இன்று புரட்டாசி முதல் நாள். செவ்வாய்க்கிழமை முருகனுக்கு உகந்த நாள், பௌர்ணமி திதியும் சேர்ந்து இருக்கிறது. அதி அற்புதம் வாய்ந்த இந்த நாளில் நாம் சொல்ல வேண்டிய ஒரு மகாலட்சுமி மந்திரத்தை பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்றைய தினம் மாலை நேரத்தில் சந்திர பகவான் உதயமாகும் சமயத்தில், இரண்டு கைகளையும் பார்த்து இந்த மந்திரத்தை சொல்லி வேண்டுதல் வைத்தால், உங்களுடைய பணப் பிரச்சனை கூடிய விரைவில் சரியாகிவிடும். இன்றைய தினம் உச்சரிக்க வேண்டிய மந்திரம் என்ன, ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.
புரட்டாசி மாதம் பணம் தரும் மந்திரம்
இன்று மாலை சந்திர தரிசனத்தின் போது இரண்டு கைகளையும் ஏந்தியபடி வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு உள்ளங்கைகளையும் நிலாவை பார்த்தவாறு ஏந்தியபடி இருக்க வேண்டும். ‘கமலவாஸின்யை நாராயண்யை கிருஷ்ண ப்ரியாயை நமோ நமஹ !’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பு.
வெட்ட வெளியில் மொட்டை மாடியில் பால்கனியில், இப்படி நிலவின் தரிசனம் உங்களுக்கு எந்த இடத்தில் எல்லாம் கிடைக்குமோ, நிலவு ஒளியின் பிரகாசம் உங்கள் மேல் விழும் படி நின்று கொண்டு இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இரண்டு கைகளை ஏந்தியபடி நின்று இந்த மந்திரத்தை சொல்லி முடித்துவிட்டு, உங்களுடைய இரண்டு கைகளையும் அப்படியே முகத்தில் வைத்து தேய்த்துக் கொள்ளுங்கள். அந்த சந்திர பகவானின் ஆசீர்வாதமும், பெருமாளின் ஆசீர்வாதமும் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், உங்களுக்கு பரிபூரணமாக கிடைத்துவிடும்.
அதிசக்தி வாய்ந்த நாளில் இந்த மந்திரத்தை சொல்லுவது ரொம்ப ரொம்ப நல்லது. அதேபோல இந்த புரட்டாசி மாதம் முழுவதும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை பார்த்து இந்த 1 வரி மந்திரத்தை வெறும் 3 முறை சொல்லி, உள்ளங்கைகளை முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். மகாலட்சுமி வாசம் உங்கள் உள்ளங்கையிலும் உங்களுடைய முகத்திலும் நிறைவாக இருக்கும்.
உங்களை பிடித்த தரித்திரம் எல்லாம் விலகி ஓடிவிடும். எவ்வளவு பெரிய பண பிரச்சனையாக இருந்தாலும் அதையெல்லாம் சரி செய்யக்கூடிய வாய்ப்புகள் இந்த மாதத்தில் உங்களைத் தேடி வரும்.
தாமரைப் பூவில் வசிக்கின்ற ஸ்ரீ மகாலட்சுமியே நமஸ்காரம். நாராயணனின் மனைவியே நமஸ்காரம். கிருஷ்ணனுக்கு பிரியமானவளே உன்னை வணங்குகின்றேன். இதுதான் இந்த மந்திரத்திற்கு உண்டான அர்த்தம்.
வேலை இல்லாமல் திண்டாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், தொழிலில் பிரச்சனை, லாபமே கிடைக்கவில்லை என்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல செல்வ கடாட்சம் உயர தொடங்கிவிடும். ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என்று இந்த பரிகாரத்தை யார் செய்தாலும் அவர்களுக்கு மகாலட்சுமி அம்சம் உண்டு என்று தான் சொல்ல வேண்டும்.
இதையும் படிக்கலாமே: வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற
அதிசக்தி வாய்ந்த மந்திரத்தை எவர் ஒருவர் இந்த புரட்டாசி மாதம் முழுவதும் உச்சரிக்கிறீர்களோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கஷ்டம் இருக்காது. நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான ஆன்மீகம் செல்லும் வழிபாட்டை பின்பற்றி பாருங்கள் உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது என்ற தகவலோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.