வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த நன்மைகளை பெறுவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். அப்படி முயற்சிகளை மேற்கொண்டும் ஒரு சிலரால் அவர்கள் நினைத்த பலனை பெற முடியாமல் போயிருக்கும். இன்னும் சிலரோ எந்தவித முயற்சியும் செய்யாமல் எளிதில் அந்த பலனை பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். அப்படி எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதில் தாங்கள் நினைத்ததை அடைபவர்களுக்கு அதிர்ஷ்டம் அவர்கள் கூடவே இருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டத்தை பெறுவதற்குரிய புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை
ஒருவர் அதிர்ஷ்டசாலியாக வாழ வேண்டும் என்றால் அவருக்கு கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருள் வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளைப் பெற வேண்டும் என்றால் பெருமாளை வழிபாடு செய்வது மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட பெருமாளுக்குரிய புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை நாம் இரண்டே இரண்டு பொருட்களை மட்டும் வாங்கி வைத்து வழிபாடு செய்ய நாம் நினைத்தது போல் பெருமாளின் அருளாலும் மகாலட்சுமியின் அருளாலும் அதிர்ஷ்டம் நம்மை தேடி வர ஆரம்பிக்கும்.
இந்த இரண்டு பொருட்களையும் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருந்து கிளம்பி கடைக்கு சென்று வாங்கி வந்து வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொருட்களை வாங்குவதற்கு உகந்த நேரமாக இரண்டு நேரங்கள் திகழ்கின்றன. ஒன்று காலை ஏழு மணியிலிருந்து எட்டு மணி அல்லது மாலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்த பொருட்களை நாம் கடைக்குச் சென்று வாங்கி வர வேண்டும்.
பெருமாள் என்றதும் நம் நினைவிற்கு வருவது மங்களகரமான மஞ்சள் நிறம் தான். அதனால் மேற்சொன்ன இந்த குறிப்பிட்ட நேரத்தில் அருகில் இருக்கக்கூடிய கடைக்கு சென்று பேரம் பேசாமல் விரலி மஞ்சள் அல்லது குண்டு மஞ்சளை தங்களால் இயன்ற அளவு வாங்கிக் கொண்டு வர வேண்டும். அதோடு மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய மலர்களையும் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் பெருமாளுக்கு முன்பாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் பெருமாளின் அருளால் அதிர்ஷ்டம் நம்மை தேடி வரும். விரலி மஞ்சள் அல்லது குண்டு மஞ்சளை அன்றைய தினம் முழுவதும் பெருமாளின் பாதத்திலேயே இருக்கட்டும். மறுநாள் அதை நம்முடைய அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும் விநாயகர் மந்திரம்
பரம ஏழையாக இருப்பவர்கள் கூட இந்த இரண்டு பொருட்களையும் வாங்கி வந்து வீட்டில் வைத்து பெருமாளை வழிபாடு செய்ய அனைத்து விதமான செல்வங்களையும் அதிர்ஷ்டத்தையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.