்யக்கூடிய தீய வினைகளிலிருந்தும் நம்மை அந்த ஸ்ரீ மாருதி காத்தருள்வார்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் நல்ல சக்தியை ஈர்க்க உதவும் மந்திரம்

English Overview:
Here we have Anjaneya mantra in Tamil. This can also be called as Anjaneya manthiram in Tamil. By chanting this we can get away from evil power and from planets negative impact. This mantra needs to be chant on Tuesdays.