இந்த நாள் என் வாழ்நாள் முழுவதும் என் நினைவில் இருக்கும் – தொடர்நாயகன் புஜாரா

pujara
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிட்னியில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் மழை காரணமாக நிறுத்தப்பட்டதால் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வி இன்றி ஆட்டம் டிராவில் முடிந்தது. ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி இரு போட்டிகளை வென்றதால் தொடரை கைப்பற்றி அசத்தியது.

pujara

விராட் கோலி தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய மண்ணில் 30 வருடங்களுக்கு பிறகு பாலோ ஆன் செய்யவைத்த அணி என்ற பெருமையும் இந்திய அணி பெற்றது.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் 193 ரன்கள் அடித்த இந்திய வீரர் புஜாரா ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார். அப்போது அவர் பேசியதாவது : இந்த நிகழ்வு எங்கள் அணிக்கு மிகுந்த மகிழ்ச்சியான தருணம். வெளிநாட்டு தொடர்களில் நாங்கள் கடுமையாக உழைத்தோம் அதன் பலனாக சமீபத்தில் நடந்த அனைத்து வெளிநாட்டு தொடர்களிலம் எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் இந்த தொடரில் மிகச்சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தினர். இந்த தொடரில் மூன்று சதங்கள் அடித்தாலும் அடிலெய்டு டெஸ்டில் அடித்த சதம் எனக்கு மிகவும் பிடித்தது. ஏனெனில், அந்த போட்டியை நங்கள் வென்று தொடரை (1-0) என்று முன்னிலை வகித்தோம். இந்த நாள் என்வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நாள் மேலும் தொடர்ந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.

இதையும் படிக்கலாமே :

பேங்க் அதிகாரிக்கு பயந்து காரை மறைத்து வைத்தேன் – ஹார்டிக் பாண்டியா

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -