- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagaval7 நாளில் பிரிந்த உறவு ஒன்று சேர எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்

7 நாளில் பிரிந்த உறவு ஒன்று சேர எளிய சக்தி வாய்ந்த பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொரு மனிதனுக்கும் குடும்ப வாழ்க்கை, சொந்த பந்தம், உறவுகள் இவை எல்லாம் மிகவும் முக்கியம். இப்போது உள்ள சூழ்நிலையில் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று வாய் வார்த்தைக்காக கூறினாலும் கூட, உண்மையாக நேசிக்கவும் அன்பு செலுத்தவும் நிச்சயம் ஒரு உறவு தேவை. அந்த உறவு கணவன் மனைவியாக இருக்கலாம் அல்லது சகோதரர்கள், பிள்ளைகள், நண்பர்களாக கூட இருக்கலாம். நிச்சயமாக ஏதோ ஒரு உறவு அனைவருக்கும் தேவை.

இந்த உறவுகளுக்குள் சண்டையோ, மன கசப்போ வராமல் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஒரு சில இடங்களில் அந்த மனக்கசப்புகள் பெரிதாக மாறி ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து வாழும் சூழ்நிலை கூட ஏற்பட்டு விடும். சில இடங்களில் ஒன்றாகவே இருந்தாலும் ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து கூட பேசிக் கொள்ளாத நிலை இருக்கும். இது போன்ற சூழ்நிலைகள் மிகவும் கடினமானதாக இருக்கும். அதை கடப்பதும் மிகவும் கஷ்டம் தான்.

- Advertisement -

இது போல நாம் நேசித்த ஒரு உறவு நம்மை விட்டு விலகி இருக்கும் சூழ்நிலையில் அந்த உறவே நம்முடைய உண்மையான அன்பை புரிந்து கொண்டு மீண்டும் நம்மிடம் வந்து சேர ஒரு எளிமையான பரிகார முறை உள்ளது. அதை பற்றியதொரு தகவலை தான் ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பிரிந்த உறவுகள் மீண்டும் சேர

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான முக்கியமான பொருள் கிராம்பு. இந்த கிராம்பு நல்ல நிலையில் இருக்க வேண்டும்.இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். ஆனால் தொடங்கியதிலிருந்து ஏழு நாட்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அதை மட்டும் சரியாக பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல் இந்த பரிகாரத்தை பிரம்ம முகூர்த்த வேளையில் தான் செய்ய வேண்டும். அதுவும் ஐந்து முப்பது மணிக்குள்ளாக செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செய்ய நல்ல நிலையில் உள்ள மூன்று கிராம்பை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்கள் உள்ளங்கையில் வைத்துக் கொண்டு நெஞ்சிக்கு நேராக உங்கள் கையை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது பூஜை அறையில் கிழக்கு பார்த்தவாறு நீங்கள் அமர்ந்து உங்களுடைய குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் யாரேனும் ஒருவரை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

உங்களை விட்டு பிரிந்த உறவு யாரோ அவருடைய பெயரை சொல்லி அவர் என்னுடைய அன்பை புரிந்து கொள்ள வேண்டும். அவர் என்னிடம் வந்து சேர வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கையில் உள்ள கிராம்பை அதன் விளக்கில் போட்டு விடுங்கள். அதன் பிறகு அகல் விளக்கில் தேங்காய் எண்ணெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு விளக்கு கிழக்கு முகமாக எரியும்படி தீபம் ஏற்றி வைத்து தீபத்தின் முன் அமர்ந்தும் இதே போல வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீபமானது தொடர்ச்சியாக ஒரு மணி நேரம் எரிய வேண்டும். அடுத்த நாள் மறுபடியும் இதே விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும். அப்போது இந்த அதில் இருக்கும் மூன்று கிராம்பை தனியாக எடுத்து வைத்து விட்டு, இதே போல் மூன்று புது கிராம்பை வைத்து வேண்டிக் கொண்டு விளக்கில் போடுங்கள். திரியை மட்டும் பழைய திரை ஏற்றாமல் புதிய திரியை மாற்றி ஏற்றுங்கள்.

இது போல ஏழு நாட்கள் செய்த பிறகு ஏழு நாட்களும் எடுத்து வைத்திருக்க கிராம்பை அன்றைய தினம் சாம்பிராணி தூபம் போட்டு அதில் இந்த கிராப்பை சேர்த்து எரித்து விடுங்கள். இந்த புகை உங்கள் வீடு முழுவதும் பரவ வேண்டும். இந்த ஏழு நாள் பரிகாரம் செய்து முடிப்பதற்குள்ளாகவே உங்களை பிரிந்து உறவு உங்களை சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் பேய் பிசாசு பிடிக்காது.

இந்த பரிகாரத்தை செய்யும் முன் கவனிக்க வேண்டியது, நம்மை விட்டு பிரிந்த உறவு நல்ல முறையிலான உறவாக இருக்க வேண்டும். எந்த ஒரு தவறான உறவு முறைக்கும் இந்த பரிகாரத்தை பயன்படுத்தும் போது அதன் பலன் வேறு விதமாக மாறி விடும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பிரிந்த உறவுடன் சேர்த்து சந்தோஷமாக வாழுங்கள்.

சற்று முன்