ஒருவர் அழகாக இருப்பதற்கு அவருடைய முகமும் தலையும் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. எந்த அளவிற்கு முகம் பளபளப்பாக இருக்கிறதோ அந்த அளவிற்கு தலையில் இருக்கக்கூடிய முடியும் பளபளப்பாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் முழுமையான அழகுடன் திகழ்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி இரண்டையும் பளபளப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வதற்கு உதவக்கூடிய ஒரு பொருளை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.
நாம் அடிக்கடி உபயோகப்படுத்தக் கூடிய இந்த பொருளை சிறிது நாட்கள் கழித்து வாடை வந்துவிட்டது என்று தூக்கி ஊற்றி விடுவோம். ஆனால் இதில் நம்முடைய சருமத்திற்கு நன்மைகள் தரக்கூடிய பல பாக்டீரியாக்கள் இருக்கின்றன. அந்த பொருள் தான் தயிர். தயிரை நாம் உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு பல நன்மைகள் ஏற்படும் என்றாலும் அந்த தயிரை நம்முடைய முகத்திலும் தலையிலும் தடவும் பொழுதும் நமக்கு அதிக அளவில் பலன்கள் ஏற்படுகிறது.
அதிலும் குறிப்பாக புளித்த தயிரை நாம் பயன்படுத்தும் போது அதன் பலன்கள் இன்னும் அதிகமாகவே தான் ஏற்படுகிறது. பொதுவாக அழகை மேம்படுத்துவதற்கு தயிரை பயன்படுத்துகிறோம் என்றால் அந்த தயிர் புளித்து இருக்க வேண்டும். அப்பொழுது அதன் பலன் நமக்கு அதிகமாகவே இருக்கும். ஏனெனில் புளித்த தயிரில் அதிக அளவு ஈஸ்ட் இருக்கும். இந்த ஈஸ்ட் ஆனது நம்முடைய சருமத்தில் இருக்கக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை நீக்கி நல்ல பாக்டீரியாக்களை அதிகப்படுத்தக்கூடிய தன்மை இருக்கிறது. அதனால் தான் நம்முடைய முகமும் தலைமுடியும் பளபளப்பாக திகழ்கிறது.
முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்கு புளித்த தயிருடன் கடலைமாவை கலந்து முகத்தில் நன்றாக தடவி ஐந்து நிமிடம் மசாஜ் செய்து விட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள் பிறகு முகத்தை கழுவுங்கள். இது எண்ணெய் சருமம் இருப்பவர்கள் செய்யக்கூடிய ஒரு அழகு குறிப்பு. இதே வறண்ட சருமம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் கடலைமாவிற்கு பதிலாக பச்சைபயிரை உபயோகப்படுத்தி முகத்திற்கு ஃபேஸ் பேக் போடலாம்.
இதே போல் இந்த ஃபேஸ் பேக்கையே நம்முடைய தலைக்கு ஹேர்பேக்காக பயன்படுத்தும் பொழுது நம்முடைய தலையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான அழுக்குகளும் நீங்குவதோடு நம்முடைய கூந்தலானது பட்டுப்போன்று மிளிர ஆரம்பிக்கும். பலரது இல்லங்களில் தயிர் புளித்து விட்டது என்ற ஒரே காரணத்திற்காக தூக்கி கீழே ஊற்றுவார்கள். அவ்வாறு கீழே ஊற்றுவதற்கு பதிலாக நம்முடைய முகத்திற்கு தலைக்கும் பயன்படுத்தும் பொழுது அவை மிகவும் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த பேக்கை நம்முடைய உடல் முழுவதும் போட்டு தேய்த்து குளித்தால் நம்முடைய உடல் முழுவதும் நல்ல பளபளப்பை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: எளிமையான அழகு குறிப்பு
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று கூறுவார்கள். அந்த வகையில் தேவையில்லை என்று நினைக்கக் கூடிய புளித்த தயிரும் நம் அழகை மேம்படுத்தும். முயற்சி செய்து பாருங்கள்.