அரைத்து வைத்த இட்லி மாவு புளிச்சு போச்சுனா கீழே கொட்டாதீங்க! இந்த 4 பொருளை சேர்த்து இப்படி தோசை சுடுங்க ஒரு கரண்டி மாவு கூட வீணாகாது.

pulitha-idli-maavu-dosai
- Advertisement -

பொதுவாக எல்லோருடைய வீட்டிலும் இட்லி, தோசைக்கு மொத்த மொத்தமாக மாவு அரைத்து வைத்து விடுவது உண்டு. ஒரு வாரம் வரை அந்த மாவு அப்படியே வைத்திருப்பார்கள். தினமும் இட்லி, தோசையாக சுட்டுத் தள்ளி விடுவார்கள். காலையில் எழுந்ததும் என்னடா டிபன் செய்வது? என்று யோசிக்காமல் இருக்க பெரும்பாலான தாய்மார்கள் கையாளும் ஒரு யுக்தி தான் இது. இப்படி அரைச்சு வச்ச மாவு கடைசி நேரத்தில் புளித்துப் போய்விடும். அவ்வளவு மாவையும் வீணாக கீழே கொட்டி விடுவார்கள். புளித்துப் போன அந்த மாவில், இந்த நாலு பொருளை சேர்த்தால் ஒரு கரண்டி மாவு கூட வீணாகாமல் சூப்பரான வித்தியாசமான சுவையுடன் கூடிய தோசை ரெடி! அதை எப்படி செய்வது? என்பதை நீங்களும் தெரிஞ்சுக்கணுமா? மேலும் தொடருங்கள் இந்த பதிவை..

idly-maavu

புளித்த மாவில் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
புளித்த இட்லி மாவு – ஒன்றரை கப், ரவை – ஒன்றரை கப், பச்சரிசி மாவு – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, துருவிய கேரட் – அரை கப், பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – 2 கொத்து, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவிற்கு, சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகு – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவிற்கு.

- Advertisement -

புளித்த மாவில் தோசை எப்படி செய்வது? செய்முறை விளக்கம்:
புளிச்ச மாவு உங்களிடம் எவ்வளவு இருக்கிறதோ அதன் அளவிற்கு ரவையையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரை கப் அளவிற்கு புளித்த மாவு இருந்தால், அதே ஒன்றரை கப் அளவிற்கு எடுத்து ரவையை எடுத்து அதில் மூழ்கும் அளவிற்கு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். ரவை, வறுத்த ரவை, வறுக்காத ரவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது உங்களிடம் இருப்பதை பொறுத்து. பத்து நிமிடம் ரவை ஊறிய பிறகு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கப் அளவிற்கு பச்சரிசி மாவு சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

ravai

அரைத்த இந்த மாவை புளித்த இட்லி மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி மிக்சியை கழுவி அந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதில் துருவிய கேரட் அரை கப், பொடி பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதில் ஒரு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இஞ்சித் துருவல் ஒரு டீஸ்பூன், பொடிப் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொஞ்சம், பொடிப் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் மிளகு ஆகியவற்றை இலேசாக இடித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இப்போது புளிச்ச மாவு தோசை சுடுவதற்கு தயாராகிவிட்டது. இத்தனை பொருட்களையும் நாம் இதில் சேர்த்து உள்ளதால் இதில் இருக்கும் புளிப்புத் தன்மை முழுமையாக நீங்கி இருக்கும். ரவை, பச்சரிசி மாவு எல்லாம் கலந்து இருப்பதால் தோசை அற்புதமான சுவையுடன், அசத்தலான மணமுடன் இருக்கும். தோசைக் கல்லை சூடாக்கி இரண்டு கரண்டி மாவை இதிலிருந்து எடுத்து ஊற்றி கல் தோசை போல் சுடுங்கள்.

ravai_3

சுற்றிலும் ஒரு டீஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு புறம் வெந்ததும், தோசையை திருப்பி போட்டு மொறு மொறுவென்று சுட்டு எடுத்து பரிமாற வேண்டியது தான். இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை சூப்பரான காம்பினேஷன் ஆக இருக்கும். இனியும் தோசைமாவு புளிச்சு போச்சுன்னு வீணாக கீழே கொட்டி விடாதீங்க! இப்படி தோசை சுட்டு ஒரு பிடி பிடித்து விடுங்கள்.

- Advertisement -