புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை பெருமாள் வழிபாடு

thirupathi
- Advertisement -

“புரட்டாசி” மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் ஆகும். இம்மாதத்தில் திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் திருப்பதி பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபடுவதால் நமது கஷ்டங்கள் அனைத்தையும் புரட்டி போடும் மாதமாக புரட்டாசி மாதம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் எல்லாமே பெருமாளை வழிபடுவதற்குரிய புண்ணிய தினங்களாகும். அந்த வகையில் நாளைய தினமான சனிக்கிழமை புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையாக வருகிறது. இந்த கடைசி சனிக்கிழமையின் விஷேஷ அம்சங்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Tirupathi Perumal

வருடந்தோறும் திருப்பதியில் கோவில் கொண்டிருக்கும் பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து வழிபடுவது அனைவருக்கும் பெருமாளின் அருளை பெற்று தரும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது. புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் ஏதேனும் ஒன்றில் அனைவரும் தளிகை போட்டு திருமலை வழிபட வேண்டும். பிறப்பு, இறப்பு தீட்டுகள் இன்ன பிற காரணங்களை தவிர்த்து மற்ற சனிக்கிழமைகளில் தளிகை போட்டு வழிபட முடியாவிட்டாலும் கடைசி சனிக்கிழமையன்றாவது வீட்டில் பெருமாளுக்கு தளிகை போட்டு வழிபடுவது சௌபாக்கியங்கள் அனைத்தும் நிறையச் செய்யும்.

- Advertisement -

ஒவ்வொரு வருடமும் ஒரு முறை திருப்பதி ஏழுமலையானுக்கு பிரமோற்ஸவ பெருவிழா நடத்தப்படுகிறது. ஆனால் மூன்று வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு முறை பிரமோற்சவ விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டும் தற்போது இரண்டாவது பிரமோற்சவ விழா கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அப்படி நாளை திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்பவர்கள், நாளை மறுநாள் ஞாயிற்று கிழமை நடைபெறும் இரண்டாவது கருடசேவை விழாவையும் கண்டு பெருமாளை தரிசித்து வணங்கினால் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகள் அனைத்தையும் பெரிய திருவடியான கருடாழ்வார் திருமாலிடம் கொண்டு சேர்த்து உங்களுக்கு நன்மைகள் ஏற்பட செய்வார். ஒரே ஆண்டில் இரண்டு கருட சேவை நிகழ்ச்சிகளை கண்டு தரிசிப்பது இன்னும் சிறப்பானதாகும்.

Perumal

தேவியர்களின் வழிபாட்டிற்குரிய நவராத்திரி விழாவும் தற்போது நடைபெற்று வருவதால், நாளை திருமலை சென்று பெருமாளை வழிபட நினைப்பவர்கள், திருப்பதிக்கு அருகே இருக்கும் திருச்சானூரில் வீற்றிருக்கும் பத்மாவதி தாயாரை தரிசித்து விட்டு பின்பு, திருமலையில் இருக்கும் பெருமாளை வழிபட்டால் வேண்டுதலின் பலன் இரட்டிப்பாகும். திருப்பதி சென்று வழிபட முடியாதவர்கள் அவர்கள் ஊரிலேயே இருக்கும் பெருமாள் கோவிலில் லட்சுமி தேவி மற்றும் பெருமாளை வணங்கினாலும் மேற்கூறிய பலன்கள் ஏற்படும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
புரட்டாசி மாதத்தில் புது வீட்டில் குடியேறக்கூடாது ஏன் தெரியுமா

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have details of Purattasi sani pooja in Tamil. It is also also called as Puratasi valipadu in Tamil or Puratasi perumal valipadu in Tamil.

- Advertisement -