உங்கள் முன்னேற்றத்தை தடுக்கும் தடைக்கற்களை படிக்கற்களாக மாற்ற, வாஸ்துபடி உங்கள் படுக்கைக்கு கீழே இந்த பொருட்களை எல்லாம் வையுங்கள்!

sani-silver

வாஸ்துபடி நீங்கள் சில விஷயங்களை செய்யும் பொழுது வாழ்க்கையில் சில மாற்றங்களும் நிகழும் என்பது ஜோதிட நம்பிக்கை. அதனால் தான் வாஸ்துப்படி சில விஷயங்கள் உங்களை சுற்றி தவறாக அமைந்து இருக்கும் பொழுது உடனே அதை சரி செய்வதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்கிறோம். அந்த வரிசையில் வாஸ்துவில் இந்த விஷயங்களை படுக்கைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்கினால் கிடைக்கும் பலன்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

sad-crying4

ஒரு சிலர் என்னதான் விடாமுயற்சியை கொடுத்துக் கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு அடிமேல் அடி விழும். ஒரு அடி எடுத்து வைத்தால், இரண்டு அடி சறுக்கி விடுவார்கள். முன்னேற்றம் என்பதற்கு தடைக்கற்களாக இருக்கும் துரதிர்ஷ்டத்தை நீக்க உங்களுடைய படுக்கைக்கு கீழே வெள்ளியினால் செய்யப்பட்ட மீன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். 21 நாட்கள் இவ்வாறு செய்ய மெல்ல மெல்ல நல்ல ஒரு முன்னேற்றத்தையும், அதிர்ஷ்டத்தையும் காணலாம்.

இரவு தூங்கும் பொழுது உங்களுக்கு மனதில் பல விதமான குழப்பங்களும், கெட்ட சிந்தனைகளும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் பொழுது நிம்மதியான தூக்கம் என்பது இருப்பதில்லை. ஏதாவது ஒரு பிரச்சினையைப் பற்றி மனதில் போட்டு குழப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்ந்த தூக்கம் என்பது பலருக்கும் வருவதில்லை. இப்படியானவர்கள் தங்களுடைய மன வலிமையை அதிகரித்துக் கொள்ள ஆழ்ந்த தூக்கம் பெற தொடர்ந்து 21 நாட்கள் வெள்ளியாலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதை உங்களுடைய கட்டிலுக்குக் கீழே வைத்துக் கொண்டு பின்னர் தூங்கச் செல்லுங்கள்.

silver-bowl

வாழ்க்கையில் தோல்வியை அதிகமாக சந்தித்தவர்கள், சந்தித்துக் கொண்டு இருப்பவர்கள், அதிகமாக கோபப்படுபவர்களாக இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் கோபம், வெறுப்பு, விரக்தி என்று அவர்கள் அவர்களின் சுயத்தை இழந்து காணப்படுவார்கள். இத்தகையவர்கள் செம்பு பாத்திரத்தில் இதேபோல தண்ணீரை நிரப்பி படுக்கைக்கு கீழே வைத்துக் கொண்டு தூங்கினால் நல்ல ஒரு மாற்றம் நிகழும். அதிகமான கோபத்தினால் பல உறவுகளை இழந்தவர்கள் சந்தன கட்டையை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு உறங்கினால் கோபம் நீங்கி சாந்தமாக மாறிவிடுவார்கள்.

- Advertisement -

வெள்ளி எனும் உலோகம் தங்கத்தை விட மலிவானது என்றாலும் அதிர்ஷ்டமான பொருட்களில் முதன்மையாக விளங்குவது இது தான் என்று கூறினால் அது மிகையாகாது. வெள்ளி பொருட்களை ஏதாவது ஒரு வகையில் உடம்பில் ஒருவர் கட்டாயம் அணிந்து கொண்டிருந்தால் அவர்களிடம் நிச்சயமாக நேர்மறை ஆற்றல் அதிகமாக காணப்படும்.

sani-baghavan

வீட்டில் கெட்ட சக்தி, தீய அதிர்வலைகள் இருப்பதாக நீங்கள் உணரும் பொழுது உங்களுடைய படுக்கைக்கு கீழே இரும்பு உலோகம் கொண்ட பாத்திரத்தில் சுத்தமான நீரை நிரப்பி வைத்துக் கொண்டால் அத்தனையும் ஒழியும். உங்கள் மேல் பொறாமை கொண்டவர்கள், திருஷ்டி வைத்தவர்கள் அத்தனை பேரினுடைய திருஷ்டிகளும் காணாமலே போய்விடும். இரும்பு என்பது சனி பகவானுக்கு உரிய உலோகம் என்பதால் மிகவும் சக்தி வாய்ந்தது.

blue sapphire

அதே போல சனி பகவானுக்கு உரிய நீல நிறக் கற்களை தலையணைக்கு அடியில் வைத்துக் கொண்டு 21 நாட்கள் வரை படுத்தாலும் உங்களுடைய எல்லா பிரச்சனைகளும் முடிவுக்கு வரும். வெண்கல உலோகப் பாத்திரத்தில் 21 நாட்களுக்கு ஒரு சுத்தமான தண்ணீரை நிரப்பி இதே போல உங்களுடைய படுக்கைக்கு கீழே வைத்து கொண்டு தூங்கி பாருங்கள் எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் அது சுலபமாக நீங்கி விடும்.