பெருமாளுக்குரிய மாதமாக கருதப்படக்கூடிய புரட்டாசி மாதத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் பலரும் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்வார்கள். ஆனால் இந்த மாதம் முழுவதுமே பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளவில்லை புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வணங்கவில்லை என்று நினைப்பவர்கள் கூட பெருமாளுக்கு உரிய திதியான ஏகாதசி திதி அன்று அதுவும் புரட்டாசி மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய ஏகாதசி திதியை தவறாமல் வழிபாடு செய்தால் பெருமாளின் முழு அருள்பார்வையும் கிடைக்க பெற்று செல்வ செழிப்புடன் வாழ முடியும். அந்த பரிகார முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
புரட்டாசி வளர்பிறை ஏகாதசி பரிகாரம்
பொதுவாகவே புரட்டாசி மாதத்தில் பெருமாளை வழிபடாத நபர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் கூற வேண்டும். அதிலும் குறிப்பாக சனிக்கிழமையில் கண்டிப்பான முறையில் பலரும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளை நினைத்து வழிபாடு செய்வார்கள். அப்படி ஒரு வேலை பெருமாள் ஆலயத்திற்கு செல்லவில்லை பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ள இயலவில்லை என்று வருத்தப்படுபவர்கள் இன்று அதாவது அக்டோபர் மாதம் 13ஆம் தேதி புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி திதியை முறையாக பயன்படுத்தி பரிகாரம் செய்பவர்களுக்கு பெருமாளின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த பரிகாரத்தை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நாம் செய்யலாம். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு நாமம் இட்டு துளசி மாலையை அணிவிக்க வேண்டும். அல்லது இரண்டு துளசி இலைகளை அவருடைய பாதத்தில் வைக்க வேண்டும். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாளாலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசியை வாங்கிக் கொடுத்து வழிபாடு செய்வது என்பது சிறப்பு. பெருமாளின் படத்திற்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு ஒரு தட்டை எடுத்து அந்த தட்டில் நம்மிடம் இருக்கக்கூடிய தங்கம் எதுவாக இருந்தாலும் அதை வைக்க வேண்டும். நாம் உபயோகப்படுத்தும் தங்கம் தான் இருக்கிறது என்னும் பட்சத்தில் மஞ்சள் கலந்த தண்ணீரில் சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பொட்டு தங்கம் கூட இல்லை என்று நினைப்பவர்கள் வெள்ளியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் நாம் வைக்கக்கூடிய இந்த தங்கமும் வெள்ளியும் தான் நமக்கு பல மடங்கு பெருகும் என்று கூறப்படுகிறது. பிறகு இதனுடன் 11, 51, 101, 501 இவற்றில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் பணத்தை வைக்க வேண்டும். அடுத்ததாக இதில் உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய மூன்று ஏலக்காய்களை வைக்க வேண்டும். பிறகு பெருமாளுக்கு மிகவும் உகந்த பச்சை கற்பூரம் ஒரு சிறிய துண்டு வைக்க வேண்டும்.
இதை அந்த தீபத்திற்கு முன்பாக வைத்துவிட்டு பெருமாளையும் மகாலட்சுமியும் மனதார பணம் சேர வேண்டும், நகை சேர வேண்டும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று வழிபாடு செய்ய வேண்டும். பிறகு
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய
ஓம் ஸ்ரீம் ஸ்ரீயை நமஹ”
இந்த இரண்டு மந்திரத்தையும் முழுமனதோடு குறைந்தது பத்து நிமிடமாவது உச்சரிக்க வேண்டும். இப்படி உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனையா அனைத்தும் காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விடுங்கள். பிறகு இந்த தங்கம் அல்லது வெள்ளி இவற்றை எடுத்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். இதில் இருக்கக்கூடிய பணத்தை பணம் வைக்கும் இடத்தில் பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அதை செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஏலக்காய் மற்றும் பச்சை கற்பூரத்தை பணம், நகை வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்.
இந்த முறையில் பெருமாளை நினைத்து வளர்பிறை ஏகாதசி திதி அன்று நாம் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நமக்கு செல்வநிலை என்பது உயரும். தங்கம், வெள்ளி போன்றவை அதிக அளவில் சேர ஆரம்பிக்கும். அடமானத்தில் இருக்கக்கூடிய நகைகளையும் திருப்ப முடியும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்கலாமே:முயற்சிகள் வெற்றியடைய ராகு கால வழிபாடு
முழு நம்பிக்கையுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை ஏகாதேசியான இன்றைய நாளில் முழு நம்பிக்கையுடன் பெருமாளை நினைத்து இந்த பரிகாரத்தை செய்பவர்களுக்கு அந்தஸ்தான வாழ்க்கை அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.