எந்த ஒரு சூழ்நிலையிலும் உங்களை வறுமை நெருங்காமல் இருக்க வேண்டுமா? செல்வத்தை அள்ளித் தரப் போகும் இந்த பொருளை உங்கள் வீட்டில் கட்டினாலே போதும்.

nerkathir2
- Advertisement -

நம்முடைய வாழ்க்கை எந்த காலத்திலும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும் என்றுதான் நாம் எண்ணிக் கொண்டிருப்போம். ஆனால் சில எதிர்பாராத காரணங்களினால் கோபுரத்தின் உச்சியில் இருப்பவர்கள் கூட, கீழே வரும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அதாவது கோடான கோடி கோடீஸ்வரர்களாக இருந்தாலும் கெட்ட நேரம் வந்துவிட்டது என்றால் கஷ்டத்தை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்று சொல்லுவார்கள். எப்படி பட்ட கஷ்டம் நமக்கு வந்தாலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு நம் வீட்டில் செல்வவளம் இருக்க வேண்டும்.

money

அதாவது எந்த காலத்திலும் நாம் சாப்பிடும் சாப்பாட்டிற்கு, நம் வீட்டில் பஞ்சம் வரக்கூடாது. உடுத்திக் கொள்ளும் உடைக்கு பஞ்சம் வரக்கூடாது. இருக்கும் இடத்திற்கும் பஞ்சம் வரக்கூடாது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் இந்த மூன்று பொருட்களுக்கும் எப்படிப்பட்ட காலத்திலும் நம் வீட்டில் பஞ்சம் ஏற்படக் கூடாது என்றால் நாம் என்ன செய்ய வேண்டும். என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

இந்தப் பழக்கமானது நம் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கம்தான். நம் பூமியில் விளையும் நெற்கதிர்களை வேரோடு எடுத்து, ஒரு சிவப்பு துணியில் கட்டி நம் வீட்டின் கன்னிமூலயான தென்மேற்கு மூலையில் வைக்கப் போகின்றோம். இதுதான் பரிகாரம். இந்தப் பரிகாரத்தை முறையாக எப்படி செய்வது?

nerkathir

நெற்கதிர்கள் இருக்கும் வயல்வெளிக்கு சென்ற பின்பு, தோட்டத்தின் தென்மேற்கு மூலையில் இருக்கும் அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களின் மீது,(அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்கதிர்களை தான் பிடுங்க வேண்டும்.) சிறிதளவு மஞ்சள் பொடி தூவி, மகாலக்ஷ்மியை மனதார வேண்டிக்கொண்டு ‘ஓம் மகாலட்சுமியை நமஹ’ என்ற மந்திரத்தை 9 முறை சொல்லி வேரோடு பிடுங்கி எடுக்க வேண்டும். ‘செழுமையாக வளர்ந்து நிற்கும், நெற்கதிர்களை போன்று, நம் வாழ்க்கையும் செழுமையாக இருக்க வேண்டும்.’ என்று வேண்டிக் கொண்டு பிடுங்க வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொன்றாக பிடுங்கி எடுக்கலாம். தவறில்லை. இந்த நெற்கதிர்களை ஒன்று, மூன்று, அல்லது ஐந்து இதில் ஏதாவது ஒரு கணக்கில் தான் நம் வீட்டில் வைக்க வேண்டும். நீங்கள் பிடிங்கிய நெற்கதிர்களை உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்த பின்பு, சிகப்பு பட்டுத்துணியால் அதை முழுமையாக வெளியில் தெரியாமல் கட்டி, உங்கள் வீட்டு கன்னி மூலையான, தென்மேற்கு மூலையில் ஆணியில் மாட்டி விட வேண்டும். வெள்ளிக்கிழமை அன்று காலை வேலையில் நெற்கதிர்களை பிடுங்கி, சுக்கிர ஓரையில் உங்கள் வீட்டில் இதை மாட்டுவது நல்ல பலனைத் தரும். வருடத்திற்கு ஒருமுறை இதை மாற்றினால் போதுமானது. வெள்ளிக்கிழமை தோறும் நீங்கள் பூஜை செய்யும் போது தூபம் காட்டுவது அவசியமாகும்.

nerkathir1

வடமாநிலங்களில் இதேபோன்ற பரிகாரத்தை கோதுமை தானிய பயிர்களில் செய்வார்கள். அவர்கள் நாட்டில் விளைவது கோதுமை அல்லவா? இதனால் அவர்கள் பின்பற்றுவது, கோதுமை பயிரை பிடுங்கிக்கொண்டு வந்து அவர்கள் வீட்டில் மாட்டி வைப்பார்கள். வீட்டில் இருக்கும் தன தானியத்திற்கு எந்த ஒரு குறைபாடும் வராமல் இருக்க, சாப்பாட்டிற்கே வழியில்லாத சூழ்நிலை என்ற ஒன்று நமக்கு ஏற்படாமல் இருக்க, இந்த முறை பண்டைய காலங்களில் இருந்தே நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் எல்லோருக்கும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இன்றளவும் கிராமங்களில் இந்த பழக்க வழக்கங்களை கடைப்பிடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிக்கலாமே
அஷ்டலட்சுமியையும் வீட்டிற்குள் அழைத்து வரும் பாடல்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Varumai neenga pariharam Tami. Varumai neenga Tamil. Varumai neenga valipadu Tamil. Varumai in Tamil. Veetil varumai neenga.

- Advertisement -