புதினா சாதத்தை இப்படியும் கூட ரொம்ப ரொம்ப ஈஸியா செய்யலாமா? அவசர அவசரமாக சமைக்கும் காலை நேரத்திற்கு ஏற்ற லஞ்ச் பாக்ஸ் ரெசிபி.

rice3
- Advertisement -

காலையில் அவசர அவசரமாக காலை உணவு தயார் செய்ய வேண்டும். அதே சமயம் கணவருக்கு குழந்தைக்கு லஞ்ச் பாக்ஸில் கட்டிக் கொடுக்கவும் ஒரு மெனு ரெடி பண்ண வேண்டும். அப்படிப்பட்ட அவசர அவசரமான சமயத்தில் ஹெல்தியாக ஒரு புதினா சாதத்தை குக்கரில் எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். சாதம் கூட வடிக்க தேவையில்லை. குக்கரில் எல்லா பொருட்களையும் போட்டு கலந்து இரண்டு விசில் வைத்தால் மணக்கம் மணக்க ஹெல்தியான புதினா சாதம் தயார். வாங்க நேரத்தை கடத்தாமல் இந்த இன்ட்ரஸ்டிங்கான ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

முதலில் 1 கப் அளவு அரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு கழுவி 10 லிருந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். புழுங்கல் அரிசி, பச்சரிசி பாசுமதி அரிசி, எதுவாக இருந்தாலும் சரி தண்ணீர் ஊற்றும் போது மட்டும் அதற்கான அளவை மாற்றிக் கொள்ள வேண்டும். மற்றபடி எல்லாம் பின் சொல்லக்கூடிய அளவுகளை பின்பற்றினாலே போதும்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தோல் உரித்த பூண்டு பல் – 8, தோல் சீவிய இஞ்சி துண்டுகள் – 2 இன்ச், பச்சை மிளகாய் – 4, புதினா தழைகள் – 2 கைப்பிடி, சிறிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்களை எல்லாம் போட்டு 1/4 கப் மட்டும் தண்ணீர் ஊற்றி விழுது போல இதை அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும். நிறைய தண்ணீர் ஊற்றி அரைக்க கூடாது.

அடுத்து ஒரு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் – 2 ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை – 1, அன்னாசி பூ – 1, லவங்கம் – 2, உளுந்து – 1 ஸ்பூன், கடலைப்பருப்பு – 1 ஸ்பூன், வேர்கடலை – 2 ஸ்பூன் அல்லது முந்திரிப் பருப்பு இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக பொன் நிறமாக மணக்க வறுத்து பெருங்காயத்தூள் – 1/4 ஸ்பூன் சேர்த்து மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் புதினா விழுதை இதில் ஊற்றி மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், சேர்த்து புதினா சாதத்திற்கு தேவையான உப்பு போட்டு, 2 நிமிடம் போல புதினா விழுதை நன்றாக வதக்கி விட வேண்டும்.

- Advertisement -

புதினாவில் நாம் எல்லா பொருட்களையும் பச்சையாக தான் சேர்த்திருக்கிறோம் அல்லவா. எண்ணெயில் எல்லா பச்சை வாடையும் நீங்கிய பின்பு 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து, அதன் பின்பு ஊற வைத்திருக்கும் அரிசியை இதில் போட்டு மீண்டும் தலதலவென கொதிக்க வையுங்கள். அதன் பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து குக்கரை மூடி இரண்டு விசில் விட்டால் மணக்க மணக்க புதினா சாதம் தயார்.

நீங்கள் பயன்படுத்துவது பாஸ்மதி அரிசியாக இருந்தால் 1 கப் அரிசிக்கு, 1 1/2 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். மற்றபடி சாப்பாட்டு அரிசி பயன்படுத்துவதாக இருந்தால் ஒன்றுக்கு, இரண்டு கப் அளவு தண்ணீர் எப்போதும் போல வைத்துக் கொள்ளலாம். தண்ணீரின் அளவை மட்டும் கொஞ்சம் கவனமாக ஊற்றுங்கள். உங்க வீட்டு அரிசி எப்படி வேகமா அதன்படி விசில் வையுங்கள். அவ்வளவு தான். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி இருந்தால் கூட சூப்பராக சாப்பிட்டு விடலாம். உடலுக்கு ஆரோக்கியமுமானது. நாவிற்கு சுவையும் கொடுக்கக் கூடியது. மிஸ் பண்ணாம இந்த ஒன் பாட் புதினா ரைஸ் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -