- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி பௌர்ணமி பரிகாரம்

புரட்டாசி பௌர்ணமி பரிகாரம்

- Advertisement -

நாளைய தினம் வியாழக்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கக்கூடிய பௌர்ணமி திதி. வியாழன் என்றால் குரு பகவான். நமக்கு பணத்தையும் நகையையும் அள்ளிக் கொடுக்கக் கூடியவர். பௌர்ணமி திதியில் மகாலட்சுமியை வழிபாடு செய்தால் நம் வீட்டில் செல்வம் பலமடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. வெற்றியை கொடுக்கக் கூடியது வெற்றிலை.

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் பெருமாள் என்றாலே அவர் பணம் கொடுக்கும் சாமிதான். இத்தனை சக்திகளும் ஒன்று சேரும் நாளில், நாளைய தினம் செய்ய வேண்டிய எளிமையான ஒரு ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பௌர்ணமி வெற்றிலை பரிகாரம்

நாளை மாலை 6 மணி அளவில் நிலவு உதயமாகும் சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்யவும். உங்கள் வீட்டில் வெட்ட வெளியாக இருக்கக்கூடிய இடத்தில் அமர்ந்து கொள்ளுங்கள். மொட்டைமாடி பால்கனியில் ஜன்னல் பக்கம் எந்த இடத்தில் அமர்ந்து செய்தாலும் சரிதான். சுத்தமான மஞ்சள் தூள் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மஞ்சளை விரலில் தொட்டு எழுதும் அளவுக்கு தயார் செய்து கொள்ள வேண்டும். ஒரு அழகான வெற்றிலை எடுத்துக் கொள்ளவும். உங்களுடைய வலது கை ஆள்காட்டி விரலால் இந்த மஞ்சளை தொட்டு வெற்றிலையில் மகாலட்சுமி தாயை மனதார நினைத்து ஒரு முறை ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை எழுத வேண்டும்.

- Advertisement -

வெற்றிலையை ஒரு தாம்பல தட்டில் மேல் வைத்து இந்த வார்த்தையை எழுதி விட்டு மகாலட்சுமியை நினைத்து இந்த ‘ஸ்ரீம்’ என்ற வார்த்தையை மனதிற்குள் மந்திரமாக ஜபிக்க வேண்டும். ஐந்து நிமிடம் ஆழ் மதனதில் மகாலட்சுமி நினைத்து இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.  மாலை 6 மணிக்கு மேலாக நாளைய தினம் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். அதற்காக இரவு 12 மணிக்கு செய்யாதீங்க. இரவு 9 மணிக்கு முன்பாக இந்த பரிகாரத்தை செய்து முடிக்கவும்.

அந்த நிலா ஒளியின் சக்தியும், வெற்றிலையின் சக்தியும், குரு பகவானின் சக்தியான மஞ்சளின் ஆற்றலும், ஒருசேர உங்களுக்கு கிடைத்துவிடும். (மேகமூட்டத்திற்கு இடையில் நிலவு தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை. அந்த சந்திர பகவானின் ஆற்றல் பூமியில் நிறைவாகத்தான் இருக்கும்.) வழிபாட்டை முடித்துவிட்டு இந்த தட்டை கொண்டு வந்து அப்படியே பூஜை அறையில் மகாலட்சுமி தாயின் முன்பு வைத்து விடுங்கள்.

- Advertisement -

வழக்கம் போல பூஜையறையில் விளக்கு ஏற்றி அலங்காரம் செய்து வைத்திருப்பீர்கள் அல்லவா. கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த மஞ்சள் சிறிது நேரம் காய்ந்த பிறகு வெற்றிலையோடு அப்படியே எடுத்து இதை திருந்தபடியே பீரோவில் வைத்து விட வேண்டும். பீரோவை மூடலாம். வெற்றிலையை திறந்தபடி பீரோவில் வைத்து விடுங்கள். (மனம் உருகி எங்கள் வீட்டில் மகாலட்சுமியின் வருகை இருக்க வேண்டும் நிறைய பணம் நகை சேர வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம்).

இதையும் படிக்கலாமே: ஐப்பசி மாதம் செய்ய வேண்டிய பரிகாரங்கள்

அவ்வளவுதான் பரிகாரம். மூன்று நாட்கள் கழியட்டும். வியாழன் வெள்ளி சனி முடிந்ததும், ஞாயிற்றுக்கிழமை இந்த வெற்றிலையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த இரண்டு நாட்களில் நிலா ஒளியின் ஆற்றல், மகாலட்சுமியின் ஆற்றல், குருபகவானின் அருள், புரட்டாசி என்பதால் பெருமாளின் ஆசியும் உங்கள் பீரோவுக்கு கிடைத்துவிடும். நீண்ட நாட்களாக பணமே சேராமல் இருந்த பீரோவில் கூட இனி வரக்கூடிய நாட்களில் நிறைய பணம் சேர தொடங்கிவிடும். நம்பிக்கை இருந்தால் இந்த வழிபாட்டை செய்து பலன் பெறலாம்.

சற்று முன்