இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக்கொண்டால் பேய் பிசாசு பிடிக்காது.

pillaiyar4
- Advertisement -

பெரியவர்களாக இருக்கட்டும், சிறியவர்களாக இருக்கட்டும் இன்றைய சூழ்நிலையில் நேரம் காலம் இல்லாமல் வெளியில் சென்று வர வேண்டிய நிலமை. திருஷ்டி கழித்து போட்ட கழிவு, எலுமிச்சம் பழம் சுற்றி போட்டது, பூசணிக்காய் சுற்றி போட்டது, இப்படிப்பட்ட பொருட்களை எல்லாம் தாண்டும்போது அந்த எதிர்மறை ஆற்றலின் மூலம் நமக்கு தாக்கம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

இது அல்லாமல் பேய் பிசாசு ஆவி கெட்ட சக்தி போன்ற எதிர்மறை ஆற்றல் மூலமாகவும் நமக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு தாயத்து, கயிறு என்று பல விஷயங்கள் வெளியிலிருந்து நாம் வாங்கலாம். ஆனால் நமக்கு நாமே நம்பிக்கையுடன் ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள இந்த கருப்பு கயிறை கையில் கட்டிக் கொண்டால் போதும். நமக்கு நாமே மந்திர கயிறு தயாரிப்பது எப்படி என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் மந்திர கயிறு

இதற்கு நமக்கு ஒரு கருப்பு கயிறு தேவை. கழுத்தில் வேண்டும் என்றாலும் இதை நீங்கள் கட்டிக் கொள்ளலாம். கையிலும் கட்டிக் கொள்ளலாம். காலிலும் கட்டிக் கொள்ளலாம். கொலுசு போடுவது போல சில பேர் கருப்பு கயிறு காலில் கட்டிக் கொள்வார்கள் அல்லவா. அதேபோல நீங்களும் இந்த கயிறை கட்டிக் கொள்ளலாம். பூஜையறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

கருப்பு கயிறை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். நான் சொல்லப் போகும் இந்த மந்திரம் ஆனது, எனக்கு சிறப்பான பலனை கொடுக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க வேண்டும் என்று இறைவனை மானசீகமாக பிரார்த்தனை செய்யவும். அதன் பிறகு இந்த கருப்பு கயிறில் கொஞ்சம் தள்ளி தள்ளி முடிச்சு போட வேண்டும்.

- Advertisement -

ஒவ்வொரு முடிச்சு போடும்போதும் ‘ஓம் கம் கணபதியே நமஹ’ என்ற மந்திரத்தை சொல்லவும். 9 முடிச்சு அல்லது 27 முடிச்சு. உங்கள் சௌகரியம் போல போட்டுக் கொள்ளுங்கள். இந்த கயிறை பூஜை அறையில் வைத்து விட்டு குலதெய்வத்தை நினைத்து எடுத்து கட்டிக் கொள்ளவும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வர யோகத்தை அள்ளி தரும் பிரதோஷ நேர மந்திரம்

மேல் சொன்னது போலத்தான் கையிலும் கட்டலாம், காலிலும் கட்டலாம், கழுத்திலும் கட்டிக் கொள்ளலாம். நீங்களே இந்த கயிறை தயார் செய்து, நீங்களே இந்த கயிறு கட்டிக் கொண்டாலும் சரி, அல்லது உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் கணவர் இவர்களுக்கு இந்த கயிறை தயார் செய்து கட்டிவிட்டாலும் சரி. இந்த கயிறு அவர்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கும். எளிமையான இந்த பரிகாரதில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -