கர்ம சாந்தியடையவும், வருகின்ற புது வருடம் சிறப்பாக அமையவும் வருட இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி செய்ய வேண்டிய சிறப்பு பரிகாரம்

gaja-lakshm
- Advertisement -

மனிதன் மனம் என்பது எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அடுத்து என்ன செய்யலாம் என்பதை நோக்கி சென்று கொண்டிருக்கும். அப்படித்தான் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் இன்றைய நாள் இவ்வளவு துன்பமாக சென்றாலும் நாளை வருகின்ற நாலாவது நமக்கு நல்ல நாளாக விடியட்டும் என்றுதான் இரவு உறங்கும் முன்னர் அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பர். அப்படி ஒவ்வொரு வருடமும் அன்றைய இறுதி நாளில் இன்றைய வருடம் இத்துடன் முடிகிறது, வருகின்ற வருடமாவது நமக்கு இனிதாக துவங்க வேண்டும் என்று அனைவரின் மனதிலும் எதிர்பார்ப்பு இருந்து கொண்டிருக்கும். இப்படி என்றாவது ஒரு நாள் நமக்கு நல்ல காலம் பிறக்காதா என்றுதான் அனைவரும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். எனவே நமது கர்மவினைகள் தீரவும், புதிய வருடம் நமது வாழ்க்கைக்கு நன்மையாக அமையும் இந்த பரிகாரத்தை எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

எப்பொழுதும் வருடம் முதல் நாளில் ஒவ்வொருவரும் இன்றைய வருடம் இப்படித்தான் இருக்க வேண்டும், இந்த வருடத்திலிருந்து நான் இவற்றை மட்டும் தான் கடைப் பிடிக்கப் போகிறேன், எனது வாழ்க்கையில் நான் செய்து கொண்டிருக்கும் இந்த சிறு சிறு தவறுகளை இந்த வருடம் முதல் நான் விட்டு விடப் போகிறேன், என்று தங்களுக்கு தானாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்.

- Advertisement -

அப்படி ஒவ்வொரு வருடத்தின் இறுதி நாளையும், முதல் நாளைம் மக்கள் மிகவும் முக்கியமான தினமாக பார்க்கின்றனர். அப்படி விசேஷமான இந்த புதிய வருடம் துவக்கத்தை நாம் எப்படி வரவேற்கிறோமோ அப்படித்தான் நமது வாழ்க்கையிலும் நன்மைகள் உண்டாகும். அதற்காக நாம் செய்ய வேண்டிய சிறப்பு காரியங்கள் சில இருக்கின்றன. அவற்றை முறையாக செய்து பாருங்கள். உங்கள் மனது மிகவும் சந்தோஷத்துடனும், நேர்மறை எண்ணத்துடனும் இருக்கும்.

அதற்கு இறுதிநாளான அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேலாக இரவு 8 மணிக்குள் உணவு உண்பதை முடித்துவிட வேண்டும். பின்னர் இந்த உணவு ஜீரணம் ஆவதற்கு குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஆகும். எனவே இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு புனித நீராட வேண்டும். அதற்கு மூன்று பக்கெட் தண்ணீரை தனித்தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

முதல் பக்கெட் தண்ணீரில் கல் உப்பை கறைத்துக் கொள்ள வேண்டும். இரண்டாவது தண்ணீரில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் மற்றும் கிழங்கு மஞ்சளை அரைத்து சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு 3வது பக்கெட் தண்ணீரில் கொஞ்சம் பன்னீர், சிறிதளவு ஏலக்காய்த்தூள், சிறிதளவு வாசனைதிரவியம் மற்றும் 10 சொட்டு பசும்பால் சேர்க்க வேண்டும். பசும்பால் கிடைக்கவில்லை என்றால் வீட்டில் இருக்கும் பாலிலிருந்து பத்து சொட்டு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு முதலில் கல் உப்பு கலந்த தண்ணீரில் தலையிலிருந்து உடல் முழுவதும் ஊற்றவேண்டும். இரண்டாவதாக மஞ்சள் தூள் கலந்த தண்ணீரை ஊற்றவேண்டும். மூன்றாவதாக வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரை ஊற்றி முழுவதுமாக நீராடி முடிக்கவேண்டும். சோப்பு, ஷாம்பு எவற்றையும் பயன்படுத்தக் கூடாது.

பின்னர் கருப்பு இல்லாத உடையை அணிந்து கொண்டு, நேராக பூஜை அறைக்கு சென்று இறைவனிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். வருகின்ற வருடம் இனிமையாக அமைய வேண்டும், எனது குடும்பம் சிறப்பாக இருக்க வேண்டும், நல்ல வருமானம் இருக்க வேண்டும், இப்படி அனைத்தையும் நேர்மறையாக மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு மற்றவர்களுக்கு வாழ்த்து கூறலாமே தவிர எதிர்மறையான வார்த்தைகள் மற்றும் எண்ணங்களை சிந்தனை செய்வதும் கூடாது.

- Advertisement -