புளிச்ச தோசை மாவை இனிமே கீழே கொட்டாதீங்க! அந்த மாவிலிருந்து, புளிப்பை தனியாக பிரித்து எடுத்துவிடலாம். சமையலறையில் சில டிப்ஸ்.

dosai-mavu

இன்றைக்கு நம் வீட்டுல் ஃப்ரிட்ஜ் இருக்கற ஒரே காரணத்துக்காக, நிறைய பொருட்களை அதில் வைத்து வீணாகிக் கொண்டிருக்கின்றோம். அந்த வரிசையில் கருவேப்பிலை, புதினா குறிப்பாக இட்லி மாவு, தோசை மாவு இவை அனைத்தையும் பிரிட்ஜில வெச்சுடுவோம். ஃப்ரிட்ஜில் வைத்து கெட்டுப் போகக்கூடிய இந்த பொருட்களை எல்லாம், கெட்டுப் போகாமல் எப்படி பயன்படுத்தலாம், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

karuvepilai

கருவேப்பிலையை ஃப்ரிட்ஜில் வைக்காமல், அதை வெயிலில் நன்றாக காய வைத்து விடுங்கள். ஒரு பேப்பரில், கருவேப்பிலையை காம்பிலிருந்து உருவிப் போட்டு நன்றாக உலர வைத்து விட்டீர்கள் என்றால், ஒரு டப்பாவில் சேகரித்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் வைக்கும் சாம்பார், குழம்பு, சட்னி தாளிக்க எதுவாக இருந்தாலும் அதில் நான்கு கருவேப்பிலையை எடுத்து கையாலேயே நொறுக்கிப் போட்டால் மிகவும் நல்லது. குறிப்பாக இப்படி போடும் கருவேப்பிலையை யாரும் தூக்கி தூர போட மாட்டார்கள்.

இதேபோல் புதினா இலைகளை வெயிலில் காயவைத்து, அந்த இலைகளை, காலையில் டீ போடும்போது, அந்த டீயுடன் இரண்டு இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. காயவைத்த புதினா இலைகள் ஆக இருந்தாலும், கருவேப்பிலை இலைகளாக இருந்தாலும், வருடக்கணக்காக ஆனாலும் கெட்டுப் போகாது.

puthina

நிறைய பேர் வீடுகளில் 10 நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள மாவானது நன்றாக புளித்து விடும். மாவை பிரிட்ஜில் வைத்தால் கூட, அந்த மாவின் மேல், வெற்றிலையை காம்பு கில்லாமல், கவிழ்த வாறு போட்டு வையுங்கள். மாவு புளிக்காது.

- Advertisement -

ஒருவேளை மாவு நன்றாக புளித்து விட்டால், பிரிட்ஜில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட அந்த மாவில், 1/2 லிட்டர் அளவு மாவு இருந்தால், அதில் 1டம்லர் அளவு தண்ணீரை ஊற்றி விடுங்கள். ஊற்றிய தண்ணீரை, மாவோடு சேர்த்து நன்றாக கலக்கி விடக்கூடாது. லேசாக கலந்தால் மட்டும் போதும்.

idli-mavu

அதன் பின்பு, அந்த மாவை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டீர்கள் என்றால், நீங்கள் ஊற்றிய தண்ணீரானது மேலே தெளிந்து வந்திருக்கும். அந்த தண்ணீரை மட்டும் கீழே ஊற்றி விட்டு, மீதமுள்ள மாவை தோசை சுட்டு சாப்பிடலாம். புளிப்பு தன்மை, அந்தத் தண்ணீரிலேயே கீழே போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாவை இட்லி ஊற்ற முடியாது தோசைக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

இறுதியாக, நிறைய பேர் வீடுகளில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தவே மாட்டார்கள். ஆனால், பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயத்தில் தான் ஆரோக்கியம் அதிகமாக இருக்கின்றது. சின்ன வெங்காயத்தை உரிக்க சிரமப்பட்டே பலபேர் வாங்கவே மாட்டார்கள்.

onion

முதலில் சிறிய வெங்காயத்தினுடைய காம்பையும், வால் பகுதியையும் கத்தியில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதாவது சிறிய வெங்காயத்தின் மேல்பகுதி, கீழ்ப்பகுதி இவை இரண்டையும் வெட்டி விடுங்கள். அதன்பின்பு, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அந்த தண்ணீரில் காம்பு வெட்டிய சிறிய வெங்காயத்தை போட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் வரை அப்படியே அது ஊறட்டும்.

அதன் பின்பு, இரண்டு கைகளையும் வைத்து தண்ணீரில் இருக்கின்ற சிறிய வெங்காயத்தை நன்றாக நிமிடி, அலசி விட்டீர்கள் என்றால், தோல் தானாக உரிந்து விடும். நன்றாக அலசி வெங்காயத்தை மட்டும் தனியாக எடுத்து விடலாம். ஒருசில வெங்காயங்கள் மட்டும் தோல் உரிக்காமல் இருக்கும். அதை மட்டும் கையில் லேசாக எடுத்தாலே சுலபமாக வந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
நீங்கள் எந்த நகை போட்டாலும், மத்தவங்க பார்த்து கண்திருஷ்டி வைக்கிறார்களா? ஆசையாக வாங்கிய நகைக்கு, ஆபத்து உண்டாகாமல் பாதுகாக்க என்ன செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have pulicha maavu tips. pulicha maavu dosa. pulicha dosa maavu recipe. dosai maavu seivathu eppadi