இந்த ஐடியா நல்லாதா இருக்கு. இனி பிரியாணி, குஸ்கா செய்யும் போது புதினா இல்லையே என்ற கஷ்டம் யாருக்கும் வரவே வராது. அவசர அவசரமா கடைக்கு போய் புதினா வாங்க வேண்டாம்.

biriyani_tamil
- Advertisement -

நம்முடைய வீட்டில் இருப்பவர்கள் தற்போது விருப்பமாக சாப்பிடக்கூடிய ரெசிபி என்றால் இப்போது அந்த பட்டியலில் முதலிடம் பிடிப்பது பிரியாணி, குஸ்கா, தேங்காய் பால் சாதம், நெய் சோறு, இதில் ஏதாவது ஒன்று வருகிறது. இந்த ரெசிபிக்கு வாசம் கொடுக்க மிக மிக முக்கியமான ஒரு பொருள் தேவை. அதுதான் புதினா. பல சமயம் நம்முடைய வீட்டில் புதினா இருக்காது. புதினா இல்லாமல் செய்தால் இந்த ரெசிபிகளுக்கு சுவையும் வராது. சில பேர் அக்கம்பக்கம் வீட்டில் இருப்பவர்களிடம் கடன் கேட்பார்கள்

சில பேர் கடைக்கு போய் வாங்கிட்டு வருவாங்க. அவ்ளோ கஷ்டப்பட்டு கடைக்கு போய் வாங்கி வந்த புதினாவை ஒரு கைப்பிடி பயன்படுத்திவிட்டு, மீதமிருக்கும் புதினாவை ஃப்ரிட்ஜில் போட்டால் அது கருத்து போய் வீணாகி கீழேதான் போகும் குப்பைக்கு. புதினாவை மாத கணக்கில் கெட்டுப்போகாமல் ஸ்டோர் செய்து வைத்து மீண்டும் எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றிய ஒரு சின்ன குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

ஃபிரஷ்ஷாக வாங்கிய புதினா இலைகளை கிள்ளி நன்றாக தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். கழுவிய புதினாவைர தண்ணீரை வடிகட்டி விடுங்கள். சுத்தமாக தண்ணீர் வடிந்தவுடன் ஒரு வெள்ளை துணியில் புதினா இலைகளை பரப்பி போட்டு வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். புதினா ஈரம் போக மொறுமொறுப்பாக சுத்தமாக காய்ந்ததும் அந்த புதினாவை அப்படியே ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

வெயில் குறைவாக இருக்கும் சமயத்தில், ஈரம் புதினாவில் இருந்து நீங்கி விட்டது. ஈரத்தன்மை சுத்தமாக இல்லை. ஆனால் புதினா நன்றாக காயவில்லை எனும் பட்சத்தில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து நன்றாக சூடு செய்து அடுப்பை அணைத்து விடுங்கள். அந்த கடாயில் இருக்கும் சூட்டிலேயே இந்த புதினாவை போட்டு லேசாக சூடு செய்து நன்றாக ஆற வைத்து பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த புதினாவை தாராளமாக எடுத்து நீங்கள் பிரியாணிக்கு தாளிக்கும் போது, வெங்காயம் தக்காளியோட வதக்கி பாருங்க. பச்சை புதினா போட்ட வாசனையே உங்களுக்கு கிடைக்கும். திடீரென்று புதினா சட்னி அரைக்க வேண்டும் என்றால் தேங்காயோடு இந்த புதினாவை சேர்த்து தாராளமாக சட்னி செய்யலாம். ஃபிரஷ்ஷாக புதினா வாங்கி சட்னி அரைத்தது போலவே சூப்பரான சுவை கிடைக்கும். ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு ஃப்ரிட்ஜில் கூட வைக்க வேண்டாம் வெளியில் வைத்தாலே மூன்று மாதம் ஆனாலும் இந்த காய்ந்த புதினா கெட்டுப் போகாது.

சரிங்க புதினா சாப்பிட்டால் உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. தினமும் புதினாவை சாப்பிடுவதற்கு ஏதாவது ஐடியா இருக்கா. இருக்கு. சூப்பரான புதினா பொடி ரெசிபி இதோ. அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளவும். அது நன்றாக சூடான பிறகு எண்ணெய் ஊற்றாமல் இந்த பொருட்களை எல்லாம் தனித்தனியாக போட்டு பொன்னிறம் வரும் வரை வறுத்து எடுக்க வேண்டும். வரமல்லி – 1 டேபிள் ஸ்பூன், உளுந்து – 4 டேபிள் ஸ்பூன், கடலைப்பருப்பு – 4 டேபிள் ஸ்பூன், எள்ளு – 4 டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 5, காய வைத்து எடுத்து வைத்திருக்கின்றோம் அல்லவா அதில் இருந்து 1 கைப்பிடி அளவு – புதினாவை கடாயில் போட்டு கையில் எடுத்து மொறு மொறுவென உடையும் அளவிற்கு வறுத்து எடுத்துக்கோங்க.

இப்ப வறுபட்ட எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு, கொஞ்சமாக பெருங்காயத்தூள் சேர்த்து இதை கொறகொறப்பாக இட்லி பொடி போல அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். தினமும் சுட சுட சாதத்தில் இதை போட்டு நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பிசைந்தும் சாப்பிடலாம். அப்படி இல்லை என்றால் இட்லி தோசைக்கு இட்லி பொடி போல வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கலந்தும் தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். சூப்பரான ஆரோக்கியமான இந்த புதினா பொடி ரெசிபி பிடிச்சிருந்தாலும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -