- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி சதுர்த்தி திதி வழிபாடு

புரட்டாசி சதுர்த்தி திதி வழிபாடு

- Advertisement -

புரட்டாசி மாதம் வரக்கூடிய ஒவ்வொரு விசேஷ நாட்களும் அதி அற்புதமான பலனை கொடுக்கக் கூடியதுதான். அந்த வகையில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்து வளர்பிறை சத்துருத்தி திதியானது வரவிருக்கிறது. இந்த புரட்டாசி மாத மஹாளய அமாவாசை முடிந்து வரக்கூடிய சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபாடு செய்தால் நம் வாழ்க்கையில் இருக்கும் காரியத்தடை விலகும். வெற்றி மேல் வெற்றி நம்மை தேடி வரும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் விநாயகரை எப்படி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை படித்து தெரிந்து கொள்வோமா.

சதுர்த்தி திதி வழிபாடு

சதுர்த்தி திதியில் மாலை நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்வதுதான் சிறப்பு. வெற்றிக்கு உண்டான மாலை என்றால் அது வெற்றிலை மாலைதான். நாளைய தினம் 11 வெற்றிலை, 21 வெற்றிலை, 51 வெற்றிலை, உங்களுடைய விருப்பம் தான். வெற்றிலைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் கிழிசல் இல்லாத வெற்றிலையாக பார்த்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மஞ்சள் நிற நூலில் இந்த வெற்றிலையை மாலையாக கட்டிக் கொள்ள வேண்டும். அனுமனுக்கு மாலை கட்டுவது போல இந்த வெற்றிலையை சுருட்டாமல், அப்படியே விரித்து வைத்து அந்த காம்பு பகுதியில் மட்டும் மாலை தொடுத்து, வெற்றிலையை விரித்தபடியே விநாயகருக்கு சாத்துவதற்கு கொண்டு போக வேண்டும்.

உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கும் எந்த விநாயகர் கோவிலில் இருக்கும் சிலைக்கும் இந்த வெற்றிலை மாலையை சாத்தலாம். இந்த வெற்றிலை மாலையை விநாயகருக்கு சாத்திவிட்டு மூன்று தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையார் குட்டு வைத்துக்கொண்டு, விக்ணங்களை தீர்க்கும் விநாயகரே போற்றி போற்றி, என்னுடைய ‘கஷ்டங்களை நீ தான் தீர்த்து வைக்க வேண்டும், என்னுடைய வாழ்க்கையில் வெற்றி மேல் வெற்றிகள் குவிய வேண்டும்.

- Advertisement -

காரியத்தடை விலக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு, பிள்ளையாரை மூன்று முறை வளம் வந்து ஒரு சிகரு தேங்காயை உடைத்து விட்டு, வீடு திரும்பவும். வெற்றிலை வாங்கிக்கொண்டு செல்லும்போது மறக்காமல் விநாயகரை சாந்தப்படுத்த அருகம்புல்லையும் வாங்கிச் செல்லுங்கள். விநாயகர் வழிபாடு அருகம்புல் இல்லாமல் செய்வது அத்தனை சிறப்பு கிடையாது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர்க்கும் அன்னபூரணி வழிபாடு

அருகம்புல்லையும் ஒரு கட்டு வாங்கி கொண்டு போய் விநாயகரது பாதத்தில் செலுத்தி விடுங்கள். இவ்வளவுதான் வழிபாடு. நாளைய தினம் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் அனைத்தையும் தகர்க்கக் கூடிய வெற்றிலை மாலை உங்களுக்கு வெற்றியை தேடி தரும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்