மீந்து போன டீ தூளும், புளித்துப் போன இட்லி மாவும் வைத்து இப்படி எல்லாம் கூட செய்ய முடியுமா?

tea-pulitha-maavu
- Advertisement -

எல்லா பொருளும் ரீசைக்கிள் செய்யக்கூடிய வசதியை இறைவனாகவே நமக்கு கொடுத்திருக்கிறார். எனவே எந்த ஒரு பொருளையும் வீணாக வீட்டிலிருந்து தூக்கி எறிய வேண்டிய அவசியமில்லை. அதை ரீசைக்கிள் செய்து நமக்கோ அல்லது நம் வீட்டில் வளரும் அழகிய செடிகளுக்கோ உரமாக கொடுத்தால் மீண்டும் அந்தப் பொருள் வேறு வடிவில் உயிர்பெறும். இந்த வகையில் நம் வீட்டில் மீந்து போன டீத்தூள் மற்றும் புளித்துப் போன இட்லி மாவு கூட வீணாக குப்பைக்கு போக வேண்டிய அவசியமில்லை. அதை வைத்து என்ன செய்ய போகிறோம்? அதை நீங்களும் அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

tea-powder

பச்சை தேயிலையில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கக் கூடிய ஆற்றல் கொண்டுள்ளது. இது நமக்கு மட்டுமல்லாமல் தாவர வகைகளுக்கு கூட மிகவும் பயன் உள்ள சத்துக்களை தரக்கூடியது. அப்படி இருக்க அதனை ஏன் நாம் வீணாகக் குப்பையில் எறிய வேண்டும்? நமக்கும், நம் வீட்டு செடிகளுக்கும் மட்டுமல்லாமல், நம் வீட்டு பாத்ரூம் கதவு, மக், பக்கெட் போன்றவற்றைக் கூட சுத்தம் செய்து தரக்கூடிய அற்புத சக்தியை கொண்டுள்ளது.

- Advertisement -

பொதுவாக நல்ல தண்ணீர் வரும் வீடுகளில் பாத்ரூம் கதவு, டைல்ஸ், பக்கெட் போன்ற பொருட்கள் எளிதில் உப்புக் கரை படிவது இல்லை. இதனால் எப்போதும் அதனை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் அவர்களுக்கு ஏற்படுவது இல்லை. ஆனால் உப்பு தண்ணீர் வரும் வீடுகளில் வாரத்திற்கு ஒரு முறையாவது இவற்றையெல்லாம் சுத்தம் செய்யாவிடில் உப்பு கரை படிந்து நாளடைவில் அது நீங்காமல் நன்கு ஒட்டிக் கொண்டு விடும். இதனால் பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாக தோற்றமளிக்கும். ஆங்காங்கே வெள்ளைத் திட்டுக்கள் படிந்து நாளடைவில் அதில் அழுக்குகள் சேர்ந்து நமக்கு அருவருப்பாக போய் புதிய பாக்கெட், புதிய பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வந்து விடும்.

pvc-door

வாரம் ஒருமுறை இப்படி சுத்தம் செய்தாலும் அதில் இருக்கும் கறைகள் எளிதில் நீங்க வில்லையா? அப்படினா இந்த முறையில் சுத்தம் செய்து பாருங்கள். மீந்து போன டீ தூளை சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு சேர்ந்ததும் அதனை கால் லிட்டர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்து பாதி ஆனதும் வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். வடிகட்டிய இந்த தண்ணீரில் ஷாம்பூ கொஞ்சம் கலந்து கொள்ளுங்கள். 10 நிமிடத்திற்கு அப்படியே ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

பின்னர் அந்த தண்ணீரை கொண்டு பிவிசி கதவில் ஒட்டிக் கொண்டிருக்கும் உப்பு கரைகளின் மீது ஸ்கிரப்பர் கொண்டு லேசாக துடைத்தால் போதும் எளிதாக வந்துவிடும். மேலும் பாத்ரூம் பக்கெட், மக் போன்ற பொருட்களையும் கூட இதை வைத்து சுத்தம் செய்யலாம். அழுக்கு படிந்த பக்கெட், மக் போன்ற பொருட்களின் மீது புளித்துப் போன இட்லி மாவை தடவி பத்து நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதில் இருக்கும் புளிப்பு தன்மை அழுக்குடன் சேர்ந்து ஊறும் பொழுது நமக்கு அவை எளிதாக நீக்குவதற்கு உதவியாக இருக்கும்.

idly-maavu

10 நிமிடம் கழித்து நீங்கள் கலந்து வைத்திருக்கும் டீத்தூள் நீரை இரும்பு நாரில் தொட்டு தொட்டு லேசாக அழுத்தம் கொடுத்து செய்தால் போதும், எவ்வளவு விடாப்பிடியான அழுக்குகளும் எளிதாக நீக்கிவிடும். மேலும் மீந்து போன டீத்தூளை உலர வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். புளித்துப் போன மாவுடன் 10 லிட்டர் அளவிற்கு தண்ணீர் கலந்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டையும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து செடிகளின் வேர்களுக்கு ஊற்றுங்கள், நல்ல சத்து கிடைத்து செடிகள் செழிப்புடன் வளரும். இவ்வளவு நன்மைகளை கொடுக்கக் கூடிய இந்த இரண்டு பொருளையும் இனியும் வீணாக்காதீர்கள்.

- Advertisement -