இன்று பங்குனி மாதத்தை பிறை பிரதோஷம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் துன்பங்கள் எல்லாம் நம்மை விட்டு விலகிச் செல்ல வேண்டும் என்றால் இன்றைய தினம் அனைவரும் சிவன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இன்று மாலை, முடிந்தால் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். முடியாதவர்கள் வீட்டிலேயே இரண்டு வில்வ இலைகளை சிவபெருமானுக்கு அர்ச்சித்து, இந்த ஸ்லோகத்தை படியுங்கள்.
சிவபெருமானது திருவுருவப்படம் இல்லை என்றாலும், ஏற்றி வைத்திருக்கும் தீபம் தான் சிவபெருமான், ஏற்றி வைத்திருக்கும் தீபச்சடரை, சிவபெருமானாக பாவித்து இரண்டு வில்வ இலைகளை அந்த விளக்குக்கு சூட்டி, இந்த மந்திரத்தை படித்தால், லட்சம் அல்ல, கோடி வில்வ இலைகளை கொண்டு சிவபெருமானை பூஜித்த புண்ணியம் உங்களை வந்து சேரும். இந்த புண்ணியம் உங்கள் வம்சத்திற்கு நன்மையை கொடுக்கும். அப்பேர்ப்பட்ட அந்த ஸ்லோகத்தை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.
சிவன் ஸ்லோகம்
விபூதி சுந்தர மஹேஸ்வர ஹர
சிவசிவ ஹரஹர மஹாதேவ
வில்வதள ப்ரிய சந்திர கலாதர
சிவசிவ ஹரஹர மஹாதேவா
கங்காதர ஹர சாம்ப சதாசிவாய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
த்ரியம்பகாய லிங்கேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
மெளலீஸ்வராய யோகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
குஞ்சேஸ்வராய குபேராஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
நடேஸ்வராய நாகேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவ
கபாலீஸ்வரய்யா கற்கடேஸ்வராய
சிவசிவ ஹரஹர மஹாதேவா
போலோ ஹரஹர சிவசிவ மஹாதேவா !
அற்புதம் வாய்ந்த இந்த ஸ்லோகத்தை இன்றைய தினம் ஒரே ஒரு முறை படித்தாலும் கூட உங்களுக்கு சிவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். இந்த பூலோகத்தில் மனித பிறவி எடுத்து எதற்காக நீங்கள் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்களோ, அந்த கஷ்டத்தை தீர்க்கக் கூடிய வரத்தை சிவபெருமான் நிச்சயம் உங்களுக்கு கொடுத்து விடுவார்.
இதையும் படிக்கலாமே: தேய்பிறை பிரதோஷம் அதிசக்தி வாய்ந்த சிவ மந்திரம்
தீரா துன்பத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு இந்த ஸ்லோகம் நிரந்தர தீர்வை தேடி தரும். கோவிலுக்கும் போக முடியாது, வீட்டிலும் விளக்கு ஏற்றி வைத்து வழிபாடு செய்ய முடியாது என்றால் கூட ஒரு நிமிடம் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு, இந்த மந்திரத்தை சிவபெருமானை நினைத்து படித்து வேண்டுதல் வைத்தாலே போதும். உங்கள் பிரார்த்தனை நிறைவேறிவிடும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.