நீங்கள் எந்த நகை போட்டாலும், மத்தவங்க பார்த்து கண்திருஷ்டி வைக்கிறார்களா? ஆசையாக வாங்கிய நகைக்கு, ஆபத்து உண்டாகாமல் பாதுகாக்க என்ன செய்வது?

சிலபேர் எப்பாடு பட்டு, பணத்தை சேர்த்து, சீட்டு போட்டு ஒரு நகையை வாங்கி கழுத்திலோ, காதிலோ போட்டிருப்பார்கள். சில பேரின் கண் திருஷ்டி மிகவும் பொல்லாத கண்ணாக இருக்கும். அந்த நகையை பார்த்து, இந்த நகை மிகவும் அழகாக உள்ளதே! எப்போது வாங்கினீர்கள்? என்று கேட்டாலே போதும். அதற்குள் நம் வீட்டிற்கு ஏதாவது ஒரு கஷ்டம் வந்து விடும். அந்த நகை அடமானம் சென்றுவிடும். இல்லை என்றால் உடைந்துவிடும். இல்லை என்றால் திருடு போய்விடும்.

Gold rate in Saravana stores

இப்படி உங்களுடைய தங்க நகைக்கு கண் திருஷ்டி படாமல் இருக்கவும், வாங்கிய நகையை எந்த பிரச்சனையும் இல்லாமல் போட்டு அழகு பார்க்கவும், மேலும் மேலும் தங்கம் வாங்கும் ராசி அமைய வேண்டுமென்றால் என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை உங்கள் வீட்டு பூஜை அறையில் செய்தாலும் சரி. இல்லை உங்கள் வீட்டில் ஹாலில் வைத்து செய்தாலும் சரி. ஆனால் சுத்த பார்ப்பதோடு செய்ய வேண்டும். ஒரு தட்டின் மேல், தீபம் ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள். மண் அகல் தீபமாக இருந்தாலும் சரி. காமாட்சியம்மன் தீபமாக இருந்தாலும் சரி.

deepam

அதன் அருகிலேயே சாம்பிராணி தூபம் இருக்க வேண்டும். முடியவில்லை என்றால், கம்ப்யூட்டர் சாம்பிராணி வத்தி மட்டுமாவது ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஒரு சிறிய கிண்ணத்தையோ, அல்லது பூஜைக்காக பயன்படுத்தப்படும் எச்சில் படாத தாம்பூலத் தட்டையோ எடுத்துக் கொள்ளுங்கள். காய்ச்சாத பசும்பால் ஒரு கப் அளவு, அதே அளவு பன்னீர், அதே அளவு இளநீர் இவை மூன்றையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி, இந்த மூன்று பொருட்களும் சேர்ந்த கலவையான நீர்மத்தில், உங்களது நகையை போட்டு, மூன்று முறை முக்கி எடுக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு, நல்ல துண்டைப் போட்டு துடைத்து, நீங்கள் ஏற்றி வைத்து இருக்கிறீர்கள் அல்லவா? தீபம் மற்றும் சாம்பிராணி தூபத்திலும், உங்களது நகையை காட்ட வேண்டும். அந்த சாம்பிராணிப் புகையும், தீப ஒளியின் வெப்பம் உங்களது நகையின் மீது படவேண்டும்.

gold

இதற்காக கொண்டுபோய் நெருப்பில் போட்டு விடாதீர்கள். அனல் படும்படி காட்டினால் போதும். இப்படி செய்யும்பட்சத்தில் உங்களது தங்க நகைக்கு எந்த தோஷமும் ஏற்படாது. கண் திருஷ்டியும் படாது. அடமான கடைக்கும் போகாது. தங்கம் வீட்டில் மேலும் மேலும் சேரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.

Gold rate in Saravana stores

உங்களது நகை அடமானத்திற்கு சென்றாலும், அதை நீங்கள் மீட்டு எடுத்த உடன், மேற்குறிப்பிட்ட முறையில் தோஷத்தை கழித்துவிட்ட, அதன் பின்பு அணிந்து கொண்டால் மீண்டும் அண்டமானது கடைக்கு செல்லாது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று. உங்கள் வீட்டில் தங்கம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பார்க்கலாம் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
கண்ணுக்குத் தெரியாத, துர்தேவதைகளை எல்லாம், எட்டி ஓட வைக்கும், எட்டி மரக்குச்சி!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Thangam sera parikaram Tamil. Thangam thanga pariharam Tamil. Nagai adamanam. Vettil thangam thanga