கோடி புண்ணியம் தரும் பிரதோஷ வழிபாடு

prathosa valipadu
- Advertisement -

சிவபெருமானின் முக்கிய வழிபாட்டு தினமான பிரதோஷ வழிபாடு இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதுவும் இந்த பிரதோஷம் வளர்பிறை பிரதோஷம். அதுவும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருப்பது மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த பிரதோஷ தினத்தில் சிவபெருமானை எளிமையாக நாம் வீட்டில் எப்படி வழிபட்டு புண்ணியத்தை சேர்க்கலாம் என்பதை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கோடி புண்ணியத்தை தரும் பிரதோஷ வழிபாடு
ஒவ்வொரு நாளுமே நான்கு முப்பதிலிருந்து ஆறு முப்பது மணி வரையிலான காலத்தை நித்திய பிரதோஷ காலம் என்று தான் சொல்வார்கள். பிரதோஷ தினம் மட்டுமின்றி எப்போதுமே இந்த நேரத்தில் நாம் வழிபடுவது மிகவும் சிறந்தது. ஆனால் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த நேரம் ராகு காலமாக இருக்கும். இந்த நேரத்தில் சிவபெருமானை நாம் வழிபடும் பொழுது ராகு கேது தோஷ பாதிப்பு இருந்தாலும் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

சரி இப்போது இன்றைய வளர்பிறை பிரதோஷத்தில் புண்ணியத்தை சேர்க்க நாம் எப்படி சிவபெருமானை வணங்க வேண்டும் என்று பார்க்கலாம். இந்த நேரத்தில் ஆலயம் சென்று வழிபட வாய்ப்பு உள்ளவர்கள் சிவ வழிபாட்டிற்கு முன்பு அபிஷேகம் செய்வார்கள். அப்படி அபிஷேகம் செய்வதற்கு நீங்கள் பன்னீரை வாங்கி கொடுக்க வேண்டும். இதன் மூலம் கோடி புண்ணிய பலனை பெறலாம். ஏனெனில் சிவபெருமான் அபிஷேக பிரியர்.

அப்படி ஆலயம் செல்ல முடியாதவர்கள் வீட்டிலே செய்வதாக இருந்தால் உங்கள் வீட்டில் எந்த வகையான லிங்கம் வைத்திருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளுங்கள். லிங்கத்திற்கு பிரதோஷ வேளையில் நீங்கள் செய்யும் மற்ற அபிஷேகத்துடன் பன்னீர் அபிஷேகத்தை கட்டாயமாக இன்றைய தினம் செய்ய வேண்டும்.அப்படி செய்த பிறகு சிவபெருமானுக்கு ஏதேனும் எளிமையான ஒரு நெய்வேத்தியத்தை வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

இந்த தீபம் ஏற்றி வழிபடும் போது நீங்கள் வடக்கு பார்த்து அமர்ந்து ஓம் நமச்சிவாயா என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்லுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். பிரதோச விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் பிரதோஷ காலமான நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையான நேரம் முடிந்த பிறகு நெய்வேத்தியத்தை உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். விரதம் இல்லாதவர்கள் பூஜை முடிந்தவுடன் சாப்பிடலாம்.

எங்கள் வீட்டில் எந்த விதமான லிங்கமும் இல்லை சிவபெருமான் படம் தான் உள்ளது என்று சொல்பவர்கள் படத்தை பன்னீரால் துடைத்து விட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு செய்யுங்கள். வீட்டில் படம் கூட இல்லை என்பவர்கள் உங்கள் வீட்டு பூஜை அறையை பண்ணீறால் துடைத்து விடுங்கள். சிவபெருமானை வழிபடும் அந்த நேரத்தில் பன்னீரின் மணம் கவிழ்ந்தாலே உங்கள் பூஜைக்கான பலனை நீங்கள் பெறலாம்.

ஒருவர் தன் வாழ்நாளில் புண்ணியத்தை சேர்க்க வேண்டும் எனில் எத்தனை சிரத்தையாக இருக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் பிரதோஷ வேளையில் சிவபெருமானுக்கு இப்படி ஒரு அபிஷேகம் செய்வதன் மூலம் பல வருடம் வழிபட்ட புண்ணிய பலனை பெறலாம் என்பது எத்தனை பெரிய விஷயம்.

இதையும் படிக்கலாமே: செல்வத்தை ஈர்க்கும் உணவுப் பொருட்கள்
 
இன்றைய அற்புதமான இந்த நாளை தவிர விடாமல் பயன்படுத்தி பலன் அடையலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த முறையில் சிவனும் அபிஷேகம் செய்து சிவபெருமானின் அருளையும் புண்ணியத்தையும் ஒரு சேர பெறலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -