- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்க ஹனுமன் வழிபாடு

கை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைக்க ஹனுமன் வழிபாடு

- Advertisement -

உழைத்து செய்யக்கூடிய எந்த வேலையாக இருந்தாலும் அது கௌரவமான வேலை தான். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால், சில பேர் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் தங்களுடைய தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் ரொம்பவும், தாழ்ந்த நிலையில் சின்ன வேலையை செய்து கொண்டிருப்பார்கள். லட்சக்கணக்கில் சம்பாதிக்க கூடிய தகுதியும் திறமையும் அவர்களிடத்தில் இருக்கும். நிறைய வேலைக்காக முயற்சி செய்வார்கள்.

நிறைய இன்டர்வியூக்கு போவாங்க. ஆனால் ஒரு நாளைக்கு 100 ரூபாய் கூட சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடையாது. இப்படிப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கும் இருந்தால், நீங்களும் கௌரவமான இடத்தில், இருக்கும் திறமைக்கு, படித்த படிப்புக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று நினைத்தால், அனுமனுக்கு இந்த மாலையை கட்டி போடுங்கள். நிச்சயம் ஒரு சில வாரத்தில் உங்களுக்கு நல்ல வேலை, நீங்கள் நினைத்தபடி கிடைக்கும். அதுவும் கைநிறைய சம்பளத்தோடு.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க ஹனுமான் பரிகாரம்

11 வெற்றிலை, பச்சை நிற நூலால் கட்டி அப்படியே கொண்டு போய் அனுமனுக்கு மாலையாக போட வேண்டும். பாக்கு வைக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வெறும் வெற்றிலை மாலை கட்டினால் போதும். இந்த மாளையை எந்த கிழமையில், எந்த நேரத்தில் அனுமனுக்கு போடுவது.

புதன்கிழமை காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த மாலையை அனுமனுக்கு போட்டு, ஹனுமனை 11 முறை வலம் வந்து, அந்த கோவிலில் நமக்கு வேலை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும் நல்ல வேலை கிடைக்கும். புதன்கிழமை புதன் ஹோரையில், அனுமனுக்கு மாலை போடுவது வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிறப்பான பலனை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதே மாலை தான், இதே வழிபாடு தான், ஆனால் கிழமைகளை மாற்றும் போது வெவ்வேறான பலனை நாம் பெறலாம். சில பேருக்கு மனக்குழப்பம், மன அழுத்தம், மன பாரம் இருக்கும். இதனால் வாழ்வு ரொம்பவும் கசக்கும். இரவில் தூக்கம் வராது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருப்பவர்கள், மனக்குழப்பத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்து வருபவர்கள். திங்கள்கிழமை இதே மாலையை அனுமனுக்கு போடுங்கள். மனக்குழப்பம் விலகும். மனம் தெளிவு பெறும்.

வீடு வாங்க வேண்டும். நிலம் வாங்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும் என்றால், செவ்வாய்க்கிழமை இதே மாலையை, செவ்வாய் ஹோரை வரும் நேரத்தில் அனுமனுக்கு சாத்தி வேண்டுதல் வைக்க வேண்டும். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும்.

- Advertisement -

நிறைய பணக்கஷ்டம் இருக்கிறது. வருமானம் இல்லை, பிள்ளையுடைய திருமணத்திற்கு பணம் தேவை, தங்கம் வாங்க வேண்டும், தொழிலுக்கு முதலீடு தேவை என்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்காக நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் இதே மாலையை வியாழக்கிழமை கொண்டு போய் அனுமனுக்கு போடுங்கள்.

வெள்ளிக்கிழமை இதே மாலையை அனுமனுக்கு போட்டால் வீட்டில் இருக்கும் சுப காரிய தடைகள் விலகும். வீட்டில் மங்கலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவி சண்டை தீரும்.

சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டும், தொழிலில் முடக்கம் இருக்கக் கூடாது, அனைவரும் நம்மை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு பெரிய அளவில் வாழ வேண்டுமென்றால், கடன் தீர வேண்டும் என்றால், சனி பகவான் கஷ்டங்களில் இருந்து விடுபட வேண்டும் என்றால், சனிக்கிழமை அனுமனுக்கு இந்த மாலையை கட்டி போட வேண்டும்.

வியாபாரத்தில் கொடி கட்டி பறக்க வேண்டும், நோய்நொடி விலக வேண்டும், கண் திருஷ்டி விலக வேண்டும், குடும்ப சண்டைகள் தீர வேண்டும் என்றால், இதே மாலையை ஞாயிற்றுக்கிழமை கொட்டிக் கொண்டு போய் அனுமனுக்கு போடுங்கள். எந்த கிழமையாக இருந்தாலும், காலை 6:00 மணியிலிருந்து 7:00 மணிக்குள் இந்த மாலையை கட்டிக்கொண்டு போய் அனுமனுக்கு சாத்தி நம்பிக்கையோடு பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் முருகனின் பாடல்

ஒரு வாரம் மட்டும் இந்த பரிகாரத்தை செய்துவிட்டு பலனை எதிர்பார்க்க கூடாது. 11 வாரம் இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்யும்போது உங்களுக்கான பலன் அபரிவிதமாக கிடைக்கும். சில பேருக்கு ஒரு வாரம் இந்த மாலை போட்ட உடனே நல்லது நடந்து விடும். இருந்தாலும் பரிகாரத்தை நிறுத்தக்கூடாது. தொடர்ந்து செய்து வாருங்கள். நல்லதே நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்