கொரானா வைரஸ் நம் நாட்டை விட்டு எப்போது விலகும்? ஜோதிடம் கூறும் தகவல் என்ன?

- Advertisement -

2020-2021 ஆம் ஆண்டு வரை நாம் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது. நாம் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த பாதிப்புகள் அனைத்தும், நாம் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்று நினைத்துக் கொள்வோம். ஏனென்றால், வேறு வழியேல்லை. இந்த உலகத்தில், இயற்கையை விட பெரியது வேறு எதுவும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காக கூட, இயற்கை தன்னுடைய சுயரூபத்தை அடிக்கடி நமக்கு காண்பிக்கும். இந்த கொரானா வைரஸானது இயற்கையின் பாதிப்பாக இருந்தாலும் சரி, செயற்கையாக உருவாக்கப்பட்ட பாதிப்பாக இருந்தாலும் சரி. பிரச்சனை என்ற ஒன்று நமக்கு வந்துவிட்டது. எப்படி வந்தது என்பதை பற்றி ஆராய்ச்சி செய்யாமல், இதை எப்படி சரி செய்யலாம்? நம்மை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனை எப்போது நம்மை விட்டு நீங்கும் என்பதைப் பற்றி யோசிப்பதே நல்லது.

corona

நம்மையெல்லாம் மரண பயத்தில் தள்ளியிருக்கும், கண்ணுக்கு தெரியாத வைரஸானது 14-4-2020 சித்திரை மாதம் தொடங்கும் வரை, நம்மை மேலும் மேலும் அச்சுறுத்திக் கொண்டே தான் இருக்கும் என்று ஜோதிடர்களால் பஞ்சாங்கத்தைப் பார்த்து சொல்லப்பட்டு இருக்கிறது. ஆனால் 14-6-2020 வைகாசி மாதம் முடியும் போது நம் பிரச்சனைகளும் கண்டிப்பாக ஒரு முடிவுக்கு வரும் என்ற ஆறுதலையும் நமக்காக ஜோதிடம் சொல்லி இருக்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

- Advertisement -

அப்படி என்றால் இந்தக் காலகட்டம் வரை, பிரச்சனையை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் உள்ளதா? என்று பயந்து விட வேண்டாம். ஜோதிட ரீதியாக பிரச்சனைகள் வரும் என்று சொல்லப்பட்டாலும், இந்த பிரச்சனைகளை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளும் சக்தியும் மனிதர்களிடம் அதிகமாகவே உள்ளது.

Nakshatra

பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டால் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்கூட்டியே மேற்கொள்ளலாம். மக்களை பிரச்சனையிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் ஒருபக்கம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதேபோல் தான் ஜோதிடமும். பின் நாட்களில் வரக்கூடிய பிரச்சினைகளை முன்கூட்டியே தெரியப்படுத்துகிறது என்பதை கருத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சரி. வரக்கூடிய நாட்களில் சாதாரண மனிதர்கள் தங்களுடைய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது? இந்த கொரானாவில் இருந்து தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ள, சமூக ஒற்றுமையோடு, அரசு என்ன சொல்கிறதோ, அதை கேட்கவேண்டும். இதுதவிர அவரவர் உடலை ஆரோக்கியத்துடனும் கவனத்துடனும் பாதுகாத்துக் கொள்வது அவரவர் கடமை.

nelli juice

நம்மை நாமே ஆரோக்கியத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது மிக அவசியம். உங்களால் முடிந்தவரை குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தவர்களுக்கு நெல்லிக்காய், தக்காளி, கொய்யா பழம், போன்ற விட்டமின் C, சத்து அதிகம் உள்ள பொருட்களை சாப்பிட கொடுக்கலாம். இதை சாப்பிட்டால் கொரானா வராதா! என்ற கேள்வியெல்லாம் கேட்காதீர்கள். இதை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எந்தவிதமான வைரசும் நம்மை சுலபமாக தாக்க முடியாது.

- Advertisement -

அதிகப்படியானவர்களின், கைகளில் சென்று புழங்கி விட்டு, நம் கைகளுக்கு வரக்கூடியது தான் ரூபாய் நோட்டு. இந்த நோட்டை நீங்கள் வெளி இடங்களில் இருந்து உங்கள் வீட்டிற்கு எடுத்து வந்தால் 24 மணி நேரம் காற்று போகாத கவரில் கட்டி ஓரமாக வைத்து விடுங்கள். அதன் பின்பு உங்களது கையை நன்றாக சோப்பு போட்டு கழுவுவது மிக நல்லது.

sivan-4

எல்லா பிரச்சினைக்கும் தீர்வு இறைவழிபாடு தான். இறுதியாக இறைவனின் காலடிகளில் விழுவது தான் தீர்வு. இந்த பதிவின் மூலம் இறைவனின் பாதங்களை எப்படி சரணடைவது என்பதையும், பார்த்துவிடலாம். அப்பரின் துன்பத்தை நீக்கிய சிவபெருமானின் பெருமையை கூறும் பதிகம் தான் இது. எப்படிப்பட்ட, கழுத்தை நெறிக்கும் பிரச்சனை இருந்தாலும் இந்த பதிகத்தை தினம்தோறும் ஒரு முறையாவது வாசித்தால் அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்பதுதான் உண்மை. உங்களுக்கான பதிகம் இதோ..

திருமுறை பதிகம்:
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈச னெந்தை யிணையடி நீழலே.

கொரான வைரசால் மனபயம் அதிகம் உள்ளவர்கள், இந்த பதிகத்தை தொடர்ந்து படித்து வந்தால் மிகவும் நல்லது.

Coronavirus1

வாழ்க்கை இவ்வளவு தான். எது வந்தாலும் சமாளித்து விடலாம், என்ற கர்வத்தை அடக்க இயற்கை ஆடும் கோரத்தாண்டவம் தான் இது. எல்லோருடைய ஆணவத்தை அழிக்கின்றது. நமக்கு மேல் ஒருவன் இருக்கின்றான் என்பதை உணர்த்துவதற்காகவே இந்த சோதனை.

‘சூழ்நிலை காரணமாக எத்தனையோ பேர் வெளிநாடுகளில் மாட்டிக் கொண்டிருக்கும் நிலைமை இருக்கின்றது. இதில் பல பேர் வேலைக்காக சென்றவர்கள். இன்று அவர்கள், அங்கு நிம்மதியாக இருக்கவும் முடியாமல், நாடு திரும்பவும் முடியாமல், அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை நினைத்து, அவர்களின் உறவினர்கள், இங்கு நம் நாட்டில் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.’ இப்படிப்பட்டவர்களின் வேண்டுதலுக்காவது அந்த இறைவன் மனம் இரங்க மாட்டாரா? நம்பிக்கைதான் வாழ்க்கை. சீக்கிரமே இந்த பிரச்சனையிலிருந்து மீண்டு வந்துவிடலாம். கவலைப்படாதீர்கள். நம்பிக்கையோடு இருப்போம்.

இதையும் படிக்கலாமே
அமாவாசை இரவு, இந்த 4 தீபத்தை ஏற்றினால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது உறுதி.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have When coronavirus will stop. When coronavirus end. Coronavirus astrology predictions. Coronavirus astrology.

- Advertisement -