பச்சை நிற குங்குமத்தை தினமும் நெற்றியில் இப்படி வைத்தால், உங்களை அதிர்ஷ்டம் தேடி வரும்.

green-kumkum2
- Advertisement -

பச்சை நிறம் என்பது குபேரருக்கு உரிய நிறமாக கூறப்படுகிறது. இந்த குங்குமம் குபேரரின் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும். பச்சை நிற கயிறு கட்டினாலும் நமக்கு அது அதிர்ஷ்டத்தை தேடித்தரும். பச்சை நிற கயிறு குபேரரின் கயிறு. தவிர இந்த பச்சை நிற குங்குமமானது பச்சையம்மன் கோவில் மிகவும் விசேஷம். பச்சையம்மன் கோவிலிலும் இந்த நிற குங்குமம் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டுகிறது. நம் நெற்றியில் வைக்கும் சாதாரண குங்குமத்தை போன்று இந்த பச்சை நிற குங்குமத்தையும் தினம்தோறும் வைத்துக்கொள்ளலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. குபேரருக்கு உரியதான இந்த பச்சை நிற குங்குமத்தை எப்படி பயன்படுத்துவது? எத்தனை நாட்கள் பயன்படுத்துவது? என்பதைப்பற்றிய சந்தேகங்களுக்கான தீர்வு தான் இந்த பதிவு.

green-kumkum

இந்த பச்சை நிற குங்குமம் குபேரரின் சன்னிதானத்தில், பச்சையம்மன் ஆலயத்திலும் கண்டிப்பாக கிடைக்கும். இந்த இரண்டு கோவில்களிலும் கொடுக்கப்படும் குங்குமத்தை தினம்தோறும் நெற்றியில் வைத்துக் கொள்வதில் எந்த ஒரு தவறும் இல்லை. இந்த கோவில்களுக்கு செல்ல முடியாதவர்கள் கூட, மஞ்சள் குங்குமம் விற்கும் கடைகளிலேயே இந்த குங்குமத்தை வாங்கிக்கொள்ளலாம். இப்படி பச்சைநிற குங்குமத்தை கடைகளில் வாங்குபவர்கள், உங்கள் வீட்டு பூஜை அறையிலோ அல்லது ஏதாவது ஒரு அம்மன் கோவிலிலோ சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து விட்டு அதன் பின் இந்த குங்குமத்தை நெற்றியில் தினம்தோறும் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

சிலருக்கு பல சந்தேகங்கள் எழும். பச்சை நிற குங்குமத்தை அனைவரும் வைத்துக் கொள்ளலாமா? அல்லது பச்சையம்மன் தெய்வத்தை குல தெய்வமாக வழிபடுபவர்கள் மட்டும்தான் வைத்துக் கொள்ள வேண்டுமா? அம்மன் பிரசாதம் எல்லோருக்கும் பொதுவான ஒன்று. ஆகவே பச்சை நிற குங்குமத்தை எந்த வித பயம் இல்லாமலும் அனைவரும் தினம்தோறும் நெற்றியில் வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.

pachai-amman

ஆனால், உங்கள் வீட்டில் இருக்கும் பச்சைநிற குங்குமத்தை, உங்கள் வீட்டு உறுப்பினர்கள் மட்டும் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு இந்த குங்குமத்தை கொடுக்கக்கூடாது. உங்கள் உறவினர்கள் ‘எனக்கும் இந்த குங்குமம் வேண்டும்’ என்று கேட்டாலும் கூட, எங்கு வாங்கினீர்களோ அந்த கடையின் முகவரியை சொல்லி விடுங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் பச்சை நிற குங்குமத்தை தானமாக அடுத்தவர்களுக்கு அளிப்பது சிறந்த முறை அல்ல.

- Advertisement -

பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து 41 நாட்கள் வைப்பது நல்ல பலனைத் தரும். 41 நாட்களுக்குள்ளேயே கூட, சில பேருக்கு மனதில் நினைத்த காரியங்கள் வெற்றி அடைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் வீட்டில் இருக்கும் எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தீர்க்கும் சக்தியானது இந்த குங்குமத்திற்கு உண்டு. நம்பிக்கையுள்ளவர்கள் சிலநாட்கள் நெற்றியில் வைத்து பரிசோதித்து பார்த்து விட்டு பின்பு கூட தொடரலாம். வீட்டிலிருக்கும் பணப் பிரச்சனை, மனக்கஷ்டம், உங்கள் குழந்தைகளுக்கு கல்வியில் தடை, கடன் தொல்லை, சண்டை சச்சரவுகள், திருமணத்தடை நீங்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எந்த ஒரு காரியமும் விரைவாக வெற்றி அடைய வேண்டுமென்றால் இந்த பச்சை நிற குங்குமத்தை தொடர்ந்து பயன்படுத்தலாம். குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் இப்படி வயது வரம்பு பார்க்க வேண்டாம். எல்லோரும் இந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொள்ளலாம். நம்பிக்கையுடன் ஒரு விஷயத்தை ஆரம்பித்து அதில் வெற்றி காண்பவர்கள் நிச்சயமாக அதிர்ஷ்டசாலிகள் தான்.

green-kumkum1

மாதவிடாய் காலங்களில் பெண்கள் இந்த குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்களது மோதிர விரலால் தான் குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். சிகப்பு குங்குமம் நெற்றியில் இருந்தாலும்கூட அதன் மேல் இந்த பச்சை நிற குங்குமத்தை வைத்துக்கொள்ளலாம். நெற்றிப்பொட்டுக்கு கீழ்ப்பகுதியில் தான் வைக்க வேண்டுமே தவிர, மேல்பகுதியில் குங்குமத்தை வைப்பது தவறு. எந்த குங்குமமாக இருந்தாலும் பெண்கள் பொட்டுக்கு கீழ்ப்பகுதியில் வைத்துக்கொள்ளுங்கள்.

- Advertisement -

ஆண்களாக இருந்தால், விபூதிக்கு கீழ் பக்கத்தில்தான் குங்குமத்தை வைக்க வேண்டும். அல்லது விபூதியில் மேலேயே குங்குமத்தை வைக்கலாம். விபூதி சிவனையும், குங்குமம் சக்தியையும் குறிக்கின்றது.

sivan-parvathi

இதைப்போல் கோவிலில் பிரசாதமாக தரப்படும் விபூதி, குங்குமம் சந்தனம் எதுவாக இருந்தாலும் உங்கள் வலது கைகளில் வாங்கி விட்டு, உடனே அதை இடது கையில் கொட்டி நெற்றியில் வைத்துக் கொள்வீர்கள். இதுதான் எல்லோரது பழக்கமும் கூட. ஆனால் இது தவறு. கையில் ஒரு பேப்பரை வைத்து அதன் மேல் கொட்டிதான் நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டுமே தவிர, இடது கையில் வைத்திருக்கும் இறைவனின் பிரசாதத்தை எடுத்து நேரடியாக நெற்றியில் வைக்கக்கூடாது என்று சொல்கிறது நம் சாஸ்திரம்.

இதையும் படிக்கலாமே
கொரானா வைரஸ் நம் நாட்டை விட்டு எப்போது விலகும்? ஜோதிடம் கூறும் தகவல் என்ன?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Pachai kungumam palangal in Tamil. Pachai kungumam in Tamil. Green colour kumkum benefits in Tamil. Pachai kumkum benefits in Tamil. Pachai nira kungumam.

- Advertisement -