சச்சினையும், கோலியையும் உன்னால் மட்டுமே நெருங்க முடியும் நீ வா தம்பி – ஸ்ரீசாந்த்

srisanth

இந்திய அணி தற்போது நியூசிலாந்து நாட்டில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் மூன்று போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றியது இந்திய அணி. தொடர் போட்டிகள் காரணமாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

ms-vk

நான்காவது போட்டியில் கோலிக்கு பதிலாக இந்திய அணியின் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டார். ஆனால், இந்த போட்டியில் இந்திய அணி மிக மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வெறும் 92 ரன்கள் மட்டுமே அடித்து நான்காவது போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதனையடுத்து இந்திய அணியின் இளம் வீரரான பிரிதிவி ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அதில், நான் இப்போது காயத்திலிருந்து மீண்டு பிட்டாக உள்ளேன். இது நான் அணியில் இணைய சரியான தருணம் என்று நினைக்கிறன். இப்போது அணிக்குள் நான் வரலாமா ? என்பது போல பதிவினை பிரிதிவி ஷா பதிவிட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் : கண்டிப்பாக நீ வரலாம் வா பிரதர். உன்னால் மட்டுமே சச்சின் மற்றும் கோலி ஆகியோரது சாதனையை நெருங்க முடியும். உனக்கான நேரம் வந்துவிட்டது. என்று ப்ரித்வி ஷா ட்விட்டுக்கு ஸ்ரீசாந்த் பதிலளித்தார்.

இதையும் படிக்கலாமே :

நியூசி வெயிலில் தொடர்ச்சியாக 10 ஓவர்கள் கலைப்பாகாமல் தொடர்ந்து வீசிய வீரரை பாராட்டிய – குப்தில்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்