ருசியான புதினா துவையல் செய்வது எப்படி

Pudhina-Thogayal
- Advertisement -

காலை சிற்றுண்டிகளுக்கும், மதிய உணவிற்கும் தொட்டுக்கொள்வதற்கு என்ன பதார்த்தங்களை செய்வது என்ற சிந்தனை நம்மில் பலருக்கும் வந்ததுண்டு. இந்த இரு வேளை உணவுகளுக்கும் தொட்டுக்கொள்வதற்கு சிறந்த உணவாகவும் அதே நேரத்தில் சத்து மிகுந்ததாகவும் இருப்பது புதினா துவையல். இந்த புதினா தொகையலை சுவை மிக்கதாக எப்படி செய்வது என இங்கு காண்போம்.

Pudhina thokku

தேவையான பொருட்கள்
புதினா இலைகள் – 1 கோப்பை
உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
சிவப்பு மிளகாய் – 10
புளி – ஒரு சிறிய உருண்டை அளவு
வெல்லம் ( தேவைப்பட்டால் ) – 1 தேகரண்டி
தேங்காய் (தேவைப்பட்டால் ) – 2 மேஜை கரண்டி
உப்பு – 1/2 அல்லது 1 தேக்கரண்டி

- Advertisement -

சமைப்பதற்கு ஆகும் நேரம்: 10 நிமிடங்கள்
சாப்பிடக்கூடிய நபர்களின் எண்ணிக்கை: 4

புதினா துவையல் செய்முறை

அடுப்பில் தீ மூட்டி, அதில் ஒரு கடாய் வைத்து உளுத்தம் பருப்புகளையும், சிவப்பு மிளகாய்களையும் பொன்னிறமாக வரும் வரை வறுக்க வேண்டும்.

- Advertisement -

பின்பு அதில் புளியையும், நீரில் கழுவி சுத்தம் செய்யப்பட்ட புதினா இலைகளையும் ஒன்றாக போட்டு 1 நிமிடம் நேரம் புதினா இலைகள் வதங்கும் வரை மிதமான வெப்பத்தில் வதக்க வேண்டும்.

Pudhina thogaiyal
பின்பு அடுப்பிலிருந்து புதினா வதக்கலை இறக்கி அதை ஆற விட்டு தேங்காய் வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீர் விட்டு மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து எடுக்க புதினா துவையல் தயார்.

இந்த முறையில் புதினா தொகையலை செய்யும் போது, இதில் மிளகாய், புளி மற்றும் உப்பு ஆகிய மூன்றையும் சரியான விதத்தில் சேர்க்கும் போது துவையல் நன்றாக இருக்கும்.

- Advertisement -

Pudhina thogaiyal

தேங்காய் மற்றும் வெல்லத்தை சேர்ப்பதால் புதினா துவையல் சுவையாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே:
பூ போன்ற இட்லி செய்வது எப்படி

இத்துடன் மேலும் பல சுவையான சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pudina thogayal recipe in Tamil language. It can also be called as Pudina thogayal araipathu eppadi or Pudina thogayal seimurai in Tamil. Pudina thogayal for rice and Idli will be superb. We have added steps for Pudina thogayal without coconut too.

- Advertisement -