தேவையற்ற மர்ம இடங்களில் இருக்கக்கூடிய கருமையை பக்க விளைவுகள் இல்லாமல், 10 பைசா செலவில்லாமல், எளிதாக 2 பொருட்களை வைத்தே எப்படி நீக்குவது?

under-arm-clean
- Advertisement -

நாம் என்னதான் சுத்தமாக குளித்தாலும் சில இடங்களில் அதிக கவனிப்பு செலுத்துவது இல்லை. Underarm எனப்படும் அக்குள் பகுதியில் இருக்கக் கூடிய நாட்பட்ட கருமையையும், மர்ம உறுப்புகளில் இருக்கக் கூடிய கருமையையும் அகற்றுவதற்கு அதிகம் செலவில்லாமல், பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் நம் வீட்டில் சாதாரணமாக கிடைக்கக் கூடிய இந்த 2 பொருட்களை வைத்து எப்படி நீக்குவது? என்பதைத் தான் இந்த பதிவில் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பொதுவாக அக்குள் பகுதியில் அதிக கவனம் செலுத்துவது இல்லை! இதனால் நாளடைவில் அங்கு அழுக்குகள் சேர்ந்து கருமையான திட்டுக்கள் படிய ஆரம்பித்து விடும். இதை நீங்கள் என்னதான் சோப்பு போட்டு தேய்த்து குளித்தாலும், அது அவ்வளவு சுலபமாக நீங்கி விடாது. மேலும் இதற்காக அதிக செலவு செய்து செயற்கை ரசாயனங்கள் கொண்ட பொருட்களை பயன்படுத்தி பார்த்தால் அதில் பக்க விளைவுகள் ஏற்படுவது அதிகம் உண்டு.

- Advertisement -

அக்குள் பகுதியில் மட்டும் அல்லாமல், நம் மர்ம உறுப்புகளில் இருக்கக்கூடிய கருமை கூட எளிதாக நீக்குவதற்கு செய்யக் கூடிய அற்புதமான குறிப்பு தான் இது! இந்த குறிப்பை பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து தினமும் செய்ய வேண்டும். நீங்கள் செய்ய செய்ய கொஞ்சம் கொஞ்சமாகத் தான் கருமை மறைய ஆரம்பிக்கும். முதல் நாள் செய்யும் பொழுதே நல்ல ஒரு மாற்றம் தெரியும்! அதை அப்படியே விட்டுவிடாமல் தொடர்ந்து செய்யும் பொழுது தான் முழுமையாக மறையும் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை கப் அளவிற்கு சுத்தம் செய்து வெட்டி வைத்துள்ள வெண்டைக்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்பு அதனுடன் 4 டீஸ்பூன் கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். தயிருக்கு பதிலாக வேறு எந்த ஒரு பொருளையும் பயன்படுத்தக் கூடாது. வெண்டைக்காய் மற்றும் தயிர் சேர்த்த பின்பு நைசாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெண்டைக்காய் மற்றும் தயிர் சேர்க்கும் பொழுது வெண்டைக்காயில் இருந்த வழவழப்பு தன்மை அதிகம் இருக்கும். எனவே நைஸாக எவ்வளவு அரைக்க முடியுமோ, அவ்வளவு அரைத்து எடுத்த பின்பு அதை கருமை நிறைந்துள்ள இடங்களில் நன்கு அடர்த்தியாக பூசி விட வேண்டும். இதில் இருக்கும் வழவழப்பு தன்மை காரணமாக உலர்வதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எனவே பொறுமையாக உலரும் வரை காத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 30 நிமிடம் காத்திருந்தால் தான் அது நன்கு உலரும். அதன் பின்பு நீங்கள் தண்ணீர் ஊற்றி கழுவும் பொழுது நன்கு தேய்த்து கொடுத்து கழுவ வேண்டும். அப்போது தான் சருமத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த கருமை மெல்ல மெல்ல நீங்க ஆரம்பிக்கும்.

30 நிமிடம் வரை தினமும் காத்திருக்க முடியாதவர்கள், இரவு நேரங்களில் இதை செய்து பார்க்கலாம் அல்லது உங்களுக்கு எப்பொழுது நேரம் இருக்கிறதோ, அப்போது மட்டும் கூட செய்து பார்த்துக் கொள்ளலாம். தொடர்ந்து இதை செய்யும் பொழுது தான் கருமை நீங்கி பழைய நிறத்திற்கு உங்களுடைய சருமம் திரும்பும். இதில் பக்க விளைவுகள் தரக்கூடிய எந்த பொருளும் இல்லாததால் தாராளமாக எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.

- Advertisement -