புளிச்ச கீரை சாப்பிடுவதால் நமக்கு உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

pulicha-keerai

காய்கறிகள், பழங்களை அதிகம் சாப்பிடுவது போன்று கீரையையும் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்பது இயற்கை வழி மருத்துவ சிகிச்சை அளிப்பவர்களின் அறிவுரையாக உள்ளது. நமது நாட்டில் எத்தனையோ வகையான கீரைகள் விளைகின்றன. அதில் அதிகம் விரும்பி சாப்பிடும் வகையில் ஒரு சில கீரை வகைகளே உள்ளன. அதில் ஒன்று தான் புளிச்ச கீரை. இந்த புளிச்ச கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

pulicha keerai

புளிச்ச கீரை நன்மைகள்

புற்றுநோய்

உடலில் செல்களில் ஏற்படும் சில மாற்றங்களால் புற்று நோய் ஏற்படுகிறது. பல வகையான புற்று நோய்கள் இன்று மனித குலத்தை பயமுறுத்துகின்றன. இந்த புற்று நோய் மனிதர்களின் உடலின் பல பாகங்களை பாதிக்கிறது. புளிச்ச கீரையை அதிகளவில் சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலின் செல்கள் வலுப்பெற்று, புற்று செல்களின் வளர்ச்சியை தடுத்து, புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்களை குறைகிறது.

வயிற்று புண்கள்

காலை உணவுகளை தவிர்ப்பதாலும், நேரங்கடந்து சாப்பிடுவதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை உண்பதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. இது உணவை செரிமாணம் செய்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையை குழம்பு, கூட்டு போன்ற பக்குவத்தில் சாப்பிடுவதால் குடல் புண்களை ஆற்றுகிறது. மலக்கட்டை இளக செய்து மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்க்கிறது.

- Advertisement -

pulicha keerai

மாதவிடாய்

மாதவிடாய் என்பது பெண்களுக்கு ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு. ஆனால் பல பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரத்தடை ஏற்படுதல், மாதவிலக்கு தள்ளிப்போதால் போன்றவை ஏற்பட்டு இடுப்பு, அடிவயிறு வலி ஏற்படுகிறது. இத்தகைய காலத்தில் பெண்கள் புளிச்ச கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் மாதவிடாய் பிரச்சனைகள் சீக்கிரத்தில் தீருகிறது.

தோல் வியாதிகள்

புளிச்ச கீரை தோல் வியாதிகளுக்கு சிறந்த நிவாரணமாக இருக்கிறது. புளிச்ச கீரையை நன்றாக மை போல் அரைத்து கொண்டு அதை சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் இருக்கும் இடங்களில் தடவினாலும், அடிக்கடி இக்கீரையை பக்குவம் செய்து சாப்பிடுவதாலும் இதில் நிறைந்திருக்கும் ஆன்டி ஆக்சிடண்டுகள் தலைமுடி, தோல் போன்றவற்றின் நலத்தை மேம்படுத்தும்.

pulicha keerai

ரத்தசோகை

நமது உடலில் ஓடும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி குறைவால் ரத்த சோகை நோய் அல்லது குறைபாடு ஏற்படுகிறது. புளிச்ச கீரையில் பல வைட்டமின் சத்துக்கள் நிரம்பியிருக்கின்றன. இவையனைத்தும் ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ரத்த சோகை குறைபாட்டை போக்குகிறது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியையும் பலப்படுத்துகிறது.

கிருமி நாசினி

புளிச்ச கீரை நன்மையான அமிலங்கள் நிறைந்த ஒரு உணவு பொருளாகும். இதிலிருந்து வெளிப்படும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் எப்படிப்பட்ட கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. புளிச்ச கீரையை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் ரத்தம், செரிமான உறுப்புகள் போன்றவற்றில் தங்கியிருக்கும் நுண்ணுயிரிகளை அழித்து அவர்களின் உடலை நோய்களின் தாக்கத்தில் இருந்து காக்கிறது.

pulicha keerai

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் என்பது உணவில் இருக்கும் தீமையான கொழுப்புகள் உடலில் ரத்தத்தில் படிந்து எதிர்காலத்தில் இதயம் சம்பந்தமான கோளாறுகளை ஏற்படுத்துகிறது. புளிச்ச கீரையில் இத்தகைய கெட்ட கொழுப்புகளை அழிக்கும் சக்தி அதிகம் நிறைந்திருக்கிறது. இதை சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் படிவதை தடுக்கிறது. உடல் எடை அதிகமாகாமல் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு

நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் சத்துகள் இயற்கையிலேயே புளிச்ச கீரையில் அதிகம் இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் தொற்றி உடலெங்கும் பரவும் நோய் கிருமிகளை அழித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும். மேலும் பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும் கவசமாக புளிச்ச கீரை செயல்படுகிறது.

pulicha keerai

வயிறு

இன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது புளிச்ச கீரையை உணவில் அதிகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளில் நிவாரணம் ஏற்படும்.

ரத்த அழுத்தம்

நாற்பது வயதை நெருங்கியவர்கள் அனைவரும் தங்களின் ரத்த அழுத்த நிலை குறித்த தகவல்களை அறிந்திருப்பது அவசியமாகும். புளிச்ச கீரையை சாப்பிடுபவர்களுக்கு உடலின் ரத்த அழுத்த நிலையை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும் ரத்த அழுத்தம் அதிகம் ஆகும் போது வரும் இதய நோய், பக்க வாதம் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

இதையும் படிக்கலாமே:
வாழைப்பூ நன்மைகள்

இது போன்று மேலும் பல ஆரோக்கியம் சார்ந்த குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Pulicha keerai benefits in Tamil. It is also called as Pulicha keerai payangal in Tamil or Pulicha keerai uses in Tamil or Pulicha keerai maruthuvam in Tamil.