இன்று (16/4/2021) பெயர்ச்சியாக இருக்கும் புதன் பகவான்! 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன்களைக் கொடுக்க போகிறார்?

puthan-astro

ஒவ்வொரு மாதமும் கிரக பெயர்ச்சிகள் நடப்பது உண்டு. அதில் குரு பெயர்ச்சி சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி நடக்கும் பொழுது சிறப்பாக பரிகாரங்களும் பூஜைகளும் செய்வது உண்டு. ஆனால் மற்ற கிரகங்கள் பெயர்ச்சியாகும் பொழுது அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. ஆனால் ஒவ்வொரு கிரக பெயர்ச்சியின் பொழுதும் ஒவ்வொரு பலன்கள் நமக்கு கிடைக்கும். அதில் இன்று இரவு 9:05 மணிக்கு மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கும் புதன் பகவான் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன மாதிரியான பலன்களை கொடுக்கப் போகிறார்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

மேஷம்
Mesham Rasi
கல்வி ஞானம் மனோபலம் செல்வம் ஆகியவற்றை வாரி வழங்கும் புதன் கிரகம் மேஷ ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருப்பதால் மனதில் இருக்கும் உளைச்சல் குறையும். இதுவரை உங்களை அழுத்திக் கொண்டிருந்த மன பாரங்கள் நீங்கும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்..

ரிஷபம்
Taurus zodiac sign
சூரியனை நட்பு கிரகமாக கொண்டவர் புதன் பகவான் அவர் உங்கள் ராசியிலிருந்து பன்னிரண்டாம் இடத்தில் சஞ்சாரம் செய்வதால் எவ்வளவு தடைகள் வந்தாலும் அவற்றை தாண்டி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் இணக்கமான சூழ்நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து முன்னேற்றம் காண்பீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்கு புதன் பெயர்ச்சியானது மன வலிமையை அதிகரிக்க செய்யும். சந்திரனை பகை கிரகமாக கொண்ட புத பகவான் உங்கள் ராசிக்கு பல்வேறு வகையில் அதிர்ஷ்டங்களை கொடுப்பார். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனுகூலமான பலன்களை கொடுக்க செய்யும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சிக்குப் பிறகு இம்மாதம் முழுவதும் சிறப்பான பலன்களை பெற இருக்கிறீர்கள். உங்கள் ராசிக்கு பகை கிரகமாக புதன் இருப்பதால் சில சங்கடங்களை கொடுத்து பின் யோகங்களையும் வாரி வழங்குவார். வருமானம் ஈட்டுபவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவார்கள்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி நல்ல பலன்களைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முதலீடுகளை தவிர்த்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்கோபத்தை கட்டுப்படுத்தி பொறுமை காப்பது மன அமைதிக்கு வழிவகுக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி இனிமையான பலன்களைக் கொடுக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூல பலன் காணலாம். உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணலாம். கணவன் மனைவி உறவில் இனிமை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பாகவே அமையும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்கள் முதல் பெயர்ச்சியால் நிறைய நன்மைகளைப் பெறுவீர்கள். இம்மாதம் முழுவதும் உங்களுக்கு தீட்டிய திட்டங்கள் யாவும் எண்ணியபடியே நிறைவேறும். எல்லா விஷயங்களிலும் ரகசியம் காப்பது நல்லது. தேவையற்ற நபர்களிடம் உங்களைப் பற்றிய உரையாடலை தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் கோபத்தை குறைத்து கனிவுடன் பேசுவது மன அமைதிக்கு வழிவகுக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசி காரர்களுக்கு புதன் பகவான் பெயர்ச்சியாகும் பொழுது இதுவரை இருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சினைகள் மேலும் வலுவாகும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்து சென்று விடுவது நல்லது. வெளி நபர்களிடம் அதிகம் பேச்சுவார்த்தையை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு தெளிவான சிந்தனை வலுவாகும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி சிறப்பான பலன் தரும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் மதிப்பு உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூல பலன் உண்டு. லாபம் தரும் அமைப்பாக இருந்தாலும் பண ரீதியான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்
Magaram rasi
மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகும் புத பகவான் மகர ராசிக்கு சங்கடங்களை கொடுத்தாலும் வெற்றியில் குறைவு வைக்க மாட்டார். மனோபலம் மேலும் மேலும் அதிகரிக்கும். உங்களை வீழ்த்த நினைப்பவர்களை எளிதாக சமாளித்து விடுவீர்கள். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் நேரத்தை செலவிடும் வாக்கியம் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளுடன் இணக்கமாக செயல்படுவீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்கு புதன் பெயர்ச்சி அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். இன்று இரவுக்குப் பிறகு தொலை தூரத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அடுத்தவர்களை விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். மனதிற்கு பிடித்தவர்கள் மன சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. விட்டு கொடுப்பவர் கெட்டு போவதில்லை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்கு புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களைக் கொடுக்கும். மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆக இருப்பதால் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த குறைபாடுகள் நீங்கும். கடமையே கண் கண்ட தெய்வமாக நினைத்து இம்மாதத்தை கடந்துவிட்டால் யோகம் உண்டு.