உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களும் இந்த தோசையில் அடங்கும். புரோட்டீன் சத்துக்கள் நிறைந்திருக்கும் இந்த தோசையை மிஸ் பண்ணாம தெரிஞ்சு வெச்சுக்குங்க!

proteit-dosa
- Advertisement -

நம்முடைய வீட்டில் தினமும் சாப்பிடும் தோசையை கொஞ்சம் வித்தியாசமாக சாப்பிட்டால் நம்முடைய உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் கிடைக்கும். அப்படி ஒரு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தோசை ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தோசையை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் செய்து கொள்ளுங்கள். நிச்சயமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

proteit-dosa1

இட்லி அரிசி – 1 கப், பச்சை பயிறு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், மைசூர் பருப்பு – 1/2 கப், உளுந்து – 2 டேபிள் ஸ்பூன், வேர்க்கடலை – 2 டேபிள்ஸ்பூன், பாதாம் – 10, இந்தப் பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் ஒன்றாக போட்டு நன்றாக கழுவி அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி 6 மணி நேரம் ஊற வைத்து விடுங்கள்.

- Advertisement -

ஊறிய இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த பொருட்களோடு ஒரு கொத்து கருவேப்பிலை, சிறிய துண்டு இஞ்சி, பச்சை மிளகாய் 1, சீரகம் 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த மாமாவுக்கு தேவையான உப்பு போட்டு கலந்து ஒரு மூடி போட்டு 30 நிமிடங்கள் இதை அப்படியே புளிக்க வைத்து விடுங்கள்.

proteit-dosa2

அதன் பின்பு தோசைக் கல்லில் எப்போதும் போல தோசை வார்த்துக் கொடுத்தால், சத்துக்கள் நிறைந்த தோசை தயார். மெல்லிசாக தோசைக்கல்லில் இந்த தோசையை ஊற்றி நெய் ஊற்றி சிவக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுங்கள். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இந்த தோசையில் உள்ளது. இதற்கு சைட் டிஷ் ஆக உங்கள் விருப்பம் போல சட்னி சாம்பார் வைத்து பரிமாறிக் கொள்ளலாம்.

- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் குழந்தைகள் சரியாக சாப்பிடுவது கிடையாது. ஸ்கூலுக்கு செல்லாமல், வீட்டில் இருந்தபடியே குழந்தைகள் சரியாக சாப்பிடாமல் உடல் பலவீனமாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஒரு ஊட்டச் சத்து பவுடரை நம்முடைய வீட்டிலேயே எப்படி அரைப்பது என்பதையும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

proteit-powder

பிஸ்தா 1/4 கப், வேர்க்கடலை – 1/4 கப், பாதாம் 1/4 கப், முந்திரி 1/4 கப், அக்ரூட் கொட்டை உள்ளே இருக்கும் பருப்பு – 1/4 கப், இந்த எல்லா பொருட்களையும் சம அளவில் எடுத்து ஒவ்வொன்றாக மிதமான சூட்டில் இருக்கும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். வறுத்த பொருட்கள் நன்றாக ஆறியதும் மிக்ஸியில் போட்டு முதலில் பல்ஸ் பட்டனில் வைத்து பொடி செய்துவிட்டு, அதன் பின்பு மிக்ஸியை மெதுவாக ஓடவிட்டு, அரைத்துக் கொள்ளுங்கள்.

proteit-powder1

இதில் நாம் வேர்க்கடலை பாதாம் சேர்த்திருப்பதால் அதிக நேரம் மிக்ஸியை ஓட விட்டால், லேசாக எண்ணெய் பிரிந்து வர தொடங்கும். மிக்ஸி சூடாகாமல் இந்தப் பவுடரை அரைக்க வேண்டும். அவ்வளவு தான். ஊட்டச்சத்து நிறைந்த இந்த பவுடரை அரைத்த சூடு ஆறியதும், இந்த பவுடரை ஒரு பாட்டிலில் போட்டு, பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக்கொண்டால் ஒரு மாதத்திற்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.

proteit-powder2

தினமும் குழந்தைகளுக்கு பாலில் ஊட்டச்சத்து நிறைந்த இந்தப் பவுடரை 1 ஸ்பூன் போட்டு கலந்து கொடுத்தால் போதும். உடல் ஆரோக்கியம் பெறும். நன்றாக சாப்பிடாத குழந்தைகளுக்கும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்து இருந்தால் உங்களுடைய வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -