- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalதீய சக்திகளை விரட்டியடிக்கும் எலுமிச்சை பரிகாரம்

தீய சக்திகளை விரட்டியடிக்கும் எலுமிச்சை பரிகாரம்

- Advertisement -

ஒருவருடைய வீடு எந்த அளவிற்கு நேர்மறை ஆற்றலுடன் இருக்கிறதோ அந்த அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையும் சிறப்பாகவே இருக்கும். இதற்கு மாறாக எதிர்மறை ஆற்றல்கள் நிறைந்திருந்தால் அவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் எந்தவித நன்மையும் அவர்களுக்கு நடக்காது. இந்த எதிர்மறை ஆற்றல்களை பல வகைகளில் பிரிக்கலாம். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு என்று கூறுவோம். இதில் எதுவாக இருந்தாலும் அவை அனைத்தையும் சரி செய்வதற்கு எலுமிச்சம் பழத்தை வைத்து எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

எலுமிச்சை பரிகாரம்

நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் தெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக இருக்க வேண்டும். தெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும் என்றால் அந்த வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் விலக வேண்டும். இப்படி எதிர்மறை ஆற்றல்களை விலக்குவதற்கும் தெய்வத்தின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் எதிர்மறை ஆற்றல்கள் அதாவது தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவும் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். இரண்டு நாட்களும் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளே ஐந்து புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம் பழமாக பார்த்து வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். செவ்வாய்க்கிழமை அன்று காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு இந்த ஐந்து எலுமிச்சம் பழங்களையும் எடுத்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும்.

அதில் ஒரு பழத்தை எடுத்து இரண்டாக நறுக்கி அதில் குங்குமத்தை தடவி நிலை வாசலுக்கு வெளியே இரண்டு புறங்களிலும் வைத்து விடுங்கள். பிறகு கை கால்களை கழுவி விட்டு மறுபடியும் பூஜை அறைக்கு வந்து ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து அதில் தண்ணீரை பிடித்து அதற்குள் ஒரு எலுமிச்சம் பழத்தை போட்டு உங்கள் வீட்டின் ஹாலில் ஒரு ஓரமாக வைத்து விடுங்கள்.

- Advertisement -

மூன்றாவதாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சமையலறையில் ஒரு ஓரமாக சிறிய கோலத்தை போட்டு அந்த கோலத்திற்கு நடுவே வைத்து விடுங்கள். நான்காவதாக ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து எந்த இடத்தில் நீங்கள் பணம் நகை வைத்து இருக்கிறீர்களோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும். கடைசியாக இருக்கக்கூடிய எலுமிச்சம் பழத்தில் மஞ்சள் குங்குமம் வைத்து அதை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

அவ்வளவுதான் பரிகாரம். மறுபடியும் வியாழக்கிழமை அன்று இந்த பழைய எலுமிச்சம் பழங்கள் அனைத்தையும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். வெள்ளிக்கிழமை காலையில் மறுபடியும் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இதே போல் எலுமிச்சம் பழத்தை வைக்க வேண்டும். இப்படி நீங்கள் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

வீட்டில் தீய சக்திகள் இருக்கிறது, எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்னும் பட்சத்தில் எலுமிச்சம் பழம் அழுகிவிடும். அப்படி எந்தவித பாதிப்புகளும் இல்லாத பட்சத்தில் எலுமிச்சம்பழம் காய்ந்து விடும். இதை வைத்தே நம் வீட்டில் எந்த அளவிற்கு எதிர்மறை ஆற்றல்கள் இருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். இப்படி எலுமிச்சம் பழம் அழுகினாலும் தொடர்ச்சியாக நாம் இந்த பரிகாரத்தை செய்யும்போது அந்த எலுமிச்சம் பழம் நம் வீட்டில் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தையும் நீக்கி அம்மனின் அருளை பரிபூரணமாக கொண்டு வந்து சேர்க்கும்.

இதையும் படிக்கலாமே:ஆஷாட நவராத்திரியில் செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம்
மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை அம்மனின் மீது முழு நம்பிக்கை வைத்து செய்வதன் மூலம் விரைவிலேயே தீய சக்திகளால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்