உங்க பர்ஸ்ல, பணம் செலவு ஆக ஆக மீண்டும், சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா? இத மட்டும் 11 நாள் உங்க பர்ஸ்ல வச்சு பாருங்க! அதுக்கப்புறம் பண மழைதான்.

purse-money

ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் கையில் இருக்கும் பர்ஸில் பணம் குறையாமல் இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். பணம் குறையாமல் இருக்க வேண்டும் என்றால், என்ன செய்வது? செலவு பண்ணாமல் பணத்தை அப்படியே வைத்திருக்க முடியாது. நாம் செலவு செய்யும் பணம் ஏதாவது ஒரு வகையில் மீண்டும் வருமானமாக நம்மிடமே வந்து விட வேண்டும். இதுதானே இயற்கையான சுழற்சி. நாம் சம்பாதிப்பதை நாமே வைத்துக்கொண்டால் பிறகு அதில் அர்த்தமே இருக்காது. நீங்கள் செலவும் செய்ய வேண்டும். அதே சமயம் வரவும் வரவேண்டும். அதற்கு நாம் இரண்டு பரிகாரங்கள் செய்யப் போகின்றோம்.

purse

இந்த இரண்டு பரிகாரங்களுமே சுலபமானவை தான். 11 நாட்கள் இப்படி செய்து பாருங்கள். உங்களுக்கு பரிகாரம் பலன் அளிக்கின்றது என்ற மனதிருப்தி இருந்தால், தொடர்ந்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். உங்கள் மனதிற்கு பிடித்தம் இல்லை என்றால், பரவாயில்லை! 11 நாட்களுக்குப் பின்பு, இந்த பரிகாரம் செய்வதை விட்டுவிடலாம். இதனால் எந்த ஒரு பாதிப்பும் உங்களுக்கு இருக்காது.

உங்களுடைய வீட்டில் செய்ய வேண்டிய முதல் பரிகாரம். உங்களுடைய வீட்டு நிலவாசலிலிருந்து, உள்ளே நுழையும்போது, உங்களுடைய இடதுகை பக்கம் இருக்கும் மூலையை, பணத்தை ஈர்க்கும் மூலை என்று சொல்லப்பட்டுள்ளது.    அதாவது உங்களுடைய வீட்டின் நில வாசப்படி, எந்த திசையை நோக்கி இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வீட்டின் உள் பக்கமாக நுழைகின்ற மார்க்கத்தில், உங்களது முகம் வீட்டிற்குள் நோக்கியவாறு இருக்க வேண்டும். அப்போது உங்களது இடது கைப்பக்கம் இருக்கக்கூடிய நிலைவாசல் கதவுக்கு பின்பக்கம் இருக்கக்கூடிய மூலையில் எப்போதுமே ஒரு சிறிய கண்ணாடி பவுல் அல்லது மண் பானையில் சில்லரை காசுகளை வைத்தால் நம்முடைய வீட்டில் பணப்பற்றாக்குறையானது வரவே வராது. (உங்களது நில வாசல்படிக்கு இடது பக்கம் கதவு இருந்தால், அது மூலை பக்கமாக வரும். கதவு வலது பக்கம் இருந்தாலும் பரவாயில்லை. இடதுபக்கம் இருக்கக்கூடிய இடத்தில் காசை வைக்கலாம்.)

sukku

உங்களால் இதுபோன்ற கிண்ணத்தில் வைக்க முடியவில்லை எல்லோரும் பரவாயில்லை. யார் கண்ணுக்கும் தெரியாமல் ஒரு பதினோரு ரூபாயாவது அந்த இடத்தில் வைப்பது நமக்கு அதிகப்படியான அதிர்ஷ்டத்தை தரும். இந்தப் 11 ரூபாயை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விட்டு, மீண்டும் அந்த இடத்தில் புதிய பணத்தை வைத்துக் கொள்ளலாம். தவறொன்றும் கிடையாது. இப்படி தொடர்ந்து செய்து வந்தால் உங்களுடைய வீட்டில் செல்வ வளம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.

- Advertisement -

அடுத்தபடியாக சிவப்பு நிற சிறிய சதுர வடிவில் இருக்கும் துணியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு சுக்கு துண்டையும் வைத்துக் கொள்ளலாம், அல்லது சுக்குத்தூளாகவும் வைத்துக் கொள்ளலாம். அதை மடித்து, பீரோவில் வைத்தாலும் உங்களுக்கு பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் மணி பர்சில் வைத்துக் கொண்டாலும் அதில் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

door

இந்த இரண்டு பரிகாரமும் சுலபமான பரிகாரங்கள் தான். பணத்தை ஈர்க்கும் சக்தி வாய்ந்த தாந்திரீக  பரிகாரங்களில் மேல் குறிப்பிட்டுள்ள இரண்டு பரிகாரங்களும் அடங்கியுள்ளது. நம்பிக்கையோடு செய்து பாருங்கள். 11 நாட்களில் நிச்சயமாக பலன் தெரியும். இந்த பரிகாரம் பலன் அளிக்கவில்லை என்ற எண்ணம் உங்களுக்குத் தோன்றினால், 11 நாட்களுக்குப் பின்பு, இந்த பரிகாரத்தை தொடர வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.

cash

பரிகாரத்தை செய்து பலன் அடைந்தவர்கள் இந்த பரிகாரத்தின் மூலம் தான் உங்களுக்கு பலன் கிடைத்தது என்று யாருக்கும் சொல்லக்கூடாது. பரிகாரத்தை வெளியில் சொல்லாம். நாம் எப்போதுமே நமக்கு கிடைத்த பலனை வெளியாட்களிடம் பகிர்ந்து கொள்ளக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.